அன்புதோழிகளே - தோழர்களே, பொங்கல் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் கொண்டாடி கரும்பு கடிக்கிறேன் பேர்வழி பற்கள் உடைந்து, பல்செட் உடைந்து மனம் நொந்து போயிருக்கும் இந்த தருணத்திலே உங்கள் மனக்காயத்தை ஆற்றும் விதமாக இந்த பட்டியை தொடங்குகிறேன். இந்த தலைப்பு நம் அன்புத்தோழி பவித்ரா அவர்கள் தந்த தலைப்பு.அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
அதனால் தோழிகளே - தோழர்களே அனைவரும் வெட்கப்படாம, வேதனைப்படாம, துக்கப்படாம, துயரப்படாம, சங்கடப்படாம, சங்கோஜப்படாம, அச்சப்படாம, அவஸ்தைபடாம வந்து உங்க மனதில் இருக்கும் ஆதங்கங்களை இங்கே வந்து கொட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல தலைப்பு ஆரம்பிக்கலாமா
நல்ல தலைப்பு ஆரம்பிக்கலாமா ,தோழி பதில் போடலாமா
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
தோழி பாரதி
தோழி பாரதி, கேள்வியெல்லாம் இப்படி கேட்கப்படாது :) இந்நேரம் களத்துல குதிச்சிருக்க வேணாமா? சீக்கிரமா வாங்க உங்க வாதத்தோட.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நடுவர் அவர்களே
எனக்கு பட்டதை சொல்லலாமா ,குடும்பத்தில் சிக்கனத்தை கையாளுவது
பெண்ணே ,பெண்ணே ...
நினைப்பதை ,தேவை படாததை எல்லாம் வாங்கி சேர்க்க வேண்டும் என்பது ஆடவரின் குணம் ..
நம்ம கிட்ட இருக்க வரவுக்கு ஏற்ற மாதிரி செலவு செய்யாலாமே என்பது
பெண்மையின் குணம் ...
இதில் சிக்கனம் எங்கிருந்து வந்தது என்றால் ,
ஒரு செல்லிடப்பேசி ,அதன் விலையோ இருபதாயிரங்கள் ...
கணவன் சொல்கிறான் ,நான் ஆபிசில் லோன் போட்டு இருக்கேன் மா ,,
மனைவி எதுக்குங்க ,
கணவன் சொல்கிறார் இல்ல புதுசா ஒரு போன் அறிமுக படுத்தி இருக்காங்க ,விலை இருபதனாயிரம் ,அதான் வாங்கறதுக்கு ,
என்னங்க உங்க கிட்ட தான் ஒரு புது மாடல் செல் இருக்கே ,அதா வாங்கி மூணு மாசம் கூட முழுசா ஆகல அதுக்குள்ள ,அவ்வளவு விலையில ஒரு போனா , நம்ம பசங்களுக்கு இந்த மாசம் பீஸ் கட்டனும் ,இந்த நேரத்துல போய்
லோன் போட்டு எதுக்குங்க , நம்ம கிட்ட தான் போன் இருக்கே ,அதையே வசிக்க கூடாதா ,தேவையில்லாம எதுக்குங்க பணத்தை ,செலவு செய்ய போறீங்க ,
கொஞ்சம் சிக்கனமா இருக்க கூடாதா ,என்று மனைவி கணவனிடத்தில்
புலம்புகிறார் ....
இந்த இடத்தில கணவனானவர் சிக்கனதையும் ,கொஞ்சம் அறிவையும் பயன் படுத்தினால் குடும்பம் சிறக்குமே ...
இன்று பெரும்பாலான குடும்பங்களில் இதுமாதிரியான சிக்கன முறைகளில்
கணவன்மார்கள் இன்றும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் ,சரியா நடுவர் அவர்களே
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
பாரதி
பாரதி, முதல் போணியே பெண்கள் பக்கமா? மகிழ்ச்சி
//நினைப்பதை ,தேவை படாததை எல்லாம் வாங்கி சேர்க்க வேண்டும் என்பது ஆடவரின் குணம்//பொண்ணு பார்க்குறப்பவே பொறுப்பா இருந்தார்னா நம்மகிட்ட மாட்டுவாரா மாப்பூ? :)
இப்பதான் அடகு கடைல எல்லாத்தையும் அடகு வச்சுக்கறாங்களே, செல்போனை அடகுவச்சி பையன் ஸ்கூல் பீஸ் கட்டலாம்னு ஒரு கல்லுல ரெண்டு மாங்காவ அடிக்க நினைச்சிருப்பாரு. செல்லுக்கு செல்லுமாச்சு, பீஸும் கட்டின மாதிரி ஆச்சு.அதுக்குள்ள வீட்டம்மா அவர தப்பா புரிஞ்சுண்டு இருப்பாங்க.
நடைமுறை வாழ்க்கையில் நான் தினமும் காணும் நிதர்சனமான நிகழ்ச்சிகளோடு முதல் வாதத்தை தொடங்கிவிட்டார் பாரதி.அவருக்கு பதிலடி தரப்போகும் எதிரணி ரதி யாரோ?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நடுவர் அவர்களே
கல்பனா, தலைப்பை பார்த்த உடனேதான் சிந்திக்க தொடக்கி யுள்ளேன்.சிக்கனப் படுத்துவது நானா? எனது வீட்டுக்காரரா? பக்கத்து வீட்டில் ராமசாமியா? அல்லது அவர் மனைவி ராக்காயியா? எல்லாவற்றையும் அலசி ஆராந்து விட்டு ஒரு முடிவுடன் கூடிய விரைவில் வருகின்றேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எதிர் அணியினருக்கு ,
அட ,என் கூட போட்டி போட வேணாம் ,அவங்க அவங்க வீட்டு நிகழ்ச்சிகளையே
ஒரு ஒட்டு ஒட்டி பாருங்க பா ,நாம லேடிஸ் எவ்வளவோ சிக்கனமா இருக்கோம்னு புரியும் ,
என் அனுபவம் ஒன்ன சொல்றேன் ,,
தேவையில்லாம கரண்ட் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு எங்க வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே என்னவருக்கு சொல்லிட்டேன் ,காரணம்
என் சிக்கன குணம் தான் இதுல இருந்தே தெரியலையா ,
என் வீட்டுகாரர் எப்பவுமே ,ஒரு அறையில இருந்து இன்னொரு அறைக்கு போனார் என்றால் ,அந்த ரூம் விளக்க கூட அணைக்க வேணாம்,மின்விசிறி அப்படியே ஓடினது ஓடிய படியே இருக்கும் ,நான் இத கேட்டதும் , என்ன மா ,மறந்துட்டேன்னு எப்போது கேட்டாலும் சொல்லுவார், மின்சார சிக்கனமும் ஒரு வித சிக்கனம் தானே நடுவர் அவரே ,,,
இன்னொன்று ,
அதே மாதிரி உறவினர் யாராச்சும் வராங்க ,அப்படின்னு சொல்லிட்டா ,இந்த ஆண்களுக்கு உடனே சாப்பாடு தான் நினைவுக்கு வரும்,சீக்கிரம் சாப்பாடு செஞ்சு வச்சிடும்மா ,சீக்கிரம் சீக்கிரம் அப்படின்னு பறப்பாங்க !!!!!!
சரி நாம தோராயமா எவ்வளவு பேரு வராங்கனு கேட்டால் பதிலா ஒரே வார்த்த தான் ,அது என்னனா ,
சும்மா ஒரு பத்து பேருக்கு வரமாதிரி சாப்பாடு செஞ்சுடு ,ஓகே ...
அவ்வளவுதான் ,பெரும்பாலான ஆண்களின் தாரக மந்திரமே இதான்,நிறைய குடும்பங்களில் ,
அப்படிதானே ஆண்களே ,பெண்களே ?????.....
(பகல் நேரம்னா அடுத்த வேலைக்கு வைத்து கூட சாப்பிடலாம் ,
அதுவே இரவு நேரமா இருந்தா ,வேஸ்ட் தான் ..அடுத்த நாளும் யாரும் சாபிடமாடாங்க ,நம்ம குடும்ப பெண்களை தவிர )..,
ஏன்னா முழுவிபரம் தெரிந்தால் ,சிக்கனமா செஞ்சு வசுடுவோம்னு அவங்களுக்கு நினைப்பு,
அவசர அவசரமா சாப்பாடு செஞ்ச சீக்கிரதுல கடைசியில அவங்க வரலயாம் , அப்படின்னு ஒரே வரி பதில் வரும் அவங்க கிட்ட (ஆண்கள் கிட்ட ) இருந்து ....ஒரு விஷயத்தை முழுசா ,பொறுமையா கேட்டு சொல்ல கூட,இந்த ஆண்களுக்கு தெரியாது ...
எதையும் எடுத்தோம் ,கவிழ்த்தோம் இது மட்டுமே தெரியும் ஆண்களுக்கு ...
இதுல இருந்து என்ன ஒரு தெளிவு கூட கிடையாது இந்த ஆண்களுக்கு ,குடும்பத்துல இருக்க பெரிய மனுஷ ஆண்களே இப்படி நடந்துக்குறாங்கனா நீங்களே பாத்துகோங்க ,ஆண்களின் சிக்கனத்தை .....
****சிக்கனமான நம் பெண்கள் குடும்ப அக்கறை, காட்டுபவர்கள் ,,,
ஊதாரி ஆண்கள் குடும்பத்தையே உலையில் வைக்க பிறந்தவர்கள் ****
சரிதானே நான் சொல்வது .....நடுவர் அவரே
என்ன எதிர் அணி சீக்கிரம் வாங்கம்மா ,,,
*****எழுத்து ,எண்ண சிக்கனம் வேண்டாம் *****
உங்க ஆடவரின் சிக்கனத்த புட்டு வைங்க மா***௮௮
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
நடுவருக்கு
சூப்பரான ஆனா அதே சமயம் கொஞ்சம் யோசிக்க வைக்கிற தலைப்போடு பட்டி என்னும் ஆரோக்கியமான சண்டையை ஆரம்பித்து வைத்த நடுவருக்கு, ரொம்ப உற்சாகமா ஆவலா சண்டைக் களத்தை பார்வையிடவும் அப்பபோ திரி பத்த வைக்கவும் ரெடியா இருக்கிற நடுவருக்கு வாழ்த்துக்கள்.
நடுவரே இந்த முறை தாங்களே ஸ்பெசல் காங்கோ ஜூஸ் குடிச்சு தெம்பாக்கிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்;-)
தோழிகள் அனைவரும் பட்டியில் பங்கு கொண்டு பட்டியை சிறப்பிக்க வாருங்கள் வாருங்கள் என்று அன்புடன் வரவேற்கிறேன்.
நடுவர் அவர்களே எந்தப்பக்கம்னு தலைப்பு பாத்ததுமே முடிவு பண்ணியாச்சு ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் சஸ்பென்ஸ் தர வேண்டாமா?!
நாளைக்கு என் முதல் கட்ட வாதத்தில் எந்தப்பக்கம் எனபதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்;-)
Don't Worry Be Happy.
யோகராணி
யோகராணி, சிந்தனை செய்வதிலும் சிக்கனம் செய்து சீக்கிரம் வாங்க வாதத்தோடு :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பாரதி
//மின்விசிறி அப்படியே ஓடினது ஓடிய படியே இருக்கும் ,நான் இத கேட்டதும் , என்ன மா ,மறந்துட்டேன்னு எப்போது கேட்டாலும் சொல்லுவார், மின்சார சிக்கனமும் ஒரு வித சிக்கனம் தானே//என்னங்க அப்படி கேட்டுட்டீங்க? இதுல சிக்கினம் பண்ணலனா, மாச சம்பளத்தை கரண்ட் பில்லுக்கே எடுத்து எண்ணி வச்சிடனும்.
//சும்மா ஒரு பத்து பேருக்கு வரமாதிரி சாப்பாடு செஞ்சுடு ,ஓகே ...
அவ்வளவுதான் ,பெரும்பாலான ஆண்களின் தாரக மந்திரமே இதான்,நிறைய குடும்பங்களில்//நான் கூட இதுல நிறைய அனுபவபட்டிருக்கேங்க. என் கை ஏற்கனவே ஓட்டை கை பத்து பேருக்கு சமைன்னு சொன்னா பத்து நாளுக்கு ஆகுற மாதிரி சமைச்சு முழி பிதுங்கியெல்லாம் நின்னுருக்கேன் :(
//ஏன்னா முழுவிபரம் தெரிந்தால் ,சிக்கனமா செஞ்சு வசுடுவோம்னு அவங்களுக்கு நினைப்பு//பாம்பின் கால் பாம்பறியும். மனைவியின் சிக்கனம் அவரவர் கணவர் அறிவார். அதான் இந்த முன்னேற்பாடு போலிருக்கு :)
//அடுத்த நாளும் யாரும் சாபிடமாடாங்க ,நம்ம குடும்ப பெண்களை தவிர//எங்க வீட்டு அய்யா, ஏன் விருந்து சமைக்க சொன்னோம்னு பீல் பண்ற அளவுக்கு, அதே சாப்பாட்டை பத்து நாளைக்கும் வச்சி ஓட்டிட மாட்டேன். இன்னொரு முறை விருந்துங்குற பேச்சு வரும். நீங்களும் இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க மேடம் :D
பாரதி, இதுபோன்ற தலைப்பு எப்ப வரும்னு காத்துட்டு இருந்தாங்க போல, ஆண்களோட சிக்கன (??) வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற. என்னப்பூ, எதிரணி காத்து வாங்கிட்டு இருக்கு. சீக்கிரம் யாராவது ஆண்கள் சிக்கனத்தை பத்தி பேச வாங்கப்பா. அப்புறம் அட்மின் அண்ணா சாபம் விட்டுட போறார் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சஸ்பென்ஸ் திலகம்
சஸ்பென்ஸ் திலகம் ஜெய், உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி. உங்க சிக்கனத்தை உபசரிப்பில் இருந்தே தொடங்கிட்டீங்க போல. பின்னே நடுவருக்கு நீங்கதான் தெம்பா இருக்க ஜூஸ் போட்டு தரனும். அதை விட்டுட்டு, நாய் வால் எடுத்து நாய்க்கே சூப் போட்டு குடுத்த மாதிரி, எங்க ஊர் காங்கோ ஜூஸை எனக்கே தருவீங்களா நீங்க? :) சஸ்பென்சுக்கு பை சொல்லிட்டு வாதத்தோட வாங்க.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.