குழந்தையின் அசைவு பற்றி கூற முடியுமா?

எனக்கு ஐந்து மாதம் முடிந்த பின்பும், குழந்தையின் அசைவு தெரியவில்லை, Dr. அசைவு தெரிய ஊசி போட்டார். பின்பும் தெரியவில்லை. ஆனால் ஸ்கேன் ரிப்போர்டில் குழந்தை நன்றாக உள்ளது யாருக்கேனும் இப்படி பட்ட அனுபவம் உண்டா தெரிந்தவர்கள் கூறவும்.

இது உங்களுக்கு முதல் குழந்தையாக இருந்தால் அசைவுகள் தெரிய 8 மாதம் ஆகும்,அல்லது குழந்தை சிறியதாக இருந்தாலும் சரியாக அசைவுகள் தெரியாது.8மாதம் வரை காத்திருந்து பாருங்க!

Eat healthy

குழந்தையின் அசைவை பற்றி 8 மாதத்தில் இருந்து கவலைப்பட்டா போதும்னு எனக்கு டாக்டர் சொன்னாங்க... அதனால் இப்போ அந்த கவலை விட்டுட்டு உங்க குழந்தையோடு நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ணுங்க, நல்லா பேசுங்க... நான் என் பொண்ணு உள்ள இருந்தப்போ அவ கையை பிடிச்சதா நினைச்சுகிட்டு டேன்ஸ்லாம் ஆடுவேன்... ;) அது ஒரு தனி மகிழ்ச்சி... அனுபவிங்க. இந்த கவலை எல்லாம் இப்போ வேண்டாம். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

FOR ME TOMORROW SEVENTH MONTH GOING TO START .STILL I DONT FEEL FREQUENT MOVEMENT . BUT DOCTOR TOLD ME BABY IS GOOD AND ACTIVE . BACAUSE OF PLACENTA POSTION SOME FEMALE WILL NOT FEEL EARLIER . SO DONT WORRY . TALK TO YOUR BABY .

தங்கள் பதிலுக்கு நன்றி ரசியா, எனக்கு முதல் குழந்தை தான், ஆனால் ஸ்கேனில் குழந்தை 3X அளவு பெரிதாக உள்ளது என்று கூறினார் Dr .ஆறுதலான பதிலை கூறினீர்கள் நன்றி.

நன்றி வனிதா,, என் மன குழப்பத்திற்கு சரியான பதில் கூறினீர்கள். 5 மாதத்தில் கூட பசி இல்லாமல் இருக்குமா?

Thanks for ur reply,and congrads

பசி எடுக்காதுங்க... ஆனா சாப்பிடுங்க. சிலருக்கு பசிச்சுட்டே இருக்கும், சிலருக்கு வயிறு குறைஞ்சு போறதால பசிக்காத மாதிரி இருக்கும்... அது ஒவ்வொருத்தர் உடல் வாகு... அதை பற்றிலாம் கவலை வேண்டாம்... நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாயாக போகும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நீங்களே சொல்லியிருக்கீங்க குழந்தையின் வளர்ச்சி மூன்று மடங்கு என்று அதனால் தான் வயிற்றுக்குள் அவர்களின் சேட்டை வெளியே அவ்வளவாக உங்களுக்கு தெரியவில்லை. சிலருக்கு குழந்தை பிறக்கும் வரையிலுமே தெரியாது. சிலருக்கு எட்டு மாதங்களிலும் தெரியலாம். உங்களின் மருத்துவர் குழந்தை நன்றாக இருக்குது என்று சொல்லியபின் அதை பற்றி கவலைப் பட தேவையே இல்லை. அதுவும் இல்லாமல் சிலருக்கு "anterior placenta" இருந்தால் குழந்தையின் அசைவு தெரியாது என்பார்கள். அப்படி இருப்பதால் எனக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பிரச்னையும் கண்டிப்பாக இல்லை.

எப்பொழுதுமே குழந்தை வளர வளர பசிக்காது. ஏனென்றால் வயற்றில் இடமும் இருக்காது. அதனால் தான் சிறிது சிறிதாக அவ்வபோது சாப்பிட சொல்லுகிறார்கள். குழந்தை வளருவதால் நம் லங்க்சை அழுத்தும் diaphragm அதனால் சில நேரம் நெஞ்சு கரிப்பு கூட ஏற்ப்படும். இரண்டு உயிர் என்று ரொம்பவும் அதிகமாக எல்லாம் சாபிட்டால் ரொம்பவே வேய்ட் போட்டுட்டு அப்புறம் குறைக்க எங்களை மாதிரி திண்டாட வேண்டியது. எப்பொழுதும் போல சாப்பிடலாம். ஆனால் தினமும் கீரை, காய்கறிகள், புரதம், கால்ஷியம், இரும்பு சத்து மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும்.

வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா ரொம்ப நன்றி, என்னுடைய சந்தேகம் தீர்ந்து விட்டது.நீங்கள் கூறிய உணவு முறைகளை பின்பற்ற முயற்சி செய்கிறேன். இப்போது தான் நான் நிம்மதியாக இருக்கிறேன்.

தோழிகலே உதவுங்கள்.
எனக்கு இது 5 வது மாதம்.முதலில் எந்த‌ அசைவும் தெரியவில்லை.ஆனால் இன்ரு காலையில் இருந்து அடிக்கடி வயிர்ரில் எதோ உருலுவது போல் உல்லது.இது நார்மல் தான‌ பா.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

மேலும் சில பதிவுகள்