பெருகி வரும் மக்கட்தொகை ஒரு நாட்டில் உண்டாக்கும் மாற்றங்கள் என்ன?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்கெடுப்பினை ஒட்டிய ஒரு விவாதத்தை இங்கே தொடங்குகின்றோம். சீனா, இந்தியா போன்ற நாடுகள் இன்று மக்கட்தொகை எண்ணிக்கையில் உலகளவில் முறையே முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றது. அரசாங்கம் மக்கட்தொகையை கட்டுப்படுத்த பல திட்டங்கள், அறிவிப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றது. நமது நாட்டின் நிலை இப்படி இருக்க, வளர்ந்த நாடுகள் பலவற்றில் மக்கட்தொகை எண்ணிக்கை, வளர்ச்சி விகிதம் குறைந்தபடி இருக்கின்றது. அந்நாடுகள் மக்கள் எண்ணிக்கை வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருகி வரும் மக்கட்தொகை பலமாக இருக்கின்றதா, இடையூறாக இருக்கின்றதா? 100 கோடிக்கும் மேல் மக்கள் இருப்பதால் நாம் அடைகின்ற பயன்கள் என்ன, சந்திக்கின்ற பிரச்சனைகள் என்ன? இப்போது இருக்கும் இதே விகிதத்தில் மக்கள் தொகை வளர்ச்சி இருந்தால் எதிர்காலத்தில் அவை என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்? இதை குறைக்க வேண்டுமா, அதிகரிக்கவேண்டுமா? குறைப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனை என்ன? இரண்டு பக்க நன்மை தீமைகளையும் பட்டியலிட்டு, உங்கள் தரப்பு விளக்கத்தை இங்கே தாருங்கள்.

வழக்கமான விதிமுறைகளை இந்த விவாதத்திலும் கடைபிடிக்கவும். தனிநபர், மதம், தேசத் தாக்குதல் கூடாது. விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும்.

அப்பப்பா பாதிக்கிரதுன்னல்லவா வோட்டு அதிகம் உழுந்திருக்கு.
அவரவருக்கு என்ன வருமானமோ அதற்கேற்றாற்போல் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம்...எல்லா பிள்ளைகளையும் சரியாக பராமரித்து,படிக்க வைத்து சமுதாயத்தில் நல்ல படியாக வளர்க்க வருமானம் மட்டும் போதும் நாட்டுக்கு எந்த கேடும் வந்து விடப் போவதில்லை.
பிற்காலத்தில் ஒரு ஆளுக்கு ஒரு சதுர அடி நிலம் மட்டுமே இருக்கும் என்பதெல்லாம் சும்மா ...அதெல்லாம் மனுஷன் பெருகுவதற்கேற்ப பூமியில் இடமும் இருக்கும்.
இது எனது அபிப்ராயம்,,,உங்களுக்கு என்ன அபிப்ராயமோ சொல்லுங்க..என் அபிப்ராயத்தில் தவரிருந்தால் டீசென்டாக சொல்லவும்....என்கிட்ட இம்முறை யாராவது சண்டைக்கு வந்தீங்க அப்ரம் தோல் உரிச்சு தொங்க விட்ருவேன்.:-D

ஒரு நாட்டின் உயர்வை நிர்ணயிப்பது, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம், சுகாதாரம் மற்றும் அரசியல் உரிமை போன்றவைகள்தான்.

நாட்டுமக்கள் அனைவருக்கும் மேற்கண்ட அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டுமென்றால், அந்நாட்டின் இயற்கை வளம், நில அளவு போன்றவைகள் எவ்வளவு பேரைத் தாங்குமோ, அந்த அளவிற்குத்தான் மக்கட்தொகை இருக்க வேண்டும்.

இந்தியாவின் நில அளவு, உலக அளவில் 2.5% மட்டும்தான். ஆனால் 1/6 பங்கு மக்கட்தொகை இங்குதான் இருக்கிறது.

10% மக்கள்தான் ஓரளவிற்கு நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள். 77 சதவிகிதம் மக்கள் வெறும் 30 ரூபாயை விடவும் குறைவாகவே தினக்கூலிக்கு வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் நாம் மக்கட்தொகை பெருக்கத்தை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்காக, காடு, நீர்நிலை போன்றவற்றை அழிக்க வேண்டி வரும். இயற்கை வளங்கள் அழிந்து, கான்கிரீட் கூட்டிற்குள் மனிதன் தன்னை அடைத்துக் கொள்ள வேண்டும்.

படித்தவர்கள் யாரும் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்லை. திட்டமிட்டு சிறப்பாக வாழ்கிறார்கள்.

கல்வியறிவு இல்லாமை, மக்கட்தொகைப் பெருக்கத்திற்கு மிகப் பெரிய காரணம். அதை முதலில் களைய வேண்டும். அடுத்தது விழிப்புணர்வு. பெரிய அளவில் அரசு இதை ஏற்கனவே செய்து வருகிறது.

தனிமனித அளவில், நாம் ஒவ்வொருவரும் ஓரிரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொண்டு, நம் குடும்பத்திலுள்ளோருக்கும், எடுத்துக் கூறினால் அதுவே போதுமானது.

ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க மிக நல்ல தலைப்பை கொடுத்துள்ளீர்கள், என்னுடைய்ய ஒட்டு மக்கட் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது என்பதுதான்.

ஏனென்றால் மக்கட் பெருக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துமே ஒழிய நிச்சயமாக அதற்க்கு இடையூராக இருக்காது. ஆனால் அந்த பெருக்கத்தை சமாளிக்க அந்த நாடு தன்னை தயார் படுத்த வேண்டும்.

முக்கியமாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசாங்கம் நல்ல திட்டங்களைப் போடவேண்டும். அடிப்படை வசதிகூட இல்லாமல் தவிக்கும் நிலை மாறி மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேராவண்ணம் அவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற எல்லா வசதிகளும் கிடைக்க பெறச் செய்ய வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அங்கு வாழும் மனிதனின் மன நிலையிலிருந்து தான் தொடங்குகின்றது.ஆகவே மக்களுக்கிடையே மண்டிக்கிடக்கும் ஏற்றத்தாழ்வுகளை சட்டம் போட்டு நீக்க வேண்டும், கல்வியறிவை வியாபாரமாக்காமல் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ஆயிரக்கணக்கில் திட்டங்கள் போட்டு வளர்ச்சியை காட்ட வேண்டுமே ஒழிய வெறும் மக்கள் பெருக்கத்தை கட்டுபடுத்துவதால் மட்டும் எந்த நாட்டின் வளர்ச்சியையும் பெருக்க முடியாது, பொருளாதாரத்திலும் எந்த மாற்றமும் ஏற்ப்பட வாய்ப்பும் இருக்காது.

முக்கியமாக நாடு முழுவதும் வயதானவகளின் சதவிகிதம் அதிகரித்து வேலைக்கு ஆள்கிடைக்க திண்டாட்டம் ஏற்ப்படும் நிலை வந்துவிடும். பிறகு "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சுப் போச்சுடா" என்று சினிமாவில் பாடிய இளைஞ்சர்கள் போல் நிஜ வாழ்க்கையிலும் அரசாங்கம் மக்களைப் பார்த்து பாடவேண்டிவரும்.

அதேப்போல் நாட்டு மக்களும், அரசாங்கம் தன்னுடைய கடமைகளைச் செய்ய ஒன்றுபட்டு அவர்களுக்கு ஒத்துழைத்தால் அந்த நாட்டின் வளச்சிக்கு மக்கட் பெருக்கம் ஒரு தடையேயில்லை, மாறாக பலமாக அமையும் என்பது என் கருத்து.

ஒரு பக்கம் மக்கட் தொகை பெருகினாலும் மறு பக்கம் இயற்க்கை அதை அழித்துக் கொண்டு தன் வேலையைச் செய்துக் கொண்டுதானிருக்கின்றது. ஆகவே என்னைப் பொருத்தவரையில் நாட்டின் வளர்ச்சிக்கு மக்கட் தொகையின் பெருக்கம் அந்த நாட்டிற்க்கு பலம் தானே ஒழிய பயம் இல்லை.

மக்கட் தொகை பெருக்கத்தால், மக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில் தடுமாற்றம். விளை நிலங்கள் அழிப்பு, காடுகள் அழிகிறது. போதிய மழை இல்லை. மழை பெய்தாலும், வீடு ரோடுகள் அதிகரிப்பால், நிலத்தடி நீர் பத்தாக் குறை. விளைவு
உண்வு தட்டுப்பாடு, தண்ணீர் பஞ்சம்.

நம் அப்பா காலத்தில் படித்தாலே வேலை. நம் காலத்தில் Merit. நம் குழந்தைகள் காலத்தில்?? இதெல்லாம், மக்கட் தொகை பெருக்கத்தால் என்பது என் கருத்து.

எதில் தான் சுலபமாக இடம் கிடைக்கிறது? பேருந்து, இரயில், பள்ளி, கல்லூரி, வேலை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இதை சமாளிக்க எதை அதிகப்படுத்தினாலும், அழிக்கப்படுவது விளை நிலங்களும் இயற்கை வளங்களும்.

LIC-சியை சிறியதாக்கி சிரிக்கும், அடுக்கு மாடி கட்டிடம். காணி நிலம் வேண்டும் என்பது பாரதியின் கனவு மட்டும் அல்ல, ஆனால் நாம் காணி நிலம், ஒரு நூறு பேர்களுக்கு வீடு என்பதுதான் நிஜம்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அங்கு வாழும் மனிதனின் மன நிலையிலிருந்து தான் தொடங்குகின்றது என்ற மனோகரி மேடத்தின் கருத்திற்கு மற்று கருத்து கிடையாது. மனிதன் மகிழ்ச்சியாய் வாழ அடிப்படை தேவைகள் பூர்த்தியாக வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் மக்கட் தொகை பெருக்கம், கட்டுப்பாட்டில் வேண்டும். அதற்கு வழி நாம் இருவர் நமக்கு ஒருவர் அல்லது இருவர் !!! முகம் தெரியாதா பலரை நம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக் கொள்ளும் போது(அறுசுவையே அதற்கு சான்று)

இனபெருக்கத்தால் நாட்டின் வளர்ச்சி நிச்சயமாக பாதிக்காது.. மனித இனம் பெருகியதால் தான். நாம் கல்வி,விஞ்ஞானம்,அரசியல்,ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் முன்னேறி இருக்கின்றோம். மனித இனம் பெருகாமல் போய் இருந்தால். இந்த வளர்ச்சி கிடைத்து இருக்காது.. ஏன்..இந்த இணைய தளம் கூட நமக்கு கிடைத்து இருக்காது..! சற்று சிந்தித்து பாருங்கள்.. மனித வளம் பெருக,பெருக, புதிய புதிய தொழில்கள் உருவாகின்றது... விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றது என்றால்.. புதிய உணவு முறையை கையாள்கிறோம்... (நம் அப்பா காலத்தில் படித்தாலே வேலை. நம் காலத்தில் Merit. நம் குழந்தைகள் காலத்தில்?? இதெல்லாம், மக்கட் தொகை பெருக்கத்தால் என்பது என் கருத்து). உங்கள் கருத்து தவறு சகோதரி... சற்று சிந்தித்து பாருங்கள். நம் தந்தையின் கல்வி அறிவும், நம்மின் கல்வி அறிவும் ஒன்றாக உள்ளதா..? அன்று போதிக்க அதிக ஆசிரியர்கள் கிடையாது,படிப்பதற்கும் மாணவர்கள் கிடையாது. இன்றய நிலை அப்படி அல்ல... நாம் எல்லா துறைகளிலும் முன்னறி உள்ளோம்... இவை எல்லாம் மனித இன பெருக்கத்தால் கிடைத்தவைதான். என்பதை உணருங்கள்...!

அன்புடன்
ஜா...

(அதிக பிள்ளைகளே... நிறைந்த செல்வம்..)

அன்புடன்
ஜா...

மேலும் சில பதிவுகள்