பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.
இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:
வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?
விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.
மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.
ஜூட்... தலைப்பு தயார்
யாருமே வராத காரணத்தால் நானே தலைப்பை கொண்டு வந்துட்டேன். கொஞ்சம் மகிழ்ச்சியோட சுவார்ஸ்யமா இந்த தலைப்பை பற்றி பேசுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நடுவர்
ஐயா ஜாலி பட்டி தொடங்கியாச்சி. இதோ வந்துட்டேன். என்ன எவ்வளவு குஷின்னு யோசிகிரீன்களா. என் தலைப்பு அப்படி. இன்னும் புரியவில்லையா? என்னங்க வீட்டுக்கு விருந்தாளி வந்த எங்காவது சங்கட பட முடியுமா சந்தோசம்தாங்க! இப்போ புரியுதா நான் எந்த அணியென்று. நடுவர் நீங்களா ஒரு கலக்கு கலக்கலாம் வாங்க. விரைவில் வருகிறேன் என் ஆயுதங்களுடன்!
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவுதய்
ரேவுதய்.. முதல் ஆளாய் வந்திருக்கீங்க. பிடிங்க சுவையான திருநெல்வேலி அல்வா. :) வாங்க வாதத்தோட... சாரி சாரி... சண்டை போட ஆயுதத்தோட!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நடுவரே
நல்ல தலைப்பு தூக்கம் தொலைத்து உக்கார போரது உருதி. எந்த அணின்னு தேர்ந்தெடுப்பது எனக்கு குழப்பமா இருக்கு எப்படியோ சந்தோஷம் அணியை தேர்ந்தெடுத்திட்டேன் வாதத்தோடு வருகிரேன்.
அன்புடன்
ஸ்ரீ
நடுவரே
அன்பு நடுவரே, ஆபத்தாந்தவியாக தக்க சமயத்தில் நடுவர் பதவி வகித்து பட்டியை தொடர்ந்து நடத்த உதவிதற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். நான் சொன்ன தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு ஸ்பெஷல் நன்றிகள் :) விருந்தாளிகளால் உபத்திரவமே ! என்ற தலைப்பை எடுத்து பேச விரும்புகிறேன். இதோ வாதங்களோடு வந்துக் கொண்டே இருக்கிறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தேவி யோகராணி வனிதா ஸ்ரீ ப்ரியா
தந்தனத்தோம் வந்தனங்கள், என்னப்பா தேவி யோகராணி வனிதா ஸ்ரீ ப்ரியா ம்ற்றும் அனைவரும் எங்கே தூள் கிளப்ப்ங்கப்பு.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
பூங்காற்று
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
விருந்தினர்களின் வருகை சந்தோசமே
விருந்தினர்களின் வருகை சந்தோசமே.. எல்லா நாலும் எழும்புறோம் ச்மைக்கிறோம் சாப்பிடுறோம். அதில ஒரு நாள். மற்றவர்களுக்காக சமைக்கிறதும் சந்தோச்ம் தான். மனம் விட்டுப் பேச ஆள் கிடைத்தால் கேட்க வேண்டுமா.சமையலில் இருக்கோ இல்லையோ உப்பு, காரம் எல்லாம் பேச்சில் இருக்கும்.குழந்தைகளின் கல்வி உடல்நலம் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள். ஊர் உலா, நாட்டுநடப்பு, இப்படி அலசப்படுவது ஏராளம். இங்கே அன்பும் உண்டு தாரளமாக. சின்னச் சின்ன சங்கடங்கள் தோன்றலாம் சிலநேரம் அதையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. நம் வாசல் தேடி வந்தவர்களை மனம் நோகாது அனுசரிக்க வேண்டியது நமது கடமை.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
ஹாய் ரேவதி
ஹாய் ரேவதி நலமா ஸாரிப்பா முன் பதிவில் உங்க பெயர் மிஸ் ஆகிட்டுது. எங்கே உங்கள். வாதங்களையும் முன் வைங்களேன் பார்ப்போம்,
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அன்பு நடுவர் அவர்களே!!!
நடுவர் அவர்களுக்கு வணக்கம்;) நடுவர் அவர்களே!!!! என்ன கேள்வி விருந்தாளிகள் வந்தால் சந்தோசம் இல்லாமலால் இருக்குமா? விதவிதமான சாப்பாடு கிடைத்தால் சந்தோஷம் தானெ வரும். ;)) வாதங்களோடு வருகிறேன்........
உன்னை போல பிறரையும் நேசி.