அறம் - சிறுகதை: இதயம் கனத்து, கண்கள் பனித்து, மனதை நெகிழ வைத்த ஒரு கதை

சமீபத்தில் மிகுந்த அதிர்வையும் வாசிப்பு அனுபவத்தையும் கொடுத்த ஒரு சிறுகதை - அறம்

கதை இங்கே: http://www.jeyamohan.in/?p=11976

(copy&paste this link in your browser)

கதை பற்றி சில அறிஞர்களின் அறிமுகம் கீழே...
--
முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.

ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.

2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.

திரு.அ.முத்துலிங்கம் அவர்கள்.. [ கனடா வாழ் ஈழ இலக்கிய எழுத்தாளார் ]
http://amuttu.com/index.php?view=pages&id=299
----

’’இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருப்பது உண்மைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை’’ - Prof.M.A.Suseela http://www.masusila.com/2011/02/blog-post.html
---

அறம் கதையை படியுங்கள்.

http://www.jeyamohan.in/?p=11976

(copy&paste this link in your browser)

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

நன்றி,
நிஷா

தோழி நிஷா மிக எளிமையான உரைநடை இல் ஒரு சிறுகதை .நடந்த நிகழ்வுகளை விவரிப்பது போல .மிக்க மகிழ்ச்சி .என் நன்றிகள் தோழி. இப்படிக்கு சௌமியன்

அதிர வைத்த ‘அறம்’ சிறுகதையைத் தொடர்ந்து அந்த வரிசையில் வெளி வந்து கொண்டிருக்கும் மற்ற கதைகளையும் உங்களுக்கு பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மேலும் சில சிறு கதைகள் இங்கே.

ஒவ்வொறு கதையை வாசிக்கும் போதும் மானுடத்தின் மேன்மையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கதை மாந்தர்களை எண்ணி இதயம் கனத்து.. கண்கள் பனித்தன எனக்கு..

ஒவ்வொன்றும் க்ளாசிக். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி..

அறம் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=11976

சோற்றுக்கணக்கு [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=11992

வணங்கான் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12218
http://www.jeyamohan.in/?p=12220

தாயார் பாதம் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12269

மத்துறு தயிர் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12035
http://www.jeyamohan.in/?p=12085

யானை டாக்டர்
http://www.jeyamohan.in/?p=12433
http://www.jeyamohan.in/?p=12435
http://www.jeyamohan.in/?p=12439

மேலும் சில பதிவுகள்