கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

கவிசிவா சுகிகிட்ட போட்ட பதிவு பார்த்தேன்... கறுப்பு ஹென்னா உண்மையிலேயே ரொம்ப கவனமா வாங்கனும். சிலருக்கு எத்தனை நல்ல ப்ராண்டு போட்டாலும் ஒத்துக்காது... காரணம் அது கெமிக்கல் பேஸ். எனக்கும் போன முறை போட்டுட்டு எரிச்சலா இருந்ததுன்னு உடனே கழுவிட்டேன். கொஞ்சம் பழைய கோனாக இருந்தாலும் பிரெச்சனை தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துட்டேன் வனி! ஓ அது கெமிக்கல் பேஸ் ஆ! அய்யோ அப்போ நான் கறுப்பு மெஹந்தி போட்டுக்கவே முடியாதா! எனக்கு டிடர்ஜெண்ட் சோப் கூட ஒத்துக்காது. கையில் சின்ன சின்ன ஓட்டை ஓட்டையா விழுந்திடும் :(.

கறுப்பு மெஹந்தி போட்டுக்கிட்ட உடனேயே அரிக்க ஆரம்பிச்சிடுச்சு. உடனே கழுவிட்டேன். இருந்தாலும் அந்த இடமெல்லாம் தடிச்சிடுச்சு. சரியாக ரெண்டு நாள் ஆச்சுது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமா அது கெமிக்கல் பேஸ். கூடவே சென்ஸிடிவ் ஸ்கின் என்றால் எட்ட வைங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அரட்டையில் யாராவது இருக்கிங்களா?

இப்ப தானே நான் பதிவு போட்டேன்... அப்படின்னா நான் இங்க தான் இருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட வச்சுட்டேன் கறுப்பு மெஹந்தி ஆசையை :(.

நாளயிலிருந்து மூணு நாள் நான் லீவ். வழக்கம் போல் சிங்கப்பூர் பயணம்தான். அதுக்குள்ள பட்டியை ஆரம்பிச்சு வையுங்க. வந்து கலந்துக்கறேன். போற வேலை மூணு நாளில் முடிஞ்சுடணும்னு வேண்டிக்கிட்டே போறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இருக்கிங்களா................. எப்பவுமே பதிவு போட்டுட்டு எஸ் ஆகிவிடுவீங்களே....... அதான் இந்த மைக் டெஸ்டிங்...... :) எனக்கு ஒரு டவுட்...... ஒரு இழையில் எத்தனை பதிவுக்கு மேல போனா, புது இழை ஆரம்பிக்கலாம்?

கவிசிவா... எஞ்சாய் பண்ணுங்க ட்ரிப்ப. நானும் திங்கள் தான் வருவேன்னு நினிஅக்கிறேன் :)

தீபா... இருக்கேன்... இருக்கேன்... இருக்கேன்.... 100 பதிவுக்கு மேல போனா ஆரம்பிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க?பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ரெடி ஆயிட்டு இருக்கீங்களா?

ரொம்ப நாள் முன்னாடி ஒரு அரட்டை இழையில் அரட்டைக்கு என்னையும் கூப்பிட்டிருந்தீங்க.அரட்டைக்கு எப்பாவது வர என்னையும் ஞாபகம் வைச்சு கூப்பிட்டிருந்தீங்க.நன்றி வனி.சாரி அப்பவே பதிவு போட முடியலை.

அன்புடன்
நித்திலா

மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனி.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்