ஆடிக்கூழ்

<!--break-->Aadhy koll seiyvathu epady????

அடிகூழ்

உங்கட பேரை ஒருக்கா தமிழில எழுதினால் உதவியாக இருக்கும்.
எனக்குச் செய்யத் தெரியாது. இது நர்மதாட குறிப்பு. www.arusuvai.com/tamil/node/6153 சந்தோஷமா ஆடிப்பிறப்புக் கொண்டாடுங்கோ. ;)
ஒடியற்கூழ் ரெசிபி வேணுமெண்டால்.. www.arusuvai.com/tamil/node/6154 இதுவும் நர்மாதாவின்டதுதான்.

‍- இமா க்றிஸ்

உங்க பதிவைப் பார்த்து குழம்பி போயிட்டேன். மன்னிக்கவும், நான் இப்படித்தன் வாசிச்சேன்... ஆதிக் கொள், அடிக் கூழ். ஆடிக் கூழ்னாலும் எனக்குத் தெரியாதுதான். ஹி ஹி ஹி...

நீங்க புதுசுன்னு நினைக்கிறேன். மனம் வருத்தப்படும்படி நான் பேசியிருந்தா மன்னித்துக் கொள்ளவும்.

நர்மதா சமையல் சூப்பராக இருக்கும். தைரியமா அந்த லிங்கில் இருக்கும் சமையலை முயற்சியுங்க.

இமா ராதிகாவா இருக்குமோ? நமக்கு கால்குலேட் பண்ணலைன்னா மண்டை வெடிச்சுடும்..விக்ரமாதித்தன் கதை போல...

புதுசா வரவங்களை இப்பிடி விரட்டப்படாது தேன். நல்வரவு சொல்லணும்.
(நல்ல வேளை, உங்க கெஸ்சிங்கை இந்த அளவோட நிறுத்திட்டீங்க.) ;))

நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ Thrathika. இங்க இப்பிடித்தான், ஆனால் எல்லாரும் நல்லா உதவி செய்வினம்.
'ஆ' எழுத, aa இல்லாட்டால் A தட்டுங்க.
கூழ் செய்த பிறகு, அங்க நர்மதாவின்ட குறிப்புக் கீழ, எப்பிடி வந்தது எண்டு சொல்லவேணும், சரியா?

‍- இமா க்றிஸ்

தங்கள் அறுசுவை வரவு நல்வரவாகுக.

இமா, சொல்லிட்டேன். :)

தேன்...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 ஆடிப்பிறப்புப் பற்றிச் சிறுகுறிப்பு இங்க இருக்குது, பாருங்க.
(முடிவில இருக்கிறதைப் பற்றி வந்து சந்தேகம் கேட்டால்... இமா காணாமல் போயிருவன், சொல்லீட்டன்.) ;))

ஆடிப்பிறப்பு பற்றி நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் எழுதின பாட்டு ஒண்டு இருக்குது...

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே,
கூடிப் பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே... எண்டு தொடரும்.

விருப்பமெண்டால் நெட்ல தேடிப் பாருங்கோ. கொஞ்சம் சுவாரசியமான பாட்டு அது, எப்பிடிக் கொழுக்கட்டை செய்யிறது; எப்பிடிக் கூழ் குடிக்க வேணும் எண்டெல்லாம் ரசிச்சுச் சொல்லி இருப்பார் புலவர்.

பி.கு
;) நல்வரவு சொன்னதுக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

Nandri for unkal helpuku:-)

ஒரு உதவி... த்ரெட் தலைப்பில //Helpp me plss// எண்டு போட்டு இருக்கிற இடத்தில 'ஆடிக்கூழ்' எண்டு போட்டால் பிற்காலத்தில தேடுறவங்களுக்கு உதவியாக இருக்கும். மாற்றி விடுங்கோ.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்