தலைவெடிக்கும் போல் இருக்கு

தோழிகளுக்கு காலை வணக்கம்.எனக்கு தலைவெடிக்கும் போல் இருக்கு என் கணவருக்கும் என் பெண்ணிற்கும் சமையல் செய்து ௮ மணிக்குள் தரவேண்டும் .அவர் ஆபீஸ் கிளம்புவார் பொண்ணு பள்ளிக்கு கிளம்புறா ஆறு மணிக்கு எழுந்து மதியத்துக்கும் சமச்சி காலை உணவும் செய்யறதுக்கு எனக்கு நேரம் பத்தவில்லை தயவு செய்து ஒரு யோசனை சொல்லுங்கள்

காலை உணவு ,மற்றுm ஒரு பொரியலுடன் மதிய உணவு செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது உங்களுக்கு எல்லாம் ஏன் எனக்கு நேரம் போதவில்லை .நான் வேலைக்கு செல்லவில்லை அதனால் வீட்டு வேலை எல்லாம் நானே செய்கிறேன் அதனால் நேரம் பத்தவில்லையா உதவுங்கள் தோழிகளே.

இது சகஜம் தானே... இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க??? ;)

இதை ட்ரை பண்ணுங்க:

1. இரவே காலையில் என்ன செய்ய போறீங்கன்னு முடிவு பண்ணிடுங்க... காலையில் என்ன இருக்குன்னு தேடி அப்போ யோசனை பண்ணா அதுக்கே 1 மணி நேரம் காணாம போயிடும்.

2. இரவு என்ன செய்வதுன்னு முடிவு பண்ணதும் அந்த காய்களை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வெச்சுடுங்க.

3. சமைக்கும் முன் தேவையான எல்லாம் பக்கத்தில் எடுத்து வைங்க, தாளிக்க அது இதுன்னு என்ன தேவையோ எல்லாம். இல்லன்னா அதை எடுக்க இதை எடுக்கன்னு நடந்தே னேரம் போகும்.

4. சாம்பார், சாதம் இரண்டும் சேர்த்து ஒன்னா குக்கரில் வைங்க... ஒரே நேரத்தில் இரண்டும் தயார் ஆகும். அதுக்குள்ள சாம்பார் தாளித்து, புளி ஊற வைத்து வெச்சுட்டா எடுத்ததும் 10 நிமிஷ வேலை தான்.

5. கார குழம்பு, புளிக்குழம்புன்னு செய்வதாக இருந்தால் இரவே கூட செய்ஹ்டு வெச்சுட்லாம், காலை சாதம் மட்டும் வைக்கலாம்.

6. இருக்குறதுலையே கஷ்டமான வேலை, நேரம் அதிகமாவது பொரியல் காய் நறுக்குவது தான்... அதை இரவில் டிவி பார்க்கும்போது, எல்லாரோடையும் பேசிட்டே செய்துட்டா நிச்சயம் காலையில் நிறைய நேரம் கிடைக்கும்.

7. அடுப்பை சும்மா போடாம ஒரு அடுப்பில் ஒரு வேலை நடக்கும் போதே பக்கத்தில் என்ன அடுப்பில் போட்டா வேலை சீக்கிரம் ஆகும்னு யோசிங்க.. செய்யுங்க. உதாரணமா... என் அம்மா சாம்பார் குக்கரில் இருந்து எடுத்த பின் தான் தாளிக்க தயார் ஆவாங்க... ஆனா நாங்க பண்ணா, குக்கரை வைத்ததும் பக்கத்து அடுப்பில் பொரியல் வதக்கி, சாம்பாருக்கு தாளிச்சு விடும்... எங்களுக்கு சமையல் நேரம் 1 மணி நேரம் தான். அம்மா 2 மணி நேரம் செய்வாங்க.

8. டிபனுக்கு மாவு பிசைவது போன்ற வேலை எல்லாம் இரவே செய்து airtight container ’ல போட்டு வைங்க.

9. சட்னி போன்றவை செய்து ஸ்டோர் பண்ண முடிஞ்சா அது போல் வகைகள் செய்து ஸ்டோர் பண்ணிக்கங்க.

டென்ஷன் ஆகாதீங்க... சமைக்கும் போது ரிலாக்ஸ்டா இருந்தாலே வேலை சீக்கிரம் ஆகும்... டென்ஷன் ஆனா 1 வேலைக்கு இரண்டு வேலை செய்ய வேண்டியதாயிடும். நம்ம பொதுவா இது என்ன சின்ன வேலை, காலையிலயே பார்த்துக்கலாம்’னு ஒவ்வொரு வேலையும் காலை நேரத்துக்கு ஒத்தி வைத்தால் தான் மொத்தமா சேர்ந்து நிறைய நேரத்தை பிடிக்கும்... அதை விட சின்ன வேலையாக இருந்தாலும் முபே செய்து வைக்க கூடியதை செய்து வைத்து விட்டால் நேரம் நிறைய கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப நன்றி வனிதா உங்கள் யோசனை படி செய்கிறேன் .முதல் நாள் காய் கட் செய்தால் வீனாகாதா?அதன் சத்து போய்டும்னு சிலர் சொன்னதால் நான் இதுவரை அபப்டி செய்தது இல்லை

வெங்காயம் இரவே கட் பண்ணி வைத்தால் வெங்காய ஸ்மெல் வரது மட்டும் இல்லாமல் பிரிஜிம் நாற்றம் வருதெஹ் இதுக்கு என்ன பண்ணலாம்.

//சமைக்கும் முன் தேவையான எல்லாம் பக்கத்தில் எடுத்து வைங்க, தாளிக்க அது இதுன்னு என்ன தேவையோ எல்லாம். இல்லன்னா அதை எடுக்க இதை எடுக்கன்னு நடந்தே னேரம் போகும்.//. (நூற்றுக்கு நூறு உண்மை இது நான் டெய்லி செய்யறது..)

// நம்ம பொதுவா இது என்ன சின்ன வேலை, காலையிலயே பார்த்துக்கலாம்’னு ஒவ்வொரு வேலையும் காலை நேரத்துக்கு ஒத்தி வைத்தால் தான் மொத்தமா சேர்ந்து நிறைய நேரத்தை பிடிக்கும்...//
முடிலும் உண்மை காலைல செய்யலாம்னு ஒத்தி போட்டு வேலை அதிகம் ஆகிறதுதான்

மிக்க நன்றி வனிதா சிரமம் பார்க்காமல் எனக்கு உதவி செய்ததுக்கு..சில நேரத்துல டைம் ஆகுதுன்னு நான் அழுததும் உண்டு..ஹா ஹா ஹா

ஒரு வார்த்தை கவிதை "நீ"

வெங்காயம் வெட்டி வைக்கவே கூடாதுன்னு சொல்வாங்க... அதனால் அந்த ஒரு வேலையை காலையிலேயே பாருங்க :)

காய் வெட்டிட்டு கழுவ தான் கூடாது... வெட்டி ஸ்டோர் செய்யலாம்... தப்பில்லை.

உங்களுக்கு பதில் சொல்றதுல சிரமம் ஏடும் இல்லை தோழி... நேரம் கிடைச்ச பதில் போடுறேன். இல்லன்னா மற்ற தோழிகள் சொல்லி இருக்க போறாங்க. காத்திருங்க இன்னும் எக்கச்சக்க ஐடியாஸோட தோழிகள் வருவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காய்களை இரவே நருக்கி வெச்சா சத்து வீணாகும் ல.

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

மேலும் சில பதிவுகள்