சின்ன பையனின் முகத்தில் கருமை -‍ உதவி தேவை

ஹாய் தோழிகளே...

எல்லோரும் எப்படி இருக்கிங்க? போன வாரம் என் பையனுக்கு (7 வயது) வாயை சுற்றிலும் சிவந்து ரேஷஸ் (rashes) மாதிரி வந்து இருந்தது. டாக்டரின் ஆலோசனையின்படி அவர்கள் சொன்ன க்ரீம் போட்டு, மருந்து சாப்பிட்டு, நான்கு நாளில் நல்ல குணம் தெரிகிறது. ஆனால், இப்போது அந்த இடம் முழுவதும் (உதடுகளை சுற்றிலும், சிறிது தாடை பகுதியிலும்) கருமை நிறமாக ஆகி விட்டது. அழகா இருந்த முகம், கருத்து பார்க்கவே மனதுக்கு கஷ்டமா இருக்கிறது. இது இப்படியே இருந்து விடுமோ என்று வேறு கவலையாக இருக்கு.

இதற்கு என்ன மாதிரி வீட்டு வைத்தியம் செய்து பார்க்கலாம், அவனுடைய தோல் கருமை நிறம் மாறி, பழைய நிறம் வருவதற்கு என்று தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன், ப்ளீஸ். உங்களுடைய பதிலுக்கு என் முன்கூட்டிய நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுபஸ்ரீ

மருந்தெல்லாம் கம்ப்லீட் பண்ணுங்க.. அதுக்கப்பரம் எக்ஷ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை அப்ளை செய்யுங்க.. ;) கருமை மறைந்து விடும். கவலை வேண்டாம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் மகனுக்கும் இந்த பிரச்சினை இருந்தது. எப்போதும் நாக்கினால் உதட்டினை நக்குவதால் இவ்வாறு ஏற்பட்டதாக மருத்துவர் கூறினார். மருத்துவர் cetaphil என்ற லோஷன் போடச் சொன்னார்.
வாணி

என் ப்ரண்டு பொண்ணுக்கு,chickenpoxவந்து ஸ்கின் கருப்பா ஆச்சு,அவங்க cocoabutter cream useபண்ணினாங்க.வளரும் குழந்தைகள் என்பதால் சீக்கிரம்
மறைந்துவிடும்.கவலைவேண்டாம்.

ஏம்ப்பா பயப்படிறீங்க. தோல் நிறம் மாறிடும். ஒரு வாரம் ஆகும். நீங்க ரம்ஸ் சொன்ன மாதிரி ஆலிவ் ஆயில் தடவுங்க. சரியாயிடும். கெமிக்கல் எதுவும் தடவி பிரச்சனையை வரவழைச்சிக்காதீங்க. குழந்தைங்க தோல் ரொம்ப மென்மையானது.

உடனடியாக வந்து பதில் சொல்லிய தோழிகள் ரம்யா, வாணி, ரீம் & ப்ரியா அனைவருக்கும் ரொம்ப நன்றி!

ஆமாம் ரம்யா, இப்ப நல்லா சிவப்பு நிறம்/வலி எல்லாம் குறைந்து இருக்கு, கூடவே கருப்பா ஸ்கின் மாறவும்தான் மேலே தொடராமல் கொஞ்சம் தடுமாறுகிறேன். உங்களோட ஆலிவ் ஆயில் ட்ரீட்மெண்ட் கட்டாயம் செய்து பார்க்கிறேன். நன்றி.

அப்புறம் ஒரு விஷயம்: என் பெயரை சுபஸ்ரீ என்று நினைத்துகொண்டீர்கள் போல!. நான் சுஸ்ரீ‍ - இது என் பையனின் பெயர் + என் பெயர் எழுத்தை வைத்து நானாக வைத்துக்கொண்டதுதான் இந்த சுஸ்ரீ! : ) நீங்க சொன்ன சுபஸ்ரீயும் அழகான பெயர்தான்! இந்த பெயரில் என் ஸ்கூல் டேஸ்ல, எனக்கு ஒரு சீனியர் இருந்தாங்க. நீங்க எழுதி இருந்ததை பார்த்ததும் எனக்கு அவங்க நியாபகம் வந்துவிட்டது! ;)

உடனே, அடடா பெயரை தவறா எழுதிட்டோமே என்று நினைக்க வேண்டாம். இது பெரிய விஷயமே இல்லை. சும்மா, ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷனுக்குதான் சொன்னேன். :) Ok ரம்யா. மீண்டும் நன்றி!

*****************************************
வாணி,

ரொம்ப சரியா சொன்னிங்க வாணி! எக்ஸ்சாட்டா அதேதான் என் பையனும் பண்ணுவான்!. எப்பவும் நாக்கால் ஈரப்படுத்திட்டே இருப்பான். நானும் விடாமல் Aquaphor Healing Ointment, vaseline எல்லாம் தடவி ஸ்கின்னை ஸ்மூத்தா வைக்க முயற்சிப்பேன். இப்ப இந்த ரேஷஸ் பிரச்சனைக்கு கார்டிசோன் க்ரீம் (hydrocortisone) போட சொன்னார்கள் என்று போட்டேன். ரேஷஸ் குறஞ்சிடுச்சி, கூடவே அந்த இடம் எல்லாம் கருப்பா ஆகிட்டே போகுது. சைட் எபக்ட் போல இருக்கான்னு தெரியலை. (கத்தி போய் வாலு வந்த கதையா போச்சு! :( ) இப்பதான் டாக்டர் ஆபிஸ் கூப்பிட்டு, நர்ஸ்க்கு ஒரு மெசேஜ் விட்டு இருக்கேன். பேசாம ஒரு விஸிட் போய் டாக்டரை பார்த்திட்டே வந்திடலாமான்னுகூட இருக்கேன். உங்களோட பதிலுக்கு மீண்டும் ந‌ன்றி வாணி!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்