பித்தம் தீர வழி சொல்லுங்கள் தோழி

எனக்கு அடிக்கடி தலைவலி,வாந்தி,மயக்கம் வரும் டாக்டர்கிட்ட போனா அந்த நேரதுக்கு சரியா போகுது திரும்பவும் வந்து ரொம்ப கஸ்டமா இருக்கு வீட்டுவேலை எதுவும் செய்யமுடியல யாராவது ஹெல்ப் பன்னுங்க பா பித்ததுனால முடியெல்லாம் வெல்லையாய்டுசி குதிக்கால்ல வெடிப்பு தெரியதவங்க அம்மாகிட்டகேட்டு சொல்லுங்க

புவனா அதிகம் டீ குடிச்சாலும் பித்தம் உண்டாகும்மா. மல்லி, இஞ்சி சேர்த்து ஒரு கஷாயம் மாதிரி வச்சு குடிக்க சொல்லுவாங்க. சரியா தெரியல பாட்டிக்கிட்டு கேட்டு சொல்றேன். பித்தவெடிப்புக்கு முல்தானி மெட்டியோடு ரோஸ் வாட்டர் கலந்து பித்த வெடிப்பு மேல் தடவி வந்தால் குணமாகும்.

ரொம்ப நன்றி பா நான் டீ யெல்லாம் குடிக்கறது இல்லபா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

http://www.arusuvai.com/tamil/node/9772 இந்த லிங்க் பாருங்களேன் பித்தத்துக்கு ரபி ஒரு டிப்ஸ் சொல்லி இருக்காங்க. சின்ன சின்ன சந்தேகத்தில் கேட்டு இருக்கலாம் புவனா. இதே தலைப்பு போட்டு மற்றொரு இழை தொடங்கி இருக்கீங்க. அது வேஸ்ட் தானே.

ஹாய் புவனா நலமா? என்னா பா அரட்டை பக்கமே வர்ரதே இல்ல.தோழி நீங்க முடக்கத்தான் இழை கேள்வி பட்டு இருக்கிங்களா?அந்த இழையில் தோசை செய்து சாப்பிட்டால் பித்தம் சரியாகும். மேலும் சந்தேகம் இருந்தா கேளுங்க;)

உன்னை போல பிறரையும் நேசி.

முடக்கத்தான் கீரை தெரியும் டா எங்க கழனிலயே இருக்கு அது மூட்டுவலிக்காக எங்க மாமியார் சாப்டுவாங்க துவயல் செஞ்சி சாப்படலாமா
வினோ நெட்வொர்க் பிரப்ளம் பா மோடம் பி எஸ் என் எல் சரியாவே டவர் கிடைக்கல விட்டுவிட்டு வருது அதான் 2 முறை கிளிக் பன்னிடேன் பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

துவையல் செஞ்சு சாப்பிடலாமானு எனக்கு தெரியல. ஆனா அரிசி 1 டம்லர்,முடக்கதான் இழை 1கப் எடுத்துகோங்க.அரிசியை 3மணி நேரம் நினைய வைத்து இரண்டையும் தோசை பதத்திற்கு அரைத்து. உடனே தோசை செய்து சாப்பிடலாம்.

ஆனா எங்க அம்மா என்னா செய்வாங்கனா? ஒரு மெல்லிய வெள்ளை துணிய தலையில் விறித்து அதின் மீது மிதமான சூட்டில் தோசையை உச்சியில் வைப்பாங்க.அந்த தோசையை யே சாப்பிட சொல்லுவாங்க. சிரிப்பா வருதா நானும் சிரிச்சுட்டே சாப்பிடுவேன். ஏன் அப்படி செய்ராங்கனு கேக்காதிங்க எனக்கும் தெரியல.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்