1 1/2 வயது குழந்தைக்கு வறட்டு இருமல் (dry cough ) குறைய ஹெல்ப் பண்ணுங்க...ப்ளீஸ்

ஹாய் தோழிகளே.
என்னுடைய மகனுக்கு 1 1 /2 வயது ஆகிறது.. இப்போ ஒரு வாரமாக அவன் வறட்டு இருமல் (dry cough ) வந்து ரொம்ப கஷ்ட படறான்....ப்ளீஸ் தோழிகளே யாரவது இருமல் குறைய வழி சொல்லுங்களேன்.... பெரியவங்க மாதிரி கஷ்ட பட்டு இருமும் பொது பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு...ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.....

ப்ளீஸ்பா யாரவது பதில் சொல்லுங்க ....

SaranyaBoopathi

என் பையனுக்கும் இந்த வறட்டு இருமல் இருக்கும்..நான் பணங்கல்கண்டு சேர்த்து ஆத்தி குடுப்பேன் குறையும்..சுடுதண்ணீர் அடிகடி கொடுங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வைத்துக் கொண்டு இராமல் போய் டாக்டர்ட்ட காட்டுங்க முதல்ல.

‍- இமா க்றிஸ்

டாக்டர் கிட்ட காட்டி மருந்து கொடுத்துட்டு தான் இருக்கேம்மா .... ஆனாலும் குறையல...அதனால தான் கேக்கறேன்....

SaranyaBoopathi

நன்றி குமாரி... நானும் ட்ரை பண்ணி பாக்கறேன்

SaranyaBoopathi

ஹாய் தோழி சரண்யா...,குழந்தைக்கு ஏற்கனவே டாக்டரிடம் காட்டி மருந்து கொடுத்தாச்சு என்கிறீர்கள்.அவர்கள் ஆண்டிபயாட்டிக் ஓவர் டோஸ் கொடுக்கும் போது வறட்டு இருமல் சில குழந்தைகளுக்கு வந்துடும்.
நீங்க ஒரு ஸ்பூன் தேனில் பட்டையை நன்கு பொடி செய்து இரண்டு பின்ச் சேர்த்து நன்கு கலந்து விட்டு அவன் வாயில் வைத்து சப்பிட சொல்லுங்கள்.இது வறட்டு இருமலை நன்கு குறைக்கும்.என் மகளுக்கு திடீர்னு வாய் விடாமல் இருமும் போது என் வைத்தியம் இதுவே... இரவு நேரத்தில் இருமல் வரும் போது இதை கொடுத்த ஐந்து நிமிடத்தில் நன்றாக உறங்கி விடுவாள்.
நீங்க இந்தியாவில்தான் இருக்குறீங்கன்னு நினைக்கிறேன்.முழந்தைக்கு லேசாக சளி இருக்கும்போதே 6 துளசி இலையுடன்,4 மிளகு ஒரு சிறு பல் பூண்டு,வேண்டுமானால் ஓமம் சிறிது சேர்த்து சிறிது வெதுவெதுப்பான தண்னீர் தெளித்து நைசாக நசுக்கி சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேன் கலந்து காலையில் வெற்யும் வயிற்றில் குழந்தைகளுக்கு மூன்று நாள் தொடர்ந்து கொடுங்கள் போதும்.உடனே தண்ணீர் கொடுக்க வேண்டாம்.உடனே வாந்தி மூலமாவோ,அல்லது மோஷன் மூலமாவோ குழந்தைகளுக்கு சளீ வெளியாவதை உணரலாம்.ஓமம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கும் பசியை தூண்டும்.இவையெல்லாம் என் குழந்தைகளுக்கு நான் செய்தவை,செய்து கொண்டிருப்பவை.எனவே பயப்பட வேண்டாம்.இது போன்ற கைவைத்தியங்கள் செய்து கொள்வது நல்லது.
தோழி குமாரி சொல்வது போல் பாலில் பனக்கற்கண்டும்,மிளகு சிறிது தட்டியும்,மஞ்சளும் சிறிது சேர்த்து நன்கு காய்ச்சி வெதுவெதுப்பாக குழந்தைகளை குடிக்க கொடுக்கலாம்.அதுவும் மூன்று நாளிலேயே நல்ல பலன் இருக்கும்.இதுதாங்க இருமலுக்கு வைத்தியம்.சமையலிலும் நன்கு மிளகு,சீரகம் ,பூண்டு,இவற்றுடன்,இஞ்சி சிறிய துண்டு சேர்த்து ரசம் வைத்து குழைய சாதத்தில் ஊற்றி பிசைந்து குழந்தைகளுக்கு சளி இருக்கும் கொடுத்தாலும் நன்கு கேட்க்கும்.இது சகோதரி ஜலீலா அக்கா அவர்கள் சொன்னது.
முயன்று பாருங்க சரண்யா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

10 சொட்டு இஞ்சி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து கொடுங்க உடனே சரியாகும்

மிளகுடன் பொரிக்கடலை சேர்த்துபொடியாக்கி ஒருஒருஸ்பூன் 3வேளைகுடுக்கலாம்நான் ஒரு புக்ல பாத்தேன் பா இது பெரியவங்களுக்காக வரட்டு இருமல் வந்தா குழந்தைக்குரொம்ப கஷ்டமா இருக்கும் பா முதல்ல நீங்க குழந்தைநல்மருத்துவரிடம் போய் பாருங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

ரொம்ப நன்றி அப்சரா.... காலைல துளசி சாருல தேன் கலந்து கொடுத்தாங்க அம்மா...சாயுங்காலம் மறுபடியும் கொடுக்கலாம் நு சொன்னங்க....ஜலிலாக்கா சொன்ன மாதிரி ரசம் மதியம் கொடுக்கணும்.....பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி....
நன்றி காமினிசெல்வி, புவனா..

SaranyaBoopathi

ஹாய் சரன்யா , என் அக்கா பையனுக்கு இப்படி தான் இருந்தது, பாலில் சுக்கு+ பணங்கறகணடு போட்டு காய்ச்சி கொடுங்க. தேன் கொடுபதும் நல்லது. சுக்கு சூடு என்பதால் அளவு பார்த்து கொடுங்க.

மேலும் சில பதிவுகள்