கோவம்

கோவம்

வணக்கம் தோழிகளே எனக்கு என் கணவரை பார்த்தாலே கோவம் கோவமா வருது ஆனால் அவர் என்னிடம் அன்பானவராக நடந்துகொள்கிறார் அவரை ஏற்றுகொள்ள என் மனசு சம்மதிக்கவில்லை..குடும்ப பிரச்சனைதான் தோழிகளே..குழப்பத்திற்கு தீர்வு கூறுங்களேன்..சில நேரத்துல நான் அவரை நம்பி வந்துட்டதால ஒன்னும் சொல்ல முடியல...பிள்ளைகளை வைத்துகொண்டு தனியே வசிப்பதும் கடினம் என்ன செய்ய?

தோழியே குமாரி, நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக சொன்னால் தான் தோழிகள் அதற்கு தகுந்த அறிவுரைகளை தர முடியும்.நீங்க என்ன பிரச்சனை சொல்ல வருகிறீர்கள்? எது குறித்து சொன்னீர்கள் என்று புரியவில்லை. பொதுவாக கோபம் என்றால் அது அனைத்து பெண்களுக்குமே வரும். இதில் நீங்கள் எந்த வகை கோபத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. அதனால், இங்கே தெளிவாக கூற முடியுமானால் கூறுங்கள். தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கும் என் கணவருக்கும் இதில் பிரச்னை வருகிறது என்றால் ...

என் குடும்பம் எனக்கு முக்கியம் என்று நான் நினைப்பதும் ..

அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்னு அவர் நினைப்பதும் தான்,

அவர் குடும்ப விழாவிற்கு நான் செல்கிறேன்..ஆனால் என் குடும்பத்துல என்ன நடக்குதுன்னு கூட கேக்கவோ கண்டுக்கவோ மாற்றார்...ஆனால் என் மேல் பிள்ளைகள் மேல் பாசமா இருக்கறார்...நான் கோவமா இருந்தால் கூட தானே வந்து பேசறார்...

எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து ஒரு பவுன் நகை கூட செய்தது இல்லை..ஆனால் என் தோழிகளின் கணவன் நெறைய மனைவிகளுக்கு செய்றதை (தோழி )அவர்கள் என்கிட்ட சொல்லும் பொது ஏன் என் கணவர் இப்படி இருக்கிறார்னு எனக்கு அவர் மேல் கோவம் வருது..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எல்லாமனிதர்களும் ஒரே மாதிரி இருந்தா கடவுள் படைப்பதர்க்கும் நாம் அவரை வணங்குவதர்க்கும் வழியே இல்லாமல் போய்விடும் எல்லாரின் முகமும் வேருபட்டு இருக்கிரதே இதைவைத்து கூட நீங்கள் புரிந்துகொள்ள வில்லையா சரி விஷயத்திர்க்கு வருகிரேன் உங்களுக்கு என்ன ப்ரச்சனை உங்களுடையது லவ் அண்ட் அர்ரேஞ் மேரேஜ் இதில் எது

அன்புடன்
ஸ்ரீ

அர்ரேஞ் மேரேஜ்

முக்கிய காரம் என் நகைகள் தான் .....அதை நான் என் அப்பா வீட்டில் வைத்து இருக்கேன்.அதை கொண்டு வா என்று என் கணவருக்கு அவர் அம்மா சொல்லிகுடுக்கிறார்.அதை கேட்டுகிட்டு என் கணவரும் என் மனதை வேதனை படுத்துகிறார்..எனக்கு ஏன் காரணமே இல்லாம என் நகைகளை இங்கே கேக்குறாங்கன்னு குழப்பமா இருக்கு..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

\\\\என் குடும்பம் எனக்கு முக்கியம் என்று நான் நினைப்பதும்/////
உங்க குடும்பம் எது அவங்க குடும்பம் எது
உங்க குடும்பம் - உங்களது கணவர், நீங்க ,பிள்ளைகள் ,அவரது தாய் மற்றும் தந்தை இதுதான் உங்க குடும்பமும் அவரது குடும்பமும் ஒரு ஆண்மகனின் கடைமைகள் வேரு ஒரு பெண்ணின் கடைமைகள் வேரு தயவு செய்து அதனை புரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
ஸ்ரீ

ஆமாம் நான் மட்டும்தான் அப்படி நினைக்கிறன் மேடம் அவர் என் அம்மா அப்பாவை யாரோ மாதிரி தான் நினைக்கிறார்..நானே எதாவது பேசினால் கூட உன் அம்மா சொல்லிகுடுதாங்கலன்னு கேக்குறார்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

\\\\\அவர் குடும்ப விழாவிற்கு நான் செல்கிறேன்..ஆனால் என் குடும்பத்துல என்ன நடக்குதுன்னு கூட கேக்கவோ கண்டுக்கவோ மாற்றார்...ஆனால் என் மேல் பிள்ளைகள் மேல் பாசமா இருக்கறார்...நான் கோவமா இருந்தால் கூட தானே வந்து பேசறார்...///////
பக்கத்துவீட்டு விழாவிற்கு கூடதான் போய் வருகிரோம் அவர் நடந்து கொள்வது உங்களிடம் தான் இருக்கிரது நீங்கள் முதலில் அவரது சொந்தங்களை மதித்து அன்பு காட்டி செல்லுங்கள் உங்களது தாய் வீட்டினரை நீங்கள் நினைப்பது போலவே அவர்களையும் நினையுங்கள் சிரிதுகாலம் நீங்கள் தாய் வீடு பற்றி பேசுவதை விடுத்து கண்வரின் குடும்பத்தினரின் மீது அன்பை வெளிக்காட்டுங்கள்.

ஒரு பெண்னுக்கு தாய் வீடு மிக முக்கியமான ஒன்று அதே போல் புகுந்த வீடும் மிகவும் முக்கியம் கல்யானம் ஆகும் வரை ஒரு தாய் வீடு கல்யாணம் ஆன பிற்கு இரண்டு தாய் வீடு என்று என்னி நடந்தாலே போதும் ப்ரச்சனை என்பது எப்போதும் இல்லை

தவராக ஏதும் கூரி இருப்பின் மன்னிக்கவும் தோழி

அன்புடன்
ஸ்ரீ

நீங்கள் முதலில் உங்களிடம் உள்ள "நான், என், எனது" இவை மூன்றையும் விட்டு "எங்கள், நமது" என்ற வார்த்தைக்கு மாறுங்கள். என் குழந்தை என்றால் என்ன அர்த்தம், எங்கள் குழந்தை என்று சொல்லி பழகுங்கள். உங்களுக்கு அவர் ஒருத்தர்தான் சொந்தம். அதனால்தான் பெண்கள் கணவரை "என்னவர்" என்று சொல்வார்கள்.
குழந்தைகள் உங்கள் இருவரின் சொந்தமல்லவா?. அதனால் எங்கள் குழந்தை என்று சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில் பிரச்சினை இருக்காது. கோபத்தை விடுங்கள். உங்கள் இருவரின் குழந்தைகளின் எதிர்காலம்தான் முக்கியம்.

அன்புடன்
THAVAM

விட்டு கொடுத்து போவது இங்கே தான் நீங்க விட்டு கொடுத்து போகனும் உங்க வீட்டை பற்றி பேசுவதை கொஞ்சம் நாள் தவிர்க்கவும் அவர்களை பற்றி நல்ல விதமாக கூரவும்

அன்புடன்
ஸ்ரீ

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நானும் அப்படி நடந்தாலாவது ,அப்பா அம்மா வீட்டுக்கு வருவார்னு என்னை எவ்வளோ மாத்திக்கிட்டு அவர் குடும்பத்தில் இன்னைக்கு வரை நட்புடனும் ஒரு மருமகள் கடமையை செய்கிறேன் ஆனால் அவர்கள் என்னை அப்படி நினைக்கவில்லை அவர்களின் தேவை என் நகையும் பணமும் என் கணவர்கிட இதை சொல்லி கேட்டும பார்த்துவிட்டேன் அதற்கு அவர் சொன்னது எனக்கு மேலும் அதிர்ச்சி ஆகிவிட்டது ..ஆம்மாம் நான் உன் நகைக்கும் பணத்கும்தான் கல்யாணம் செய்துகிட்டேன்னு சொல்லுறார்..அதை அவர் அம்மாகிட சொல்லிவிட்டேன் அவர் சொல்வது ஆமாம் கல்யாணத்துக்கு பிறகு எல்லாத்தையும் என் பையன்கிட தான் நீ குடுக்கனும்னு அவர் பிள்ளைக்கு சாதகமா பேசுறாங்க என்ன செய்யட்டும் நான்..இபப்டி பேசுபவர்களை நான் எப்படி நம்பட்டும்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்