தேதி: September 4, 2006
பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரைக்கோப்பை
வெங்காயம் - ஒன்றரை
பச்சை மிளகாய் - நான்கு
தக்காளி - ஒன்று
பூண்டு - ஆறு பற்கள்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்தூள் - நான்கு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரைத்தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு - மூன்று தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
புளியை இரண்டு கோப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய்ப்பூவுடன் பாதி வெங்காயத்தை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை நசுக்கி கொள்ளவும். தக்காளியை புளி கரைசலில் கரைத்துக் கொள்ளவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்துடன், நசுக்கி வைத்ததை போட்டு வதக்கவேண்டும்.
பிறகு உப்புத்தூளுடன் எல்லாத்தூள் வகைகளையும் போட்டு வதக்கி தேங்காய் விழுதைப் போட்டு, புளி கரைசலை ஊற்றி மற்றும் ஒரு கோப்பை நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியான உடன் மீன் துண்டுகளைப் போடவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
Comments
Very very thanks
Today I tried this Recipe,and i found that the fish gravy is very tasteful.Hats off to you madam to share/present this type of useful matters to others.
-Manohar Prabhakar
மனோகரி மேடத்தோட மீன் குழம்பு வாசம் ஊரையே கூட்டும்.....
அன்புள்ள மனோகரி மேடம்,
உங்களுடைய மீன் குழம்பு ரெசிபி சூப்பர்.என் கணவரோட அலுவலகத்தில் பலரும் இந்த ரெசிபி கேட்டிருக்காங்க.அவரோட நண்பர்கள் ரசிச்சு சாப்பிட்டாங்களாம்.எல்லா பாராட்டுகளும் உங்களுக்கே..
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
நன்றி
நன்றி திவ்யா டியர்,இந்த மீன் குழம்பு குறிப்பை சுவையாக சமைத்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி.
I did this fish curry for
I did this fish curry for our lunch party.Everybody appreciated very much.it was just over within minutes.My husband is a big fan of ur recipes.
hats of to u dear.
Please kindly excuse me for typing in english.next time for sure i'll make it in tamil.
மீன் குழம்பு
ஹலோ மித்ரா மீன் குழம்பு குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.இந்த குழம்பு உங்க அனைவருக்கும் பிடித்திருந்தது மிகவும் மகிழ்சியைத் தந்தது நன்றி.
மீன் குழம்பு
மனோகரி அக்கா, ஞாயிறு அன்று உங்க மீன் குழம்புதான் எங்க வீட்டில். Cat fish-ல் செய்தேன். சூப்பராக இருந்தது. குழம்பின் மணம் அது ஃப்ரோஸன் மீனில் செய்தது என்பதே மறந்து விட்டது. பெரிய பாத்திரத்தில் வைத்தும் அவ்வளவும் காலி. அடுத்த முறை அண்டாவில்தான் வைக்கலாம் என்று இருக்கிறேன்:-) எனக்கு கிடைத்த பாராட்டெல்லாம் உங்களையே சாரும். நன்றி உங்களுக்கு.
மீன் குழம்பு
நன்றி வானதி இந்த குறிப்பால் உங்களுக்கு கிடைத்த பாராட்டெல்லாம் உங்களையே தான் சேரும்.மீன் குழம்பை செய்து அனுப்பிய நகைச்சுவையான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.
மனோகரி aunty
மனோகரி aunty,
this isthe first time iam tlking 2 u,நேற்று உங்களுடைய மீன் குழம்பு செய்தேன்,சுவையாக இருந்தது.என் பையனுக்கு(11 mnths) கூட கொஞ்சம் போல் கொடுத்தேன்,சப்புக் கொட்டிக்கிட்டு சாப்பிடான்.அவருக்கும் பிடிச்சுப் போச்சு.ஆனா மீன் வாசனையே இல்லைன்னு சொன்னார்,எனக்கு மீன் பேர் தெரியலை.(i think it is எறா,) என்ன காரணமா இருக்கும் aunty...