தேதி: April 30, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - ஒரு கப்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டு - 6
முந்திரி பருப்பு - 5
திராட்சை - 10
நெய் - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் வைக்கவும்.

உளுத்தம் பருப்பை கழுவி வைக்கவும். பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும். குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பு, பூண்டு சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து வேக வைக்கவும்.

பருப்பு நன்றாக வெந்ததும் வெல்லம் சேர்த்து கரைத்து விடவும்.

வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.

ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த திராட்சை, முந்திரியை பாயாசத்தில் சேர்க்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

சுவையான உளுத்தம் பருப்பு பாயாசம் தயார்.

உளுந்து, பூண்டு சேர்ப்பதால் மிகவும் சத்தானதாகும். பாயாசம் ஆனால் பூண்டு சேர்த்து இருக்கு என்று நினைப்பீர்கள், பூண்டு வாசனை வராது. இதில் பூண்டு சேர்ப்பது தான் ஸ்பெஷல். விரும்பாதவர்கள் சேர்க்க வேண்டாம். தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்தும் செய்யலாம். இது திருநெல்வேலி பக்கம் அதிகமாக செய்வார்கள்.
Comments
லக்ஷ்மி
நானும் திருநெல்வேலி பக்கம் 15 வருஷம் வாழ்ந்தவ... இந்த பாயசத்தை சாப்பிட்டிருக்கனானே தெரியல. நான் அப்போ குட்டி பாப்பா (15 வருஷமும் குட்டி பாப்பாவாவே இருந்தீங்களான்னு கேட்க கூடாது... ஏன்னா நான் இப்பவும் அப்படியே தான் இருக்கேன்.). இப்போ செய்து சாப்பிட்டுட்டு அவசியம் மீண்டும் வரேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
லக்ஷ்மி மேம்
வித்தியாசமா ஈஸியா இருக்குது.முயற்சி செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
லஷ்மி
சூப்பரான சத்தான குறிப்பு. யரோ ஔசுவையில் இந்த பாயாசம் எப்படி செய்வதுனு கேட்டுட்டு இருந்தாங்க. வாழ்த்துக்கள் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
லஷ்மி
லஷ்மி சூப்பரான சத்தான பாயசம் வாழ்த்துக்கள்....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
லக்ஷ்மி மேடம்,
லக்ஷ்மி மேடம்,
சுவையான,ஆரோக்கியமான குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
மிகவும் நன்றி
இதை இதை தான் எதிர்பார்த்தேன்...
மிகவும் நன்றி...
நாளைக்கே ட்ரை பண்றேன்...
லக்ஷ்மி
நல்ல சத்தாண குறிப்பு கண்டிப்பா செய்து பார்த்துட்டு மீண்டும் சொல்லவரேன்
அன்புடன்
ஸ்ரீ
லக்ஷ்மி...
லக்ஷ்மி... கருப்பட்டி வைத்து செய்து பார்த்தேன். அருமையான சுவை. பூண்டு சேர்த்தும் வாசனை இல்லாமல் இருந்தது. வுங்கள் விளக்கமான குறிப்பிற்கு மிக மிக நன்றி!
அட்மின்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
நன்றி
வனிதா அக்கா,மீனாள்,ரம்யா கார்த்திக்,செர்ணா,கவிதா,ஸ்ரீதேவி,ஸ்ரீமதி எனது தோழிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
உளுந்தம்பருப்பு பாயாசம்
லெக்ஷ்மி நேற்று இந்த பாயாசத்தை செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. என்னாட பாயாசத்துல பூண்டு போட்டு செஞ்சு இருக்காங்களே எப்படிதான் இருக்குமுனு ட்ரை பண்ணி பார்த்தேன். பூண்டு வாசனையே இல்லை. ரொம்ப நல்லா இருந்தது. சத்தான குறிப்பு கொடுத்ததற்கு நன்றி.
hai தோழி,
இந்த பாயாசம் நானும் சாப்பிட்டிருக்கேன்.திருணெல்வேலி மாவட்டத்தில் இது ரெம்ப famous.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சளி பிடித்தால் இதய் செய்து கொடுப்பாங்க.சளி இறக்கிடும்.இதில் பருத்திகொட்டை பால் எடுத்து கடைசியில் ஊற்றி என் அம்மா செய்வாங்க.சத்தாண பாயாசம்.வாழ்த்துக்கள் lakshmi .
super paayaasam
super paayaasam
hi
thanks ma... easy and tasty... my family like this urid payaasam