தேதி: May 31, 2009
பரிமாறும் அளவு: 2
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
குடமிளகாய் - ஒன்று
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் - 2 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது,
சின்ன வெங்காயம் - 2 பல்
இஞ்சி - சிறுத்துண்டு(விருப்பபட்டால் மட்டும்)
எண்ணெய் - வதக்க
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க:
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
முதலில் வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பையும் வரமிளகாயையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, குடமிளகாய், இஞ்சி, வெங்காயம், புளி எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். குடமிளகாய் நிறம் மாறும் வரை வதக்கவும்
பிறகு வதக்கிய பொருட்களுடன் பொட்டுக்கடலை, உப்பு மற்றும் வறுத்த உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைத்த குடமிளகாய் துவையலில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பரிமாறவும்.
குடமிளகாயில் பல வகை பதார்த்தங்கள் இருந்தாலும், துவையல் வகை அதிகம் யாரும் முயற்சித்து இருக்கமாட்டர்கள் என நினைக்கிறேன். வைட்டமின் சி, வைட்டமின் கே மிகுந்த இது எல்லாவகை சமையலுக்கும் உதவும்.
வேறுமுறை: இதே துவையலை சில மாற்றங்களுடன் இப்படியும் செய்யலாம். இதில் புளியோடு சிறிது தக்காளி சேர்த்து கொள்ளலாம். அல்லது புளியை தவிர்த்து தக்காளி(பாதி) சேர்த்துகொள்ளலாம். அல்லது எலுமிச்சம்பழ சாறை 1 டீஸ்பூன் சேர்க்கலாம். உங்களின் சுவைகேற்ப புளிப்புக்கு மூன்றில் ஒன்றை சேர்க்கவும். விருப்பபட்டால் அரைக்கும்போது தேங்காய் துருவல் (1டேபிள்ஸ்பூன்) சேர்க்கலாம். அதனுடன் வாசனைக்கு புதினா இலைகள் 5 மட்டும் சேர்க்கலாம் நிறைய சேர்த்தால் குடமிளகாய் தூக்கலாக தெரியாது.
Comments
இளவரசி
ஹாய் இளவரசி,உங்க குடைமிளகாய் துவையல் சூப்பர்.எனக்கு ரொம்ப பிடிச்சுது.எல்லாருமே விரும்பி சாப்பிட்டாங்க.அற்புதமான குறிப்பு கொடுத்திருக்கீங்க.நன்றி இளவரசி.
அன்புடன்
நித்திலா
நித்தி
நன்றிங்க வரிசையா உங்க பாராட்டு மழையில் நனைஞ்சுட்டேன்.....நன்றிங்க
ஓட்ஸ் ஊத்தாப்பம் கூட முயற்சி பண்ணுங்க...அது ரொம்ப சுவை ..
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
குடைமிளகாய் துவையல்
இளவரசி,உங்க குடைமிளகாய் துவையல் சூப்பரோ சூப்பர்.நான் பூண்டு 2 பல்லும்,தக்காளி பாதியும் சேர்த்து இதே மாதிரியே செய்தேன்.எனக்கும் கணவருக்கும் மட்டுமல்ல குழந்தை(18 மாதம்) கூட மிகவும் விரும்பி சாப்பிட்டான்.
எனக்கு குடைமிளகாயில் சாம்பாரும்,கறியும் தவிர வேறு எதுவுமே சமைக்க தெரியாது.ஆனா இனி உங்க துவையலும் எங்க ஃபேவரிட் தான்.இது போல் நிறைய சிம்பிள் ரெஸிப்பிஸ் கொடுத்து அசத்துங்க.கூட்டாஞ்சோறு பகுதியில உங்க குறிப்பு(யாரும் சமைக்கலாமில் வருவது) அதிகமாக இல்லையே ஏன்? அங்கும் இருந்தா ரொம்ப வசதியா இருக்கும்.
மிகவும் நன்றி
உமா.
uma..thanks elu
sorry uma now only i see ur feedback.....
that too after doing,u said me everyone enjoyed...so happy for ur feedback..
oats uttappam kuuda try pannunga..supera eurkkum
aprum paakalam
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
குடமிளகாய் துவையல்
இளவரசி, இந்த துவையல் சாதத்துடன் சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.
குடமிளகாய் துவையல்
ஹாய் இளவரசி அக்கா,
இன்று உங்க குடமிளகாய் துவையல் செய்தேன். சூப்பரா இருந்தது. மானு பிடிவாதம் பிடிக்காம என்னை படுத்தாம ஒழுங்கா சாப்பிடாள். கேட்டா அம்மா நல்ல இக்குனு சொல்றாள்.
மிக்க நன்றி.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!