முதல் பிறந்த நாள் விழா–அனுபவம்,ஐடியா.

ஹலோ தோழீஸ்!!!. என் பொண்ணுக்கு முதல் பிறந்த நாள் விழா சென்னையில் பண்ண போறோம்.பிறந்த நாள் பிப்ரவரி 28.(நட்சத்திரபடி).ஆனால் Date Of Birth- March 10.உறவினர்,குழந்தைகளை விடவும் அதிகமாக நண்பர்கள்தான் வருவார்கள்.ஐடியா குடுங்க.உங்களது அனுபவங்களையும்,வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

இமா ஓடியாங்கோ. நாம இப்போதான் பேச ஆரம்பிச்சது போல இருந்தது.தனிஷ்காவின் முதல் பிறந்த நாள் வந்தாச்சு

Vr Scorp நீங்க எப்படி உங்க குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினீங்கம்மா?.நான் http://www.arusuvai.com/tamil/node/16234 படித்துவிட்டேன்.

நவீனா குட்டியையும்,செண்பகா பாபு சகோதரியையும் எதிர்பார்கின்றேன்.இவங்க இருவரும் வந்தால் அட்மின் ஐயா கண்டிப்பாக ஆஜர்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஹாய் ஜெயா,
நான் என்னத்த உங்களுக்கு ஐடியா சொல்றது. ;) நீங்க கலக்கிருவீங்க. மேலோட்டமா என்ன பண்ண யோசிச்சு இருக்கீங்கன்னு சொன்னா ஏதாச்சும் சொல்றேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தர்பூசணி பழத்தில் கார்னீஷ் பண்ணுவதற்கு கத்தி சென்னையில் எங்கு கிடைக்கும்?
ஒ.ஹெச்.பி ஷீட்டில் பெயிண்ட் பண்ணுவது எப்படி? Give me simple patterns and paint details.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

imma..Knife set 800rs :-( கத்தி வாங்கற எண்ணம் ஓடி போய்டுச்சு

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஜெயா,

என்னை கூபிடதனால் மட்டும் இல்லை இந்த தலைப்பை பார்த்தவுடனே ஓடோடி வந்தேன்.....

என் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. இருந்தாலும் சில பல நான் எதிபார்த்த மாதிரி இல்லை. இருந்தாலும் அது தெரியாமல் நன்றாகவே நடந்தது. (போதும் பில்ட் அப்...கேட்டுச்சு...இதோ விஷயத்துக்கு வரேன்....)
1. பார்ட்டி வீட்டிலா அல்லது ஹோட்டலிலா என்று முடிவு செய்து யார் யாரை கூப்பிட போறீங்கனு ஒரு லிஸ்ட் தயார் பண்ணுங்க.
2. அவர்களுக்கு அழைபிதழ் அனுப்புங்க.....அதில் அவர்கள் எத்தனை பேர் வருவாங்க என்று உங்களுக்கு மேலோட்டமாக தெரியும்.
3. அதை வைத்து நீங்கள் "return gift" வாங்க வேண்டும். குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைகளுக்கும் பெரியவர் மட்டும் என்றால் அவர்களுக்கு உபயோகமாக உள்ள பொருளை வாங்க வேண்டும்.
4. சைவம் எத்தனை அசைவம் எத்தனை என்று கணக்கு பண்ணி வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ மெனு தயார் செய்ய வேண்டும். வீட்டில் என்றால் அதற்க்கு தேயைவையான எல்லா பொருட்களையும் லிஸ்ட் போட்டு முன் கூடியே வாங்கி வைத்து விட வேண்டும். அப்புறம் பார்ட்டி மேனுக்காக இந்த லிங்க் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/7757
5 . பார்ட்டி டேகொரேஷன், பானர், பலூன் இப்படி எல்லாவற்றையும் முன் கூடியே தயார் செய்ய வேண்டும். நாங்கள் இங்கே இருப்பதால் எதினிக் தீம் வைத்தோம். ஹாலில் உள்ள சுவர் அலங்காரம் படம் எல்லாம் எதினிக். குழந்தைக்கு லாச்சா, பலூன் கூட நம்ப தேசிய கோடி கலர் என்றால் பாருங்களேன். நாங்கள் பலூன் வைத்து ஆர்ச் செய்தோம். அப்புறம் பலூனில் ஹீலியம் நிரப்பி பறக்க விட்டால் அது சீலிங்கில் ஒட்டிகொண்டோண்டது அழகாக. ஒரு பெரிய சாண்டலியர் லைட் அதில் நிறைய புடவை கட்டி பூ போல இழுத்து சுவற்றில் ஓட்டினோம்.
6 ஒரு வாரம் முன்கூட்டியே கேக் ஆர்டர் தந்து விட வேண்டும். எதனை பேர் என்று கணக்கு செய்து ஆர்டர் செய்ய வேண்டும். அப்புறம் கேக் உடன் பரிமாற்ற சிப்ஸ் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க வேண்டும்.
7 நேரம் இருப்பின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் கூட நடத்தலாம். என் குழந்தையின் முதல் பிறந்தநாள் என்பதால் குழந்தைகளுக்கு இல்லை பெரியவர்கள் விளையாடினோம். சிரியவர்களுகேன்று கலரிங் புக்ஸ் வாங்கி கொடுத்து அவர்களை ஒரு இடத்தில அமர செய்தோம்.
8 கெஸ்ட் புக் வாங்கி வந்திருபவர்களை போகும் முன் கையொப்பம் இட செய்தோம்.

இன்னும் நிறையா இருக்கு.....வந்து சொல்கிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//தர்பூசணி பழத்தில் கார்னீஷ் பண்ணுவதற்கு கத்தி // ;)) தெரியாத மாதிரி கேக்கறீங்க. ;) கிச்சன் வெஜி நைஃப் போதும். மெல்லிய கிராப்ட் நைஃப் / மெல்லிய பல்பல் ப்ளேட் (சர்ஜிகல் நைஃப்) யூஸ் பண்ணலாம். ஆனாலும்... நீங்கதான் நல்லாவே பண்ணுவீங்களே! இது என்ன கேள்வி!!!

//ஒ.ஹெச்.பி ஷீட்டில் பெயிண்ட் பண்ணுவது // 1. white board marker, பர்மனன்ட் மார்க்கர்ஸ் கலர்ல கிடைக்கும்ல. அது ஓகே. 2. விண்டோ பெய்ன்ட் நல்லா வரும். 3. glass paint ட்ரை பண்ணிப் பார்க்கலாம்... அதில் உள்ள கெமிகல்ஸ் ஷீட்டை உருக்காமல் இருந்தால் சரி. ட்ரை பண்ணிப் பாருங்க. 4. பாப்ரிக் பெய்ன்ட் சரிவரும். டெக்னிக்ஸ்.. இங்க கைவினைல கிளாஸ் பெய்ன்ட்டிங்ஸ் பார்த்தால் தெரியும். சாதாரணமா தேவையான படத்தை ஓ . எச் . பீ ஷீட்டுக்குக் கீழ வச்சு அவுட் லைனர் வச்சு ட்ரேஸ் பண்ணிட்டு காய்ஞ்சதும் கலர் பில் பண்ணினா போதும். பபில்ஸ் வந்தா உடனே காய முன்னால ஊசியால குத்திரணும். சரி... என்ன பண்ற ஐடியா? சொன்னா வேற ஏதாச்சும் டிப்ஸ் கிடைக்கும்ல. ;)

‍- இமா க்றிஸ்

1. சாக்லேட் பொம்மை.
2. தர்பூசணீ கார்விங் இதயம் அல்லது பூ ,1,சிறிய டிசைன்ஸ்
3. அத்த பூ கோலம் கேரளா முறை –மஞசள்,சிகப்பு பூக்கள் மட்டுமே.
4. தெர்மோகோலில் பிள்ளையார்
5. வீடியோ வாழ்த்து
6. பேனர்- வாங்கோ! வாங்கோ!
7. ஓ . எச் . பீ ஷீட்டுக்குக்கு பின்னால் liht கொடுத்தால் எப்படி இருக்கும்?
8. வெஜ் ,பழங்களில் சிறிய எளிய பொம்மைகள்.கொஞ்சம் ஐடியாதான் இருக்கு.இது work out ஆகுமா ? இல்லை பணால் ஆகுமான்னு தெரியலையே. காய்கறிகள் வாடிடுமான்னு தெரியலையே.எல்லாரும் உனக்கு எதுக்கு இது. நேரம் இருக்காது என்கிறார்கள்.

ந்ன்றி லாவண்யா. பார்ட்டி ஹோட்டலில்.மாலை 6 – 9.மெனு எல்லாம் கணவர் பொறுப்பு..Hotel selection,menu selection ..my hubby choice.i can tell my opinion.but decision is his part.wall decoration,balloon decoration,reception,gift selection,game arrangement இது எல்லாமே என் பொறுப்பாம்.

இதில் வாங்கோ! வாங்கோ! என்ற வாசகம் ஜெ மாமியிடம் சுட்டது.

பொதுவாக சொன்னால் அந்த பட்ஜெட் என்னோடது .50 -75 நபர்களை எதிர்பார்க்கின்றோம்.எந்த ஒரு வேலையும் காசு,நேரத்தை சாப்பிட கூடாது.

wall decoration : நேவி பூளு கலர் திரை. ஹோட்டல் தூண் மர கலர். ஹோட்டல் சுவர் அரக்கு. அங்கு லெமன் யெல்லோ,பேபி பிங்,ஸ்கை பூளு,எல்லா வகை லைட் கலர் எடுபடும்.
Shall I do wall decoration stickers like comics(micky,pooh,dora) or தெர்மோகோலில் பண்ணவா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

நீங்கள் எல்லாரும் செம ஐடியாஸ் சொல்லிகிட்டு இருக்கீங்க எனக்கு ஒரு சின்னதா ஐடியா தோணுது சொல்லட்டுமா ஜெயா. வருகிறவர்கள் வெல்கம் பண்ணும் போது ஒரு ரோஸ் கொடுத்து வெல்கம் பண்ணலாம். அல்லது செயற்கை ஒத்த ரோஸ் உள்ளது கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி அதில் ஏதாவது quotes அப்படி இல்லை என்றால் ஏதாவது wishes எழுதி tag போல தொங்க விட்டு வருகிறவர்களை வரவேற்களாமே. பெரியவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் பிள்ளைகளுக்கு அது என்ன என்று தெரியாமல் தூக்கி போட்டு விட போகிறார்கள்.

நீங்கள் சொல்லும் கார்விங் அது இது எல்லாம் செய்தால் ரொம்பவே நேரம் செலவாகும். உதவிக்கு ஆள் இருந்தால் மட்டுமே செய்யுங்கள். இல்லையென்றால் அட அட இதை எல்லாம் செய்ய நினைத்தோம் எதுவுமே நடக்கலையே என்று பின்பு வருந்துவோம். அதுவும் இல்லாமல் இது முதல் பிறந்த நாள் விழா தானே நிறைய சொதபல்கள் இருக்கும். அப்போ தானே நாம் கற்று கொள்ள முடியும்..... :)
மறக்காமல் குழந்தையின் துணி மணிகள் அதற்க்கு தேவையான சிட்டான் முட்டி சாமான், மெழுகுவர்த்தி (இங்கு தான் இப்போ எல்லாம் விதம் விதாமா இருக்கே......) வத்திபெட்டி மற்றும் கத்தி. அப்படி தான் இங்கு ஒரு நபர் வீட்டு பறந்த நாள் விழாவில் வத்திபெட்டி மறந்து போனோம். யாரிடமும் இல்லை (லைட்டர் கூட இல்லைப்பா....) பிறகு என்ன அங்கே இருந்த தந்தூரி கடையில் ஒரு பேப்பரை சுருட்டி எரியவிட்டு.....பெரிய கூத்து தான் போங்க....
பார்ட்டி வெறும் மூன்று மணி நேரம் தான் என்பதால் உங்களுக்கு விளையாட நேரம் இருக்காது. ஆறு மணி என்றால் நம் ஆட்கள் ரொம்பவே சீக்கிரமாக ஒரு ஏழு எட்டுக்குள் ஆஜராகி விடுவார்கள். நாம் ஒரு ஏழு மணிக்குமேல் தான் கேக் வெட்டுவோம் பிறகு சாப்பாடு என்று நேரம் சரியாக இருக்கும்.
நீங்கள் "pinata" வைக்கலாம். அது என்னவென்றால் நம் ஊரில் உரி அடிப்பார்களே அது தான். ஒரு பெரிய அட்டையிலான உருவம் செய்து உள்ளே இனிப்புகளை நிரப்பி மேலே கட்டி தொங்க விட வேண்டும். குழந்தைகளை வரிசையாக நிற்க செய்து ஒரு பெரிய குச்சி வைத்து அதை மூன்று முறை அடிக்க செய்ய வேண்டும். யாரவது அடித்து உடைக்க செய்ய வேண்டும். உடைந்தபின் இனிப்பு சிதறும் அதை எடுக்க குழந்தைகளுக்கு ஒரு சிறிய பை கொடுத்துவிடுங்கள்.
மீதம் இருக்கும் உணவை யார் வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்று சொல்லிவிடுங்கள். அப்படியே ஜிப்லாக் கொடுத்துவிடுங்கள். இல்லையா ஏதாவது ஆசிரமத்துக்கு கொடுத்துவிடுங்கள். ஆனால் ஆசிரமம் என்றால் அவர்கள் சீக்கிரமே உணவருந்திவிடுவார்கள் அதனால் மறுநாள் கொடுக்க முடியாது. பார்த்துகொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தையின் பிறந்தநாள் அன்று எதாவது ஆசிரமத்துக்கு "சென்று" (யாரையாவது விட்டு அல்ல) அவர்களுக்கு தேவையான உதவியை செய்து அவர்களுடன் நேரம் செலவழிக்கலாம்.
தெர்மாகோலில் செய்யாமல் போமில் செய்தால் அது உங்களின் குழந்தையின் ரூமை அலங்கரிக்க கூட உதவும். ஏதாவது ஒரு தீம் வைத்து செய்யுங்கள். உதாரணத்திற்கு மிக்கி என்றால் போமில் மிக்கி, மினி, goofy, pluto, pete, clarabelle, daisey, donald என்று செய்யலாம். அப்படியே மிக்கி உருவம் போல உள்ள பலூன் வாங்கி வைக்கலாம். ரெட் அண்ட் கருப்பு கலரில் எல்லாமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

"pinata" நல்லார்க்கு.பிள்ளையார் கோயில் தேங்காய்(ஆடு அருவா – வடிவேலு ஜோக்) .

கார்விங் திட்டம் வேணாம்பா. வீட்டுக்கு 15 நபர் சண்டே வருவாங்களாம்.கவனிக்கும் பொறுப்பு என்னோடது.கத்தி இரும்பு கடையில் செய்து தருவாங்களாம்.

தெர்மோகோல் வேலைக்கு நேரம் பொறுமை அவசியம்.ஆனால் அதற்கு பதிலாக ஸ்டிக்கர்ஸ் செய்யலாம் என என் மாமா கூறினார்.எந்த படம் கொடுத்தாலும் ஸ்டிக்கர்ஸாக மாற்றி தருவதாக கூறினார்.
கார்டூனில் இன்றைய டிரென்ட் என்ன?

//நிறைய சொதப்பல்கள் இருக்கும்
கண்டிப்பாக. இதை எதிர்பார்க்கின்றேன்.

We can reduce issues when we did proper planning about alternative ways also.First problem Time management. If so ,games ??

யாழினி நன்றி. எனது திருமணத்தின் போதே நாங்கள் ரெட் ரோஸ்+ ஹேர்பின் பெண்களுக்கு மட்டும் கொடுத்தோம்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்