மனசே ரிலெக்ஸ் ப்ளீஸ்.....

அன்பு தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்....
சில சமயம் நம் எல்லோருமே ஒரு இனம் புரியாத ஒரு கவலையில் ஆழ்ந்திருப்போம்... காரணம் புரியாது,,மனம் கிட்ட தட்ட அழுத்தப்பட்ட நிலையில்,விவரிக்க இயலாத நிலையில்,வாட்டம் கொள்ளும்.எனக்கும் சில நாட்களாய் அதே நிலை...மனம் எந்த விஷயத்திலும் ஒன்ற மறுக்கிறது....அதில் இருந்து மீள வழி சொல்லுங்கள்..ப்ளீஸ்...

ஹாய் சங்கி, மனதில் உள்ள குழப்பங்களுக்கு நம் ஆழ்மன எண்ணங்கள் தான் மிக பெரிய காரணமா இருக்கும் சங்கீ. நானும் நிறைய முறை இப்படி உணர்ந்திருக்கேன், யோசித்து பார்த்தால் மனதிற்குள் இருக்கும் ஒரு ஆதங்கம், வாழ்க்கை பற்றிய சில கவலைகள் தான் இதற்கெல்லாம் காரணமாயிருக்கும்.

எதுக்கும் மனதை குழப்பிக்கொள்ளாதீங்க, அத அதுபாட்டுக்கு விட்டுவிடுங்க, அதுவும் குறிப்பா மனம் சரியான நிலையில் இல்லாத போது என்னாச்சு, ஏன் நாம் இப்படி இருக்கோம் என்கிற எண்ணங்கள் எழும், அந்த எண்ணம் வர விடாதீங்க, ஏதாவது சுகமான பாடல், இல்லைன்னா, ஒரு வாக், சில பேர் மிக மகிழ்ச்சியா பேசுவாங்க, அந்த மாதிரி நண்பர்களுடன் பேசுங்க, இல்லைனா வீட்டில் உள்ள பெரியவர்கள் தாத்தா பாட்டி, இல்லைன்னா குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். என்னை பொறுத்தவரை மனதிற்கு டானிக் வயதானவர்களும், குழந்தைகளும் தான்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் சங்கீ இது போல மனம் அழுத்தம் உள்ள நேரத்தில் தனியா இருப்பதை நான் தவித்து விடுவேன்.ஓன்று தோழிகள் வீட்டுக்கு சென்று பேசிகொண்டிருபேன் .இல்லையேல் தொலை பேசியிலாவது பேசுவேன்.தனியா இருந்தோமானால் சுய இரக்கத்தால் இன்னும் நம் மன நலன் பாதிக்கப்படும்.குழந்தைகளுடன் பேசிப்பாருங்க நம் மனம் லேசாவது தெள்ளத்தெளிவாக தெரியும்.காமெடி சேனல் போட்டு மனம்விட்டு சிரிக்கலாம்.இன்னும் எவ்வளவோ மனதை லேசாகக விஷயங்கள் இருக்கு.அதை விடுத்து சோககீதம் பாடிநோமானால் நோய் நாம் அழையா விருந்தாளியாக நம் வீட்டின் கதவை தட்டும். அதனால் மனதை ரிலாக்ஸ்டா வச்சுகங்க.

ஹாய் சங்கீ இது போல மனம் அழுத்தம் உள்ள நேரத்தில் தனியா இருப்பதை நான் தவித்து விடுவேன்.ஓன்று தோழிகள் வீட்டுக்கு சென்று பேசிகொண்டிருபேன் .இல்லையேல் தொலை பேசியிலாவது பேசுவேன்.தனியா இருந்தோமானால் சுய இரக்கத்தால் இன்னும் நம் மன நலன் பாதிக்கப்படும்.குழந்தைகளுடன் பேசிப்பாருங்க நம் மனம் லேசாவது தெள்ளத்தெளிவாக தெரியும்.காமெடி சேனல் போட்டு மனம்விட்டு சிரிக்கலாம்.இன்னும் எவ்வளவோ மனதை லேசாகக விஷயங்கள் இருக்கு.அதை விடுத்து சோககீதம் பாடிநோமானால் நோய் நாம் அழையா விருந்தாளியாக நம் வீட்டின் கதவை தட்டும். அதனால் மனதை ரிலாக்ஸ்டா வச்சுகங்க.

) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

நீங்க சொல்வது புரிகிறது. சில நேரம் நாம் என்ன யோசிக்கிறோம், மனதில் என்ன இருக்கிறது என்றே புரியாது, ஆன வருத்தமா இருக்கும், அழனும் போல தோனும்... காரணம் இருக்காது... எதுவுமே நடக்கலன்னா கூட ஏதோ நடந்த மாதிரி மனசு பாடாபடும். இது போல் நிலை எனக்கு அடிக்கடி வருவது உண்டு. ஏன்னு எனக்கு தெரியாது... ஆனா இப்போலாம் அந்த நிலை வந்தா அடுத்த சில நிமிஷங்களிலேயே அதை விட்டு வெளியே வந்துருவேன். எப்படின்னு கேக்கறீங்களா???

1. ஒன்னு மெகந்தி போட உட்கார்ந்துடுவேன்... அதில் கவனம் போச்சுன்னா கொஞ்ச நேரத்தில் என் மனசு எதை யோசிச்சுதுன்னு எனக்கே மறந்து போகும். உங்களுக்கு பிடிச்ச எதையாவது செய்யுங்க... கவனம் திரும்பும்.

2. இல்லன்னா குழந்தைகளோடு விளையாட போயிடுவேன்.

3. இது எதுவும் செய்யலன்னா அடுத்த நிமிஷம் எனக்கு நானே நம்பிக்கை சொல்வேன்... நான் நலம், எனக்கு ஒரு குறையும் இல்லைன்னு என்னை நானே நம்ப வைப்பேன். ஏதோ கஷ்டமா இருக்கே இருக்கேன்னு நினிஅச்சுட்டே இருந்த அந்த கஷ்டம் நம்மை விட்டு போகாதே... அதனால் கஷ்டம் இல்லைன்னு நம்பனும் முதல்ல. நம்புங்க... மாற்றம் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது போன்ற நினைப்பு சில சமயம் வரும். சந்தோசமாக வாழ்ந்தாலும் சரி மனசு ஒரு ஸேசுரேஷன்க்கு பொய் இப்படி நினைக்க தோனும்

அந்த சமயத்தில் ஏன் இப்படி இருக்கோம்னு எல்லாவித கேள்வியும் கேளுங்க.. உடனுகுடனே தீர்வும் சொல்லிட்டே வாங்க.. உதாரணத்துக்கு..

இன்னிக்கு அவர் திட்டிட்டாரே...அதனாலையா? பதில்-- அவருக்கு தானே உரிமை இருக்கு அவர் திட்டாம யாரு ?

விழுந்திட்டோமோ அதனால இப்படி இருக்கேனா? பதில்-- சரி இனி பார்த்து நடக்கனும்..

அவங்க இப்படி மனசு கஷ்டபடற மாதிரி நடந்திட்டாங்களே -- பதில் --- அவங்க யாரு? எத்தனை நாள் நம்மக் கூட வரப் போறாங்க.. முடிந்தவரை சமாளிப்போம் இல்லைனா ஒதுங்கி இருப்போம்..

இது மாதிரி சின்ன சின்ன சில்லி விஷயத்தைக் கூட விடாமல் யோசித்து கையோட பதிலும் சொல்லிட்டு வாங்க.. கடைசியா யோசிச்சா ஒன்னுமே இருக்காது.அப்றம் ஏன் கவலையில் உக்காந்து இருக்கனும்..

யோசிச்சு ஒன்னுமே தோனலையா? அப்போ ஏதுமே மனசுல இல்லை ..ஆனா ஏதோ ஒரு பாரம் தான்... :) எத்தனையோ பாத்துட்டோமாம்..இதை பாத்துக்க மாட்டோமா..சப்ப மேட்டருனு வேலைய பாருங்க.. சரியா ?..உண்மை ..இதை செயல்படுத்தி பாருங்க.வித்தியாசம் தெரியும் ..

இப்ப நாம சாப்பிட உணவு, தண்ணி, படுக்க இடம், குளிருக்கு போர்வை நினைத்தை செய்யும் அளவில் ஆண்டவன் வைத்திருப்பதே எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? ஒரு வேலை சாப்பிடவே உயிரை கொடுத்து வேலை செய்பவர்கள் இருக்காங்க சங்கி ;(..சந்தோசமா இருங்க.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி பவித்ரா. நீங்கள் சொல்வது சரிதான்.குழந்தைகள் நம் மனதிற்க்கு நல்ல டானிக்..உங்கள் ஆலோசனைப்படி செய்கிறேன்..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

வனிதா நிச்சயம் அந்த மனனிலையில் இருந்து வெளிவருவது ஒரு மிகப்பெரும் கலைனுதான் நினைக்கிறேன்,நீங்க சொல்வது புரிகிறது.அந்த நிமிடம் நமக்கு பிடித்த யாராவது துணை இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.கடவுளைத்தான் உடனே வேண்டிக்கொள்வேன்...உங்க அலோசனைக்கு மிக்க நன்றி....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப தெளிவா பதில் கொடுத்து இருக்கிங்க...நீங்க சொன்ன ஒவ்வொரு வரியும் ஆழமானவை, அருமை. என் மனதிற்க்கு நல்ல மருந்தாக உள்ளது.

கருத்துக்கள் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

////////இப்ப நாம சாப்பிட உணவு, தண்ணி, படுக்க இடம், குளிருக்கு போர்வை நினைத்தை செய்யும் அளவில் ஆண்டவன் வைத்திருப்பதே எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? ஒரு வேலை சாப்பிடவே உயிரை கொடுத்து வேலை செய்பவர்கள் இருக்காங்க....///////

சரியா சொன்னீங்க பவித்ரா
ஆமா இது உண்மை தான், ஆனாலும் சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் மனசு என்ன பாடு படுகிறது.

ராஜி

மேலும் சில பதிவுகள்