தயிர் சிக்கன்

தேதி: July 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

கோழி - அரை கிலோ
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டுதூள் - 1 1/2 தேக்கரண்டி
தயிர் - 4 தேக்கரண்டி
ப்ரட் க்ரம்ஸ் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
உப்பு - அரை தேக்கரண்டி


 

கோழியை சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராய் வைக்கவும்.
கோழியில் மிளகுதூள், பூண்டுதூள், உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும்.
பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.
ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
ஊறின கோழியை ஒவ்வொன்றாக எடுத்து ப்ரட் க்ரம்ஸில் போட்டு எல்லா பக்கமும் படுமாறு பிரட்டி எடுக்கவும்.
பிரட்டி எடுத்த கோழிகளை இவ்வாறு எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான தயிர் சிக்கன் தயார்.

இந்த தயிர் சிக்கனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர், காரம் அதிகம் இல்லாமலும், மசாலாக்கள் இல்லாமலும் செய்வது. மிளகும், பூண்டும் உடலுக்கு நல்லது, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகின் அளவை கூட்டிக் கொள்ளலாம். பூண்டு தூள் இல்லாவிட்டால் பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்பவே ஈஸியா வித்தியாசமா இருக்குது. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ரசியா.

Expectation lead to Disappointment

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு சூப்பர் சீக்கிரமே செய்து பார்த்துவிட்டு வரேன் எப்படி இருந்ததுன்னு சொல்ல by Elaya.G

ஈஸியான அதிகம் மசாலா இல்லாத சிக்கன் ப்ரை சூப்பரா இருக்கு. குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ப்ரட் க்ரம்ஸ் சேர்த்து மொறு மொறு இருக்குல.

ஹாய் ரசியா செய்வதற்கு மிகவும் எளிமையா இருக்கு நிச்சயம் செய்கிறேன் என் பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

பாக்கவே ரொம்ப அசத்தலா இருக்குதே நிச்சயம் அடுத்த முறைகோழிவாங்கும் போது உங்க ரெசிபிதான்

நல்ல சுலபமான சுவையான குறிப்பு. கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளா வந்து பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி மீனால்,செய்து பாருங்க!

Eat healthy

கண்டிப்பா செய்து பார்துட்டு சொல்லுங்க ஜெனிலயா!நன்றி உங்களுக்கு!

Eat healthy

ஆமாம் குழந்தைகளுக்காக செய்யும் டிஷ்தான் இது,பெரியவங்களுக்கும் பிடிக்கும்,செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க!நன்றி!

Eat healthy

ஈஸியான ரெசிபிதான்,கண்டிப்பா செய்து பாருங்க,மசாலாக்கள் அதிகம் சேர்க்காமல் செய்வதால் குழந்தைகளுக்கு பிடிக்கும்,அதுவும் இது மொறு மொறுன்னு இருக்கும்.

Eat healthy

என் ரெசிபியை செஞ்சா மட்டும் போதாது,என்னையும் சாப்பிட கூப்பிடனும்,கூப்பிடுவீங்களா?!!!!

Eat healthy

என்ன ஒரு வரியில் உரையை முடிச்சிட்டீங்க?!நன்றி

Eat healthy

ரசியா சலாம் தயிர் சிக்கன் நல்ல எழிமையா இருக்கு செய்துட்டு வருவேன்
தலைபெருனால் வாழ்த்துக்கள் ரசியா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

நல்ல குறிப்பு தோழி

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி பல்கிஸ்!தலைப் பெருநாளா?!!!!!!!!!உங்களுக்கு என் ரமலான் வாழ்த்துக்கள்!அல்லாஹ் இந்த வருட நோன்பை முஸ்லிம்கள் அனைவருக்கும் மிக சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்கட்டும்!ஆமீன்!

Eat healthy

வ அலைக்குமுஸ்ஸலாம் ஆமினா அவர்களே!நன்றி தோழி!உங்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

Eat healthy

ஹாய் ரசியா அஸ்ஸலாமு அலைக்கும்
தயிர் சிக்கன் செய்து பார்த்தென் ரொம்ப ருசியா இருந்தது
வித்தியாசமா இருந்தது சூப்பர்
இனிய இனிய இனிய ரமலான் வாழ்த்துக்கள்:)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

சுலபமான சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சிக்கன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்க முறைப்படி செய்துட்டு சொல்றேன் ரஸியா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தாமதமான பதிலுக்கு சாரி!உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி!ரமலான் முழுவதும் கம்ப்யூட்டர் பக்கம் வரவே இல்லை,அதான் இப்போ பதில் எழுதுகிறேன்!

Eat healthy

நன்றி ஸ்வர்னா & குமாரி செய்துட்டு சொல்லுங்க!

Eat healthy