தேதி: June 16, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேரட் - துருவியது
வெண்ணெய் - ஒரு கப்
பால் - 2 கப்
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
ஏலக்காய் - 2
பாதாம் - ஸ்லைஸ் செய்தது
சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு கரையும் வரை சூடாக்கவும்.

பின் துருவிய கேரட்டை சேர்த்து கை எடுக்காமல் கிளறவும்.

கேரட் வெந்து சற்று நிறம் மாறியதும், பாலை சேர்த்து நன்கு கிளறவும்.

ஒரு பத்து நிமிடம் கழித்து சர்க்கரை சேர்த்து நன்கு சுருண்டு வரும் பதம் வரை கிளறவும்.

நன்கு கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு மீண்டும் ஒரு முறை சூடு செய்து கிளறினால் கெட்டியாக அதே சமயம் மிருதுவாக வரும் பதத்தை ஒரு கப்பில் போட்டு நெய் தடவிய தட்டில் தட்டவும்.

பின் சமநிலை செய்து, துண்டுகளாக்கி பாதாம் வைத்து அழகுபடுத்தவும். சுவையான கேரட் பர்ஃபி ரெடி.

ஒவ்வொரு முறையும் பரிமாறும் போது சிறிது சூடாக்கி கொடுத்தால், கடையில் வாங்கியது போல சுவையாக இருக்கும்.
Comments
ரம்யா
ரம்யா கேரட் பர்ஃபி சூப்பர் பார்சல் பிளீஸ் வாழ்த்துக்கள்
ரம்யா
சமையல் ராணி நலமா? சூப்பரப்பு.இன்னைக்கே செய்ய வேண்டுமென்று கை துடிக்குது.ரம்ஸ் எங்கிருந்து இவ்வளவு வெரைட்டிஸ் கத்துகிட்டீங்க.என்கிட்ட மட்டும் சொல்லுங்க ப்ளிஸ்.உங்க ஹஸ் ஒரு சுத்து குண்டாகி இருப்பார் தானே.அப்பிடியே எனக்கு ஒரு பிளேட் பார்சல் பண்ணிடுங்க.கலக்குறீங்க போங்க.வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
ரம்ஸ்
ஹாய் ரம்ஸ் சூப்பரோ சூப்பரப்பு. எனக்கு இனிப்பு பிடிக்காது. ஆனால் என் செல்லப்பிள்ளை விரும்பு சாப்பிடுவான். உன்னுடைய குறிப்பை பார்த்தவுடன் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. காலயின்மை காரணமாக ஞாயிற்றுகிழமை தான் செய்ய முடியும். கலர்புல்லான குறிப்பு கொடுத்த உனக்கு என் வாழ்த்துகள்டா.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரம்யா sister
காரட் ஹல்வா இப்படி தான் செய்றதுன்னு நெனைக்றேன் இதே மாதிரி அறுசுவை ல பார்த்து ந செய்துருக்கேன் பட் இது எதோ வித்தியாசமா இருக்கு பர்ஃபி இன்றதாலையோ ! இதையும் சீக்கிரம் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தரேன் by Elaya.G
கேரட் பர்ஃபி,
ரம்ஸ்,
கேரட் பர்ஃபி கலக்கலா செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.கேரட் எத்தனை தேவைனு சொன்னால் செய்து பார்க்க வசதியா இருக்கும்.
காரட் பர்ஃபி
அன்பு ரம்யா,
பார்ட்டிகளுக்கு செய்வதற்க்கு இன்னுமொரு சுவையான குறிப்பு தந்திருக்கீங்க. பாராட்டுக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றிகள் பல
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஃபாத்தி
ரொம்ப நன்றி .. பார்சல் அனுப்பிட்டேன்.. கிடைத்தவுடன் தகவல் சொல்லுங்க ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
மீனாள்
மீனாள். சும்மா ஏதாவது தான் செய்துக்கிட்டு இருக்கேன். அவர் அப்படியே தான் இருக்கார்.. எப்படி செய்தாலும் அவர் அளவு தான் ;(
உங்களுக்கும் பார்சல் செய்துட்டேன்.கிடைத்ததும் சொல்லுங்க ;)நன்றி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரே
கண்டிப்பா செய்து கொடுங்க ரே. வளரும் குழந்தைக்கு நல்லது.கேரட் பால்னு எல்லாமே சத்தானது.. நன்றி ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
இளையா
நான் கிராம்பு சேர்க்காமல் செய்தேன். மேலும் இது செய்ததும் சற்று கடினமாக பர்ஃபி போன்று இருக்கும். அப்படியே சாப்பிடலாம்.. ஆனால் கொஞ்சம் சூடு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் ..நன்றி டா ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஹர்ஷு
ரொம்ப நன்றி.. நான் நம்ம சின்ன மெலிசான கேரட் 4 பயன்படுத்தினேன். நீங்க பாத்திரத்துக்கு தகுந்தாப்ல எடுத்துக்கலாம்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சீதாலஷ்மி
ரொம்ப நன்றி சீதாலஷ்மி..
கண்டிப்பா இதை செய்து பாருங்க.. நான் உங்களை நாளை தொடர்பு கொள்கிறேன் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்மி
நான் இப்படி தான் செய்வேன்...ஆனால் காரட் ஹல்வா (!?) என்று சொல்லுவோம்.....செய்தே மாதங்கள் ஆகிறது....ஒரு பார்சல் :)
படங்கள் எல்லாம் பளிச் பளிச்....கண்ணு கூசும் கலர்ஸ் ;)
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ரம்யா
சூப்பரா இருக்கே... பார்ட்டிலாம் அசத்துறீங்கன்னு குறிப்புகளை பார்த்தாலே தெரியுது :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
ரம்யா,
எளிமையான ஸ்வீட் இந்த வீக் எண்டு செய்யலாம்என்று இருக்கேன் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ரம்யா
கேரட் பர்பி சூப்பர் ரம்யா...ஆனா வெண்ணெய் இவ்வளவு பொடேணுமா ரம்யா அப்பதான் பர்பி பதம் வருமோ..
சூப்பர் குறிப்பு...கண்ணுக்கு அழகு..கேமரா கைகளுக்கு வைர மோதிரம்தான் போடணும்போங்க ..:)
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளா
வரவிற்கு நன்றி.. கண்டிப்பா இத்தனை வெண்ணேய் போட்டால் தான் கடை போல வழிந்து இருக்கும்.. நானும் சிலர் செய்து பார்த்திருக்கிறேன்.. அப்படியே காரட்டில் சர்க்கரை போட்டு கொஞ்சம் நெய் சேர்த்தது போல இருக்கும்.. பச்சை வாசமும் அப்படியே இருக்கும்.
இந்த அளவு போடும் போது கடையில் வாங்குவதை போலே சுவைக் குறையாமல் இருக்கும்.. ;) அப்போ வைர மோதிரம் அவருகுண்டு
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கவி
கண்டிப்பா செய்து பாருங்க. கொஞ்சம் பொருட்கள் தான்.. ஆனா கிளறிக்கிட்டே இருக்கனும்.. நன்றி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வனி
ஹீஹீஹீஇ.. ரொம்ப நன்றி.. பார்ட்டிக்கு கேக் மட்டுமே செய்வேன்.. ;)
இது செய்ய பொருமை வேண்டும்.. ஆமா பார்ட்டி அதிகம் ஆயிற்று.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
லாவி
நான் அல்வானா கேரட்டை நல்லா அரைத்து செய்வேன்.பாதாம் அல்வா போல இருக்கும்.ஆனா கேரட் சாறை வடிக்கட்டி விடனும். ட்ரை பண்ணி பாருங்க.. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி .. ;)
எனக்கும் ஆரஞ்ச் ரொம்ப பிடித்த கலர் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்மி..........
பார்க்கும்போதே யம்மிடா...............
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
அண்ணி
அப்படியா?
அப்ப அபிக்கிட்ட காட்டுங்க..
அவரு ரம்மியையே யம்மினு தானே சொல்றாரு ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
suviyana barfi nandri
suviyana barfi nandri
ஹாய் ரம்ஸ்
ஹாய் ரம்ஸ், கேரட் பர்ஃபி செம சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.....
உன்னை போல பிறரையும் நேசி.
கலர்ஃபுல் கேரட் பர்ஃபி!
வாவ்... ரம்யா, கேரட் பர்ஃபி சூப்பர்! கலர்ஃபுல்லா பார்க்கவே அழகா இருக்கு!.
நான்கூட இப்படிதான் செய்வேன். ஆனால், பேரு லாவண்யா சொன்னமாதிரி, கேரட் ஹல்வா!. நெக்ஸ்ட் டைம், இன்னும் கொஞ்சம் சேர்த்து கிளறி, பர்ஃபியா வெட்டிப்பார்க்கறேன். (எங்க, அதுக்குள்ளதான் எல்லாம் காலியாயிடுதே! :))
சரி, இப்ப ஒரு ஃபாக்ஸ் பார்சல் ப்ளீஸ்! :)
அன்புடன்
சுஸ்ரீ
ரம்ஸ்
ரம்ஸ் பர்ஃபி பார்சல் ப்ளீஸ்.... செம கலரா இருக்குப்பா பார்க்கும்போதே சாப்பிடதூண்டுது :))
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
காரட்டா! பைனாப்பிளா!
நேற்றே கவனித்தேன் ரம்யா. முகப்பில் படம் அசத்தலா இருக்கு. இப்ப பண்ணினா முழுக்க நானே சாப்பிட்டு வைப்பேன். ;) யாராவது வீட்டுக்கு வரப்ப பண்ணிரலாம். அப்ப எப்பிடி இருக்கு என்று வந்து சொல்றேன்.
- இமா க்றிஸ்
இமா
நன்றி,, அவசியம் செய்து பாருங்க ;)
மறக்காம பதிவும் போடுங்க
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஸ்வரு
கண்டிப்பா உங்களுக்கு இல்லாமலா?
:0)..செய்து பார்த்து சொல்லுங்க.. நன்றி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சுஜா
டயட்னு சொல்லி பருப்பும், வெண்ணேய்யும் எப்படி விளையாடுதுனு பாத்திங்களா?
ஹாஹாஹா.. அவசியம் நீங்க செய்து பாருங்க.நன்றி டா
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
தேவி, யாஸ்மின்
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்ஸ்
நல்ல கலர்புல்லான கேரட் பர்பி. சரியான பதத்துல செஞ்சு இருக்கீங்க. புது புது சமையல், புது புது குறிப்புனு அசத்துறீங்க ரம்ஸ்.
வணக்கம் தோழிகளே
நான் அறுசுவைக்கு புதிது. ஹாய் ரம்யா, உங்கள் கேரட் பர்பி சூப்பர்
வினு
ரொம்ப நன்றி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சங்கி
ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு பதி போட்ட நியாபகம். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
kerat parpi
butterku patila oil serka kudatha ramya akka
ஆனந்தி
அடடா..ஏன்..;)
அந்த பட்டரில் தாம்மா விஷயமே இருக்கு..
நான் இதுவரை அப்படி செய்தது இல்லை
நீங்க ட்ரை பண்ணி பார்த்திட்டு நல்லா இருந்தா சொல்லுங்க.. நானும் செய்கிறேன்
ஆனால் பட்டரில் தான் ருசியேப்பா ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பார்த்த அன்றே செய்து
பார்த்த அன்றே செய்து விட்டேன். ரொம்ப சுலபமான சுவையான குறிப்பு. நன்றி தெரிவிப்பதற்காகவே புதிய உறுப்பினராக சேர்ந்துள்ளேன்.
காமாட்சி
அடடா..அப்படியா ரொம்ப நன்றி..அப்போ அறுசுவையில் உறுப்பினர் ஆகாம குறிப்பை மாட்டும் பயன்படுத்தறவங்க நிறைய பேரு இருக்காங்க..;)
கொஞ்சம் கொஞ்சமா வெளியே கொண்டு வரலாம்..
செய்து பார்த்து தவறாமல் வந்து நன்றி செலுத்திய உங்களின் மனதிற்கு என் நன்றிகள் பல.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா
ஹாய் ரம்யா கொஞ்ச நாள் நான் online வரல இப்போ தான் உங்க குறிப்பை பார்த்தேன் கலக்கிடிங்க சூப்பரா இருக்கு
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
குமாரி
ரொம்ப நன்றி.. :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)