அறுசுவையை பார்வையிடலாம்

அன்பு நேயர்களுக்கு,

அறுசுவை வலைச்சேவையகத்தை சரி செய்து, மீண்டும் புதிதாக அனைத்து மென்பொருட்களையும் நிறுவி, அறுசுவையை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். இருப்பினும் சில பிரச்சனைகளை தீர்க்க இயலவில்லை. அந்த பிரச்சனைகளை களைய இதைவிட நல்ல சேவையகத்திற்கு மாறுதல் ஒன்றுதான் தீர்வாக உள்ளது. விரைவில் அதற்கான முயற்சிகளில் இறங்குகின்றோம். இன்னும் சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருப்பதால், திங்கட்கிழமை முதல் அறுசுவையில் புதிய சேர்க்கைகள் இடம்பெறாது. குறிப்புகள் பங்களிப்பவர்கள் உங்கள் பங்களிப்பை தொடரலாம். மன்றப் பதிவுகளுக்கும் இனி கட்டுப்பாடு கிடையாது. அறுசுவையை பார்வையிடுதலிலோ, பதிவுகள் கொடுப்பதிலோ ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடன் இங்கு தெரியப்படுத்தவும்.

நன்றி.

அன்பு அட்மின் அவர்களுக்கு எப்டி இருக்கீங்க?உங்க அன்பு மனைவி எப்டி இருக்காங்க, முக்கியமாக அம்மாவின் மனத்தில் இடம் பெற்று விட்டார்களா? அதை அம்மாவைக் கேட்டாத்தான் தெரியும் என்று நழுவ வேண்டாம்,ஒழுங்கா வந்து சொல்லுங்க.
நமது தளத்தை மீண்டும் பார்வையிடுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. தளத்தின் சர்வர் பிரச்சனையை முற்றிலும் அகற்ற தாங்கள் ஆற்றிவரும் கடின சேவைகளுக்கு நேயர்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கும், உங்களோடு பணிபுரியும் அலுவலகத்தார் அனைவருக்கும் எங்கள் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம். மேலும் தளத்தை மென் மேலும் பொலியுறச்செய்ய தாங்கள் மேற்க்கொள்ளும் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றிப்பெற மனதார வாழ்த்துகின்றேன். நன்றி.

அன்பு சகோதரி அவர்களுக்கு,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நான் முயற்சிகள் மேற்கொண்டு வருவது உண்மைதான். ஆனால், அந்த முயற்சிகளில் முழுவதுமாக வெற்றி பெறவில்லை. இன்னமும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. அதிகத்திறன் கொண்ட வேறு ஒரு சர்வருக்கு அறுசுவையை மாற்றுவதுதான் இதற்கு தீர்வாக இருக்கமுடியும். அறுசுவைக்கு வருகைத்தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாம் தற்போது பயன்படுத்தி வரும் சர்வர் பொருத்தமானது அல்ல என்பது தெரிகின்றது. இதன் திறன் போதாது. சர்வர் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்கின்றேன். சர்வர் மாற்றியபின்புதான் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அதுவரை பொறுத்தருளுங்கள்.

உங்கள் அனைவரின் ஆசியில் மனைவி நலமாக இருக்கிறார். மூன்று வருடங்களாக எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பழகி வருவதால், ஏற்கனவே எல்லோர் மனதிலும் இடம்பெற்று விட்டார். தற்போது வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. வாழ்க்கை வழக்கம்போல் எல்லாப் பிரச்சனைகளோடும் சந்தோசமாக போய்க்கொண்டு இருக்கின்றது. :-)

தற்போது இருக்கும் சர்வரில் என்னுடைய பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் எடுபடாத நிலையில், சர்வரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டேன். தற்போது இருப்பதைவிட அதிகத்திறன் கொண்ட டெடிகேட்டட் சர்வருக்கு ஆர்டரும் கொடுத்தாயிற்று. நாளை புதிய சர்வர் கிடைத்துவிடும். இயன்றால் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் அறுசுவையை புதிய சர்வருக்கு மாற்றிவிடலாம். அடுத்த இரண்டு நாட்களுக்கு அறுசுவை கிடைப்பதில் உங்களுக்கு (சமீபத்திய வழக்கம்போல்) சிரமங்கள் இருக்கலாம். மீண்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

குரிப்பு சேர்க்க என்பது என் கம்ப்யுடரில் இல்லையே.எப்படி மாவடு ஊருகாஇ தயாரிப்பை அனுப்புவது என்ட்ரு தெரிவிக்கவும்.Please admin.

சகோதரி அவர்களுக்கு,

குறிப்பு சேர்க்க என்ற லிங்க் கூட்டாஞ்சோறு உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கூட்டாஞ்சோறு உறுப்பினராக வேண்டுமென்றால் சொந்த சமையல் குறிப்புகளை, நல்ல தமிழில் பிழையின்றி டைப் செய்து அனுப்பத் தெரிந்திருத்தல் வேண்டும். அப்படி குறிப்புகள் கொடுக்கும் திறனுடையவர்களுக்கு மட்டுமே கூட்டாஞ்சோறு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கும். மேலும் விதிமுறைகள் பற்றி அறிய, அறுசுவை முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள "அறுசுவைக்கு குறிப்புகள் கொடுப்பது எப்படி?" என்ற பகுதியை பார்வையிடவும்.

தற்போது அறுசுவை சர்வரில் பராமரிப்பு, திறன் சோதனை, மென்பொருள் மாற்றங்கள் என்று தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றும் நாளையும் இவை தொடரும். மற்றுமொரு சர்வருக்கு மாறும் நிலையும் வரலாம். எனவே அடுத்த இரண்டு தினங்களுக்கு அறுசுவையை பார்வையிடுதலில் சில சிரமங்கள் இருக்கும். பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக அறுசுவை கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது. தவிர்க்க இயலாத இந்த சிரமத்தினை தயவுசெய்து பொறுத்தருளவும். இரண்டு நாட்களுக்கு பின் அறுசுவையை பிரச்சனையின்றி மீண்டும் பார்வையிடலாம்.

மேலும் சில பதிவுகள்