மேடம், நீங்க நிறைய பேருக்கு பயனளிக்கும் குறிப்புகள் தந்துள்ளீர்கள்.
அதேபோல் என்னுடய பிரச்சனைக்கும் தகுந்த குறிப்பு வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
எனது வீட்டில் நான் 2வது மருமகள், எங்கள் வீட்டில் உள்ள அன்னைவருமே நல்ல கலர், மாமியார், அக்கா(மூத்த மருமகள்), என் கணவர், அவரது அண்ணன், எனது மகன் இப்படி எல்லோருமே நல்ல கலர்
நான் மட்டும் தான் கருப்பு
நான் வேலைக்கு செல்கிறேன், நல்ல சம்பாத்தியம்மும் செய்கிறேன்,
ஆனால் என் வீட்டார்கள், என் கலரை வைத்து கிண்டல் செய்கிறார்கள், நான் சில நேரங்களில் கண்டுகொள்ள மாட்டேன், ஆனால் சில நேரங்களில் மிகவும் வருந்துவேன்.
அதுவும் கழுத்துபகுதி மிகவும் கருப்பாக தெரியும்,
எனக்கு பார்லர் செல்ல வாய்ப்பு கிடையாது,
எனவே வீட்டில் இருந்த படியே முகம், கை, கழுத்து, இவைகளை பிரஷ் ஆக வைத்திருகக வழி சொல்லுங்கள், ப்ளிஸ்
முகம் வெளுப்பாக, பிரெஷ் லுக்கிற்கு
தங்களது நிறத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். அழகிற்கும் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. இது சொந்த அனுபவம்தான். என் வீட்டில் என் ஒருத்தி முகம் மட்டும் ரொம்ப நிறம் கம்மி. அக்கா, தம்பி என இருவரும் ஸ்கூல் விட்டதும் வீடு, லீவ் நாளில் சினிமா, வீடு என்று இருக்கும்போது நான் ஒருத்தி மட்டும் ஹிந்தி கிளாஸ், டான்ஸ் கிளாஸ், டென்னிஸ், தம்பியுடன் கிரிக்கெட் என்று ஊரில் உள்ள அத்தனை வெயிலையும் முகத்தில் வாங்கி என் வீட்டிலேயே கருப்பு நான் தான் என்று பேரெடுத்து விட்டேன். திருமணம் ஆவதற்கு முன்பு வீட்டில் இருந்த நாட்களில் முகத்திற்கு Fade Out Cream தடவி ஏசியை ஹையில் வைத்து தூங்குவேன். அதில் முகத்தில் இருந்த Sun Tan முற்றிலும் சரியாகி விட்டது.
தங்களது சருமம் இயற்கையாகவே கருமையானதாக இருந்தால் அதனை முற்றிலும் வெள்ளை நிறமாக கொண்டு வருவதென்பது இயலாது. ஆனால் தங்களது சருமத்தை பொலிவாகவும், கவர்ச்சியாகவும் மாற்றுவது தங்கள் கையில்தான் இருக்கிறது. முதலில் உங்கள் முகத்தில் எது பிளஸ் பாயிண்ட் என்று பாருங்கள். அதன் அழகை கூட்டும் வகையில் தங்களது மேக்கப்பில் சிறிது கவனம் செலுத்துங்கள். உதாரணமாக தங்களது கண்கள் பெரிதென்றால் ஐலைனர், ஐ ஷேடோ, காஜலென்று கண் மேக்கப்பில் கவனம் செலுத்துங்கள். மற்ற இடங்களையும் லேசான மேக்கப் மூலம் பளிச்சென்று ஆக்குங்கள். உதடுகளுக்கு லிப் லைனர் இல்லாமல் லிப்ஸ்டிக் போடாதீர்கள் மேட் பினிஷ் உள்ள மேக்கப் புராடக்ட்ஸ் மிகவும் இயற்கையான தோற்றத்தை கொடுக்கும். எனது ஈசி மேக்கப் பற்றிய பதிவில் மேக்கப் செய்வதைப் பற்றி சொல்லி இருக்கிறேன். பாருங்கள். ஆனால் இது அனைத்தையும் விட முக்கியமானது ஹேர் ஸ்டைல். என்னதான் மேக்கப் போட்டாலும் ஹேர் ஸ்டைல் சரியில்லை என்றால் நன்றாக இருக்காது. அதனைப் பற்றி தனிப் பதிவாக விரைவில் எழுதுகிறேன். எப்போதும் பிரெஷ்ஷாக தெரிய லாங்க் ஸ்டே( Long Stay) மேக்கப் புராடக்ட்ஸ் உபயோகியுங்கள். எந்த மேக்கப் செய்தாலும் கழுத்துக்கும் சேர்த்து மேக்கப் போடுங்கள்.
இப்போது சரும நிறத்தைக் கூட்டுவதைப் பற்றிப் பார்ப்போம். முகத்தின் கருமையை நீக்க இயற்கையாகவே சில பொருட்கள் உதவுகின்றன. அது உருளைக்கிழங்கு மற்றும் தயிர். இரண்டுமே முகத்திற்கு நல்ல வெளுப்பைக் கொடுக்கும். பப்பாளி சாப்பிடுதோடு, அதன் சாறை முகத்தில் தடவினால் தோல் பளப் பளப்பாக மாறும். தயிரோடு சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்து தினமும் கழுத்து கருமையான இடங்களில் தடவுங்கள். வெளுப்பாக மாறும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து தடவுங்கள். வீட்டில் இருக்கும்போது கழுத்தில் ஆப்ரிகாட் அல்லது அல்மண்ட் ஸ்க்ரப்பர் கொண்டு வார இரு முறை ஸ்க்ரப் செய்யுங்கள். தலை முடியை தூக்கிக் கழுத்தில் புரளா வண்ணம் கிளிப் செய்து கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் தூங்கும் முன் முகத்தில் Fade Out Cream தடவுங்கள். இது சருமத்தை நன்கு வெளுப்பாக்கும். இன்னொரு க்ரீம் இங்கே ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது. அதனை தி பெஸ்ட் என்று சொல்ல வேண்டும். John Plunkett's Skin Lightening Cream என்று பெயர். சருமத்தில் உள்ள கரும்புள்ளி, பிக்மெண்ட்ஸ் என்று எல்லாவற்றையும் நீக்கி, முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமையையும் விரைவில் நீக்குகிறது. என் முகத்தின் சன் டானை இதனைக் கொண்டே நீக்கினேன். இதற்கு இணையாக மற்ற நாடுகளில் கிடைக்கும் க்ரீம்களைப் பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் Olay வில் Total Whitening Cream என்று கிடைக்கும். அது நல்ல பலனை தரும். கைகளுக்கும் லிக்விட் பவுண்டேஷன் தடவலாம். ஆனால் அதற்கு கையை வேக்சிங் செய்திருந்தால் நன்றாக பரவும். தினமும் இரவு ஹேண்ட் அல்லது பாடி லோஷனை கைகளில் தடவுங்கள். உப்பை ஈரமான கைகளில் வைத்து நன்றாக இரண்டு உள்ளங்கைகளையும் தேயுங்கள். நல்ல ஸ்க்ரப்பிங் இது. கைகளும் சாப்ட்டாக மாறும்.
தினமும் இரவு தூங்கப் போகும் முன் முகத்தை கழுவுங்கள். வேலையை விட்டு வந்ததும் முகத்தை கிளென்சிங் மில்க் அல்லது Eskinol Cleaning Solution ( For Whitening Skin) என்ற புராடக்ட் கிடைத்தால் அதை பஞ்சில் ஒற்றி முகத்தை துடையுங்கள். முகத்தில் உள்ள அழுக்கு அனைத்தும் நீங்கி நாளாவட்டத்தில் கருமையும் நீங்கும். கழுத்துப் பகுதியில் உள்ள கருப்பும் நீங்கும். இனி வரப்போகும் வாரங்களில் நான் பல அழகுக்குறிப்புகள் வீட்டிலேயே செய்து கொள்ளும் வண்ணம் எழுதலாம் என்று இருக்கிறேன். அதில் தங்களுக்கு தேவையான இன்னும் பல குறிப்புகளை சேர்க்கின்றேன்.
ஹாய் தேவா
ஹாய் தேவா சுகமா...எங்க தான் போரீங்கம்மா?அடிக்கடி ஆளே கானாம போயிடுரீங்க..வால் சார் என்ன சொல்ரார்.அக்கா நலமா.வேலை நல்ல போகுதா.நேரம் கிடைப்பதில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது