தாலாட்டு பாடல்கள் பற்றி ஒரு அலசல்...

தோழிகளே... என்னமோ தெரியல,திடீர்னு தாலாட்டு பாடல்கள் மேல ஒரு ஆர்வம்... அதை பற்றி நம் தோழிகளுக்கு நிறையா தெரிஞ்சு இருக்குமேனு இந்த இழையை தொடங்கினேன்... உங்களுக்கு தெரிந்த தாலாட்டு பாடல்கள்(பாடல் வரிகளோட) வந்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே... அதோட மட்டுமில்லாமல் தாலாட்டு பாடல்கள் பாற்றிய உங்களுக்கு தெரிந்த விஷயங்களயும் சொல்லுங்கள்...

குட்டி கிருஷ்ணர் பிடிக்காத ஆள் யாராச்சும் இருப்பாங்களா?... கிருஷ்ணர் பாடல்கள்-ல இந்த தாலாட்டு மிக மிக அருமையா இருக்கும்... இதோ அதோட வரிகள்... இந்த லின்க்-யில் அதோட வீடியோ-வை பார்க்கலாம்...
http://indianfilmsongs.blogspot.com/2008/01/aayarpadi-maaligaiyil-hindu-devotional.html

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...
அவன் வாய்நிறைய மண்ணையள்ளி மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
(ஆயர்பாடி)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி)
நாகப்பதம் மேதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொன்டான் தாலேலோ- அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காற்றினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைக் காண்பதர்கும் போதை முத்தம் கேட்பதர்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

ஹாய் சரண்யா
நிஜமாவே ரொம்ப ஆனந்தமா இருக்கும் இந்த பாடல் கேட்க & பாடவும் .
நான் கர்ப்பமா இருந்தப்பொழுது இந்த பாடல் அதிகமா கேட்பேன். என் பொன்னை தூங்க வைக்கும் போது கூட இந்த பாடல் தான் பாடுவேன்.
குட்டி கிருஷ்ணனோட லீலைகல கேட்க ரொம்ப அருமையா இருக்கும்.

என் குழந்தை கூட இந்த பாடலுகு அடிமை. அவள் 4 மாதம் முதல் இந்த பாடலை கேட்கிறாள். எவ்வளவு அடம் பிடிதாலும் இந்த படலை கேட்டவுடன் மயங்கிவிடுவாள். இப்போ அவள் 1.1/2 வயது இன்று வரை அவள் இந்த படலை விரும்பி கேட்பாள். மிகவும் இனிமையான பாடல். அதே போல் "கற்புர பொம்மை" இந்த படலும் இனிமையான ஒன்று.

சரண்யா சூப்பர ஒரு த்ரெட் ஆரம்பிச்சு இருக்காங்க. நம்ம அறுசுவைல நிறைய அம்மாக்கள், பாட்டிகள் இருக்காங்க. அவங்களாம் எப்படி தங்கள் பிள்ளைகளை, பேரபிள்ளைகளை தூங்க வைக்கிறீங்க என்னலாம் பாட்டு பாடுறீங்கனு அந்த வரிகளையும் இங்கே பகிர்ந்துக்கலாமே. அது ஆராரோ ஆரிராரோவா இருந்தா கூட பரவாயில்லை பகிர்ந்துகளேன் இங்கே வந்து வருங்கால அம்மாக்கள் எல்லாரும் கத்துப்பாங்கள்ல.
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ...........

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கமே
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ...........

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடம் நீ பாடம்மா நீ பாடம்மா

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இது.

தோழிகளே!

நான் என்க்கு தெரிந்த தாலாட்டு பற்றிய செய்திகளை உஙகளுக்கு சொல்கிறென் ... தாலாட்டு என்றால் என்ன? என்று உஙகளுக்கு தெரியுமா? "தால்" என்றால் நாக்கு. "ஆட்டு" என்றால் ஆட்டுதல் என்று அர்த்தம்... நம்மோட நாக்கை நல்லா ஆட்டி பாடுற பாட்டு தான் தாலாட்டு... இது நான் படித்த போது என் டீச்சர் சொன்னது....

காயத்ரி

Be Honest

பாட்டு துக்கப்பாட்டாக இருந்தாலும் என்னை நெகிழவைத்த பாடல். கேட்கும் போதே கண் கலங்கும் பாடல்....

ஆராரிரோ பாடியதாரோ.... தூங்கிப்போனதாரோ யாரோ யாரோ...... (செவாளியே சிவாஜி படத்தில் வந்த பாடல் )

இந்த பச்சக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைதேன் ----வரலக்ஷ்மி அம்மா பாடினது நன்றாக இருக்கும். (MGR song)

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

பாடல்கள் நன்றாக உள்ளன. பாராட்டுகள் சரண்யா.
பலவருடங்களுக்குமுன் நானும் இதுபோல் பல பாடல்களை கேட்டிருக்கின்றேன். அவற்றை நினைவுபடுத்துகிறது இந்தத்திரி.

இது என் சொந்த கற்பனை பாடல் அல்ல..

கண்ணா...எந்தன் கண்மணியே

மண்ணை நீயும் தின்றாயோ ?

சுட்டித்தனமும் செய்தனையோ ?

காட்டிடு திறந்துன் வாயினையே...

பெம்மான் உந்தன் வாயினிலே

அம்மா...அகிலம் கண்டேனே !

விண்ணும் மண்ணும் நீயேதான் !

பெண்ணும் ஆணும் நீயேதான் !

மதியும் ரவியும் நீயேதான் !

புனலும் அனலும் நீயேதான் !

உள்ளும் புறமும் நீயேதான் !

கள்ளம் காட்டி மறைத்தாயே

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்