யாழ், கிண்ணியா, நுவர எலிய ஜாலி ட்ரிப்

ஹாய் தோழிஸ் நோன்பு பெருநாள் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், ஒரு ட்ரிப் போலாம்னு முடிவு செஞ்ச்சோம், எங்க ஹஸ்பண்ட அண்ணா குடும்பம், தங்கை அக்கா இன்னொரு அண்ணாட பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து 4ம்திகதி காலை 7மணிக்கு எமது பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் யாழ்ப்பாணம் செல்வதே எமது திட்டம், எமது ஊரிலிருந்து 10மணிநேரம் பயணம். அழகாய் குழந்தைகளின் ஆரவாரங்களுஅடன் எமது வண்டி சென்று கொண்டிருந்தது....4மணிநேரப் பயணத்தின் பின் திடீரென வண்டி இயங்க மறுத்தது...எங்கள் மனதில் திக்,, திக்க் ஏனென்றால் முன்பின் அறிமுகமில்லா ஊரில் எங்கே செல்வது .. பக்கத்தில ஒரு செட் இருந்தது(எமது நல்ல நேரம்)..எங்களை அங்கே இறக்கி விட்டு என் ஹஸ்பண்டும் அவரது அண்ணாவும் செட்டுக்கு வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க ,,எங்களுக்கெல்லாம் மனசு சோர்ந்து போச்... கால் கடுக்க பசங்களஒயும் வச்சிட்டு பாதையோரத்தில நின்னுட்டு இருந்தோம், பசங்களால இருக்க முடியல்ல . கொஞ்ச நேரத்தில் அங்க வந்த ஒருவர் என்ன பிரச்சின என்று கேட்டுட்டு .பக்கத்தில இருந்த சில்ரன் பார்க்கைகாட்டி இது என்னோட நர்சரி இங்க வந்து இருங்கன்னு சொன்னார், ம்ம்ம் அப்பதான் கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு வந்தது ,அப்புறம் என்ன பசங்க ஜாலியாகிட்டாங்க, அப்படியே ஒருமணிநேரம் கழிந்தது, வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு வந்தாங்க , எமக்கு உதவிய அந்த சகோதரருக்கு நன்றி கூறி எமது பயணத்தை தொடர்ந்தோம்,(எமக்கு உதவியது ஒரு மாற்றுமத சகோதரர்) நாம் யாழ்ப்பாணத்தை சென்றடையும் போது நேரம் நள்ளிரவடைத்தாண்டி விட்டது, ...அங்கே என்ன நடந்தது....{தொடரும்}

பஃர்ஹானா நலமா குட்டீஸ்லாம் நலமா தெரியாத புது இடத்தில் வண்டி நின்னுட்டா எவ்வளவு பயமா இருக்கும்
வாங்க வாங்க கதைய தொடருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் பல்கீஸ் என்னோட கதய படிச்சதுக்கு நன்றி, என்வே மீதியைத்தொடர்கிறேன், யாழ்பாணத்தில் உள்ள ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டு எமக்கு ஒரு வீடு எரேன்ஞ் ப்ண்ணி வைக்க சொல்லியிருந்தோம்...நாம் போகும் போது தாமதமகி விட்டதால் அந்த ந்பர் போனை ஓப் செய்திருந்தார்.. மீண்டும் திக் திக் எங்கே தங்குவது ,இந்த நேரத்தில யார் வீடு கொடுப்பாங்க? குழந்தைகளுக்கு அசதி தூக்க கலக்கம், ஒருமாதிரியாக என் ஹஸ்பண்ட்டுக்கு தெரிந்த ஒரு வீட்டை தட்டி தங்க இடம் எடுத்துக்கொண்டோம், உள்ளே போனவுடன் முதல் வேலை தூங்கினதுதான். அப்புறம் காலையிலே எழுந்து காலை உணவைத்த்தயார் செய்து அப்படியே பகல் உணவையும் தயார் செய்து முடித்தோம்.காலை சாப்பாடு முடித்த நாங்கள் யாழில் உள்ள திராட்சைத்தோட்டம் பார்க்கசென்றோம்,பல இடங்களில் அறுவடை முடித்திருந்தார்கள். ஒருதோட்டத்தில் அழகாய் திராட்சைக்குலைகள் தொங்கிக்கொண்டிருந்தன, இதுவரை கடையில் மட்டுமே திராட்சைகுலை கண்ட பசங்களுக்கும் எங்களுக்கும் அது புது அனுபவம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

திரும்பி வந்துகொண்டிருந்தபோது அந்த இடத்தில் ஒரு விவசாயக் கண்காட்சி இட்ம்பெற்றுக்கொண்டிருந்தத்து, தூரைடத்தில் இருந்து வந்த எங்களை அவர்கள் அன்போடு வரவேற்றார்கள். மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தக் கண்காட்சி, இதுவரை தோட்டப்பயிச்செய்கை நாம் கண்டதேயில்லை, செடிகளில் காய்த்திருக்கும் காய்கறிகளை பார்த்து அதிசயித்தோம். எனது பைஅயனுக்கு செடி கொடிகளை மற்றும் கீரை காய்கறி வகைகளை சொல்லிக்கொடுக்க எனக்கு அது பேருதவியாக அமைந்தது,அங்கேயிருந்தவர்களிடம் நன்றீ கூறி மீண்டும் நாம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பகல் சாப்பிட்டு ப்ரே பண்ணிட்டு எமது பயணத்தை தொடர்ந்தோம், நீண்ட நாள் ஆசை யாழ் பல்கலைகழகத்தை பார்க்க வேண்டும் என்பது, எனவே அங்கே போனோம் மாலை 5மணிக்குப் பிறகு பார்வையிட அனுமதி என்று அறிவித்தல் போட்டிருந்தார்கள், ஆனால் அன்றைய தினம் அவர்களது போட் மீட்டீங் காரண்மாக உள்ளே செல்ல எமக்கு அனுமதி கிடைக்கவில்லை ,எம்மைப்போலவே பார்வையிட வந்திருந்த இன்னும்பல பேர் திரும்பிக் கொண்டிருந்தனர், அப்படியே போய் ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தோம்.. ரியோ எனப்படும் அந்த ஐஸ்கிரீம் செம டேஸ்டு இன்னொன்று சுவைக்க ஆசை ஆனால் ஒன்று சாப்பிட்டதில் எனக்கு பசியே போயிடுச்சு, அந்த பார்லருக்கு பக்கத்தில் தண்ணீர் வற்றிய ஒரு குளம் இருந்தது, சிறிது நேரம் அங்கே காற்றாடிவிட்டு வீடு திரும்பினோம்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆமா நீங்க இலங்கை யா ? ரொம்ப சந்தோசம் ... உங்க கதைய ஆவலா படிச்சிட்டு இருக்கன். தொடருங்க .... என்ன ஒரு கவலைன்னா எனக்கும் ஊருக்கு போகன்ணும் எண்டு ஆசை வருது ....

யாழ்பாணத்தில் உள்ள வீடுகளில் ஒருசிலதுதான் திருத்தியமைக்கப்பட்டு மக்கள் மீள் குடியமர்ந்திருக்கிறார்கள், ஏனையவை உடைந்தநிலையில் குண்டு துழைக்கப்பட்ட அடையாளங்களுடன் காண்ப்பட்டண். முந்தைய நாள் இரவில் வந்ததால் எமக்கு எதுவும் தெரியவில்லை , இன்றைய காலைப்பொழுதில் சமைத்து முடித்து பகல் சாப்பாட்டுக்காக பார்சல் கட்டிக்கொண்டு கிண்ணியா நோக்கி எமது பயணத்தை தொடர்ந்தோம்,இன்று நீண்டு வளர்ந்திருக்கௌ பனைமரங்களையும் அதில் காய்த்துத்தோங்கும் பனங்காய்களையும் ரசித்தவாறு பயணித்தோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் தரையைத்தான் காண முடிந்தது, கிண்ணியா சென்று கொண்டிருக்கும் போது ஒருபள்ளிவாசலில் நிறுத்தி தொழுது விட்டு பகல் சாப்பாட்டைஅயும் முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.ந்மது அடுத்த திட்டம் கண்ணியா வெந்நீர் ஊற்றைப் பார்வையிவது, அங்கே 7சிறிய சதுர வடிவான கிணறுகள் கிணறுகள் காணப்பட்டன அவை வெந்நீர் கொண்டவை, ஒவ்வொரு கிணற்றிலும் வெவ்வேறுவிதமான சூட்டை உணர முடிந்ததது, (இந்த வெந்நீர் ஊற்று இராவனன் கோபம்கொண்டு தனது வாளால் நிலத்தில் 7இடங்களில் குத்தியதால் ஏற்பட்டதென்றும் கோபம் கொண்ட இராவணனது உள்ளம் போல அது கொதித்துக் கொண்டிருப்பதாகவும் அறிந்ததுண்டு, ஆனால் எனக்கு சரியாகத்தெரியாது,)

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்க சுற்றுலா அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு இடங்களை பற்றி சொல்லி கொண்டு வாங்க படிக்க தயாராக இருக்கோம். போட்டோஸ் எல்லாம் எடுத்தீங்களா.

ஹாய் பூங்காற்று,

உங்கள் பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விரிவாகவே எழுதலாம்.

//கண்ணியா வெந்நீர் ஊற்று// அது கண்ணியா அல்ல, கன்னியா என்பதே சரி. ஆங்கிலத்தில் இரண்டுக்கும் ஒரே எழுத்துதானே. ;)

வெந்நீரூற்றுகளைப் பற்றி - ராவணன் தனது தாயாரின் அந்திமக் கிரிகைகளுக்காக அமைத்ததாகவும் ஒரு கதை உண்டு.

தொடருங்கள், படிக்க ஆவலாக இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நல்லா இருக்குப்பா நேற்றே பதிலளிக்க நினைத்தேன் முடியவில்லை இன்று தான் நேரம் கிடைத்தது மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள் நானும் ஆவலோடு உள்ளேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஜனனி, வினோஜா, இமா ரேனுகாதேவா உங்களுக்கு நன்றிகள்.இமா விரிவாக எழுத நேரம் போதவில்லை அப்பப்போ கிடைக்கிற நேரத்தில் சுருக்கமா பதிவிடுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நல்லது பயணக்கட்டுரை ஆரம்பித்து எங்களையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள் நாங்களும் பார்த்து ரசிக்கிரோம் உபயோகமான தகவல்களை பெறுகிரோம் தொடருங்கள்

மேலும் சில பதிவுகள்