உதவுங்களேன்

கோழி அல்லது ஆடு அல்லது மீன் குழம்பு வைத்தால் குழம்புடன் இவை ஒட்டவே இல்லை தனியாக இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

எனக்கு உதவுங்களேன்.

நீண்ட நேரம் அது குழம்பில் கொதித்தால் அது போல் வராது .மீன் குழம்பை பொறுத்தவரை புளி தண்ணீரில் காரம் உப்பு, தேங்காய் விழுது வேறு என்ன நீங்கள் சேர்பீர்களோ அவை எல்லாம் போட்டு கொதி வந்த பிறகு மீன் போட்டு வெந்த பிறகு இறக்குங்கள் . மீன் சிறிது நேரத்திலேயே வெந்து விடும் .
கோழியை பொறுத்த வரை பிரஷர் கூக்கரில் வேகவைக்காமல் வாணலியில் வேகவைத்து செய்தால் சுவை கூடும் .

நன்றி ramya

ஜென்னிவினோ

Dare To Paly With Life

கோழியை மசாலா தடவி ஊற வைத்து செய்து பாருங்கள்...அறுசுவையில் சிலரது குறிப்பில் பார்த்திருக்கிறேன்.

மசாலா எல்லாம் கலந்த பின் கண்டிப்பாக மூடி வைத்து வேக விடுங்கள்.

ஆட்டிறைச்சியைப் பொறுத்தவரை கண்டிப்பாக ப்ரஷர் குகரில் வேக வையுங்கள்.

கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

எனக்கு ரொம்ப பெரிய அளவில் அனுபவம் கிடையாது. ஏதோ எனக்குத் தெரிந்தது. நன்றி.

ஹலோ தேன்மொழி, உங்கள் கருத்துக்கு நன்றி. இதை முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஹாய் தோழிஸ்,

இந்த வாரம் நீங்கள் சொன்னது போல் குழம்பு வைத்தேன் நம்பவே முடில superb.

Thank you.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

பாக்கெட்டில் விற்கும் தனியா தூள் வகைகளை குழம்பில் சேர்க்காதீர்கள். நன்கு அரைபடாமல் இருக்கும். வீட்டிலேயே பொடி தயாரித்து மில்லில் பட்டுபோல் அரைக்க சொல்லுங்கள். புளிநீரில் 3 ஸ்பூன் விட்டு கரைத்தாலே போதும் சுவையும் மணமும் கூடும். மீனுடன் மசாலாவும்,குழம்பும் ஒட்டியபடியே இருக்கும். தேங்காய் சேர்த்தாலும் நைஸாக அரச்சு போடுங்க. கொரகொரப்பா இருந்தா தனியா மேலே மிதந்துட்டு இருக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்படியா ரொம்ப சந்தோஷம்பா !!!!!!!!

மேலும் சில பதிவுகள்