கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

அன்பு பாரதி, அஸ்வதா உங்களது விடைகளில் ஓரிரு விடைகள்தான் சரியானவை
விடையை நான் கூறுகிறேன்.
மனிதனின் வயிற்றை நிரப்புவதில் சிறந்ததாகக் கூறப்படுவது பூமிதான்.
ஏனென்றால் இந்த பூமியில் இருந்துதான் அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற முடிகிறது.
அதனால்தான் பூமாதேவி என்றும், பூமித்தாய் என்றும் கூறுகிறோம்.

வேகமாகச் செல்லக்கூடியது மனிதனின் சிந்தனை ஒன்றுதான். அதன் வேகத்துக்கு ஈடாக எதையுமே கூற முடியாது.

மனிதனுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது தூக்கம்தான்.
ஏனென்றால், மனிதன் தூக்கத்துக்காக எதையுமே இழக்கத் தயாராக இருப்பான்
அடுத்த புதிர்........ இந்தப் புதிரின் தொடர்ச்சிதான். பார்க்கலாமா?

தம்பி கூறிய எல்லா விடைகளையும் சரி என்று ஒத்துக்கொண்டான் அரசன்.
பசு மாட்டை அவனுக்கே தருவதாகவும் கூறினான்.
மிக்க நன்றி என்று புறப்பட்ட தம்பியை நிறுத்திய அரசன், " என் கேள்விகளுக்குச் சரியான விடையை எப்படித் தெரிந்துகொண்டாய்? நிச்சயமாக யாரோ உனக்கு உதவியிருக்கிறார்கள். அது யார் என்று சொல்" என்று கேட்டான்.
தம்பியும் வேறு வழியில்லாமல் தனது மகள்தான் இந்த விடைகளைக் கூறியதாகத் தெரிவித்தான்.
அரசனுக்கு ஒரே வியப்பு. அத்துடன் பொறாமையும் சேர்ந்து வந்தது. ஒரு ஏழை உழவனின் மகள் இத்தனை அறிவுடன் இருப்பதா? என்று நினைத்து, அந்தப் பெண்ணை எப்படியாவது அடக்கவேண்டும் என்று தீர்மானித்தான். அதனால் தம்பியைப் பார்த்து, "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல்.....ஆனால் அவள் வரும்போது,
செருப்பு அணிந்தும் வரவேண்டும் அணியாமலும் வரவேண்டும்.
அவள் எனக்கு பரிசு கொடுத்தும் இருக்கவேண்டும் . கொடுக்காமலும் இருக்கவேண்டும்.
இப்படி அவள் செய்தால் உங்களுக்குப் பெரும் பொருள் தந்து சிறப்பிப்பேன். செய்ய முடியாவிட்டால், இருவரையும் தூக்கில் போடுவேன்" என்றான்.
தம்பி மனம் பதைபதைக்க வீடு திரும்பினான். மகளிடம் அரசனின் உத்தரவைக் கூறினான்.
மகளோ, " அப்பா....நீங்கள் கவலையே அடையவேண்டாம். அந்த அரசனை நாளை அவர் கூறியபடியே சென்று சந்தித்து வருகிறேன்" என்றாள்.
மறுநாள் அரசனுடைய நிபந்தனைகளின்படியே சென்று அரசனைப் பார்த்து பெரும் பரிசுகளையும் வாங்கி வந்தாள்.

அவள் எப்படி இதைச் சாதித்தாள்??????

( நான் ஒரு கொண்டாட்டத்துக்காக வெளியில் செல்ல இருப்பதால் நாளை வந்து உங்கள் பதில்களைப் பார்க்கின்றேன். தோழிகளே........)

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

1 பதில்" ஒரு காலில் செருப்பு அணிந்து மறு காலில் செருப்பு அணியாமலும் "

2 பதில் "பரிசு பெட்டியை கொடுத்தும் ஆனால் உள்ளே பரிசு ஏதும் இல்லாமல் "

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, முயற்சிக்கு நன்றி, எனது பதிலையும் பாருங்கள்.

தம்பியின் மகள், மறுநாள் காலையில் அரண்மனைக்குப் புறப்படும் முன்பாக வீட்டில் இருந்த ஒரு சிட்டுக்குருவியின் கூட்டில் இருந்து ஒரு குருவியைப் பிடித்து, தனது கையில் பொத்தி வைத்துக்கொண்டாள். அரண்மனைவரை இரு கால்களிலும் செருப்பு அணிந்திருந்தாள். அரண்மனை வாசலிலேயே ஒரு கால் செருப்பை மட்டும் கழற்றி வைத்துவிட்டு, அரசவைக்குள் நுழைந்தாள்.
அவள் இப்போது அரசனின் நிபந்தனையின்படி, செருப்பு அணிந்தும் இருக்கிறாள். அணியாமலும் இருக்கிறாள். அவள் வந்ததுமே அரசன் அதைக் கண்டு கொண்டான். அவள் நேராக அரசனிடம் சென்று வணங்கி, தனது கையில் பொத்தி வைத்திருந்த சிட்டுக்குருவியை, கையைத் திறந்து காட்டாமலேயே, " அரசே ....இந்த ஏழையின் பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றபடி அரசனிடம் கையை நீட்டினாள். அரசனின் கரமும் என்ன பரிசு என்று தெரியாமலேயே, அதைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டது..
அவள் கையில் பொத்தி வைத்திருந்த சிட்டுக்குருவியை அரசனது கையில் வைத்தாள். அதனால் அரசனது நிபந்தனைப்படி, அவள் அரசனுக்குப் பரிசு கொடுத்துவிட்டாள். அது சிட்டுக்குருவி என்று தெரியாததினால் கொஞ்சம் எச்சரிக்கையில்லாமல் அரசன் இருந்ததினால், அவனது கையில் இருந்து குருவி பறந்து போய்விட்டது. இப்போது அரசனின் நிபந்தனைப்படி, அவள் பரிசு கொடுத்தும் அவனுக்குக் கிடைக்காமல் போய்விட்டதல்லவா?
அரசன் அவளது புத்திக் கூர்மையை வியந்து, அவளுக்கு நிறைய பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தான்........
அடுத்த புதிரை இன்னொரு பக்கத்தில் பார்ப்போம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்