தேதி: May 23, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரை கிலோ
எலுமிச்சை - பாதி பழம்
சக்தி கறி மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
ஏலக்காய், கிராம்பு, பட்டை தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும் சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

சிக்கனில் கறி மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், லெமன் சாறு, உப்பு, ஏலம் கிராம்பு பட்டை தூள் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் கடாயை போட்டு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த சிக்கனை போட்டு சிறு தீயில் வேக விடவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம், சிக்கனில் வரும் தண்ணீர் போதும்)

தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போட்டு இறக்கி விடவும்.

சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.

Comments
பாத்திமா
சூப்பரா இருக்கு. அடுத்த முறை சிக்கன் எடுத்த இந்த குறிப்பு தான். :) எல்லாரும் இப்படி சிக்கனா செய்து அசத்தினா நான் எத்தனையை செய்து சாப்பிடுறது. அசத்தலா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்ச
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்ச சிக்கன் செய்து காமிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு அசத்திடிங்க by elaya.G
பாத்திமா
பெப்பர் சிக்கன் சூப்பர் செய்து பார்த்துட்டு சொல்கிறேன் பாத்திமா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ஃபாத்தி
சூப்பர் சிக்கன். வகைவகையா சமச்சு போடறீங்க. உங்க வீட்டு அட்ரஸ் ப்ளீஸ் ;)
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பார்பதற்கு நன்றாக
பார்பதற்கு நன்றாக இருக்கிறது.செய்து பார்த்து சொல்கிறேன் தோழி.
பார்பதற்கு நன்றாக
பார்பதற்கு நன்றாக இருக்கிறது.செய்து பார்த்து சொல்கிறேன் தோழி.
நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி
வனி
வனி முதல் ஆளாய் வந்ததுக்கு நன்றி வருகைக்கு நன்றி
தாமதமான பதிலுக்கு சாரி ஊருக்கு போய்ட்டேன்
இளையா
இளையா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
குமாரி
குமாரி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி
ரம்யா
ரம்யா உங்களுக்கு இல்லாததா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சாரதா
சாரதா பார்க்க ம்ட்டுமல்ல சாப்பிடவும் நன்றாக இருக்கும் வருகைக்கு நன்றி
asalamu alaikum really easy
asalamu alaikum
really easy and tasty...thank u.