மல்லி பொடி வாடை வருகிறது ஹெல்ப் மீ

ஹாய் தோழிகளே,நான் இந்தியாவில் இருந்து துபாய்க்கு 1 வருடம் முன் மல்லி பொடி கொண்டு வந்தேன் 2 மாதங்களுக்கு முன் அதில் வண்டு இருந்ததால் மொட்டை மாடி வெயிலில் 3 மணி நேரம் காய வைத்தேன்,காய வத்து எடுத்து வந்த பின்னர் அதில் 1 வாடை வருகிறது,கெட்ட வாடை எதுவும் இல்லை,ஆனால் மல்லி வாடை வரவில்லை,குழம்பு வைத்தாலும்,எண்ணெயில் வறுத்து குழம்பு செய்தாலும் அந்த வாடை போக மாடெஙுது என்ன செய்வது?நான் இனி ஆகஸ்ட்ல் தான் நான் இந்தியாவிற்கு போவேன்,இப்ப மல்லி பொடியை என்ன செய்வது?

யாராவது அவசரமாக உதவுங்கள்,இங்கு மிஷின் எங்கும் கிடையாது அரைப்பதற்கு,மிக்ஸியிலும் அரைக்க முடியவில்லை

வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்படி தான் செய்வதுண்டு.
வாணி

ஹாய் வாணி
மல்லி பொடியை எண்ணெயில் வறுத்தாலே வாடை போக மாட்டேங்குது,வெறும் வாணலியில் வறுத்தால் போகுமா?மேலும் தோழிகள் வந்து பதில் கூறவும்

அஞ்சலி

நீங்க துபாயில் தானே இருக்கீங்க??இங்கு நிறைய மில் இருக்குமே அங்கு கிடைக்கும்..அதை விட நல்ல மல்லிப் பொடி ஈஸ்டேர்ன் மல்லி பொடி பாக்கெட்களிலும் மணமாக கிடைக்கிறதே.
என்னை கேட்டால் அதை குப்பையில் போட்டு விடுங்கள் என்பேன்..எல்லா குழம்பிலும் போட்டு குழம்பெல்லாம் நாசப்படுத்த வேண்டாம்

டியர் தளிகா,ரொம்ப நன்றிப்பா உங்க உதவிக்கு தாங்க்ஸ்

அஞ்சலி

டியர் தளிகா,நான் பஹ்ரைன்ல இருக்கேன் எனக்கு அதே ப்ராப்ளம் தான்,இங்க ரைஸ் மில் மாதிரி எதுவும் கிடையாது
ஈஸ்டர்ன் மல்லிபொடி இங்க கிடைக்காது வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் பிளீஸ்

என்ன பஹ்ரெயின் தோழிகளே இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு...பஹ்ரெயினில் மல்லிப் பொடி கிடைக்காதா..பஹ்ரெயின் தோழிகள் மல்லி க்கு மல்லிப் பொடி வாங்க உதவவும்

மல்லிபொடி வேற ப்ராண்ட்===விஜய்,மேளம்.மெஹ்ரன்,சான் என்று நிறைய இருக்கு.சக்தி ஆச்சி கிடைக்காது

மேலும் சில பதிவுகள்