HELLO,
CAN YOU PLEASE TELL ME HOW TO REMOVE UNWANTED HAIR FROM BODY? ALSO CAN YOU TELL ME HOW TO MAKE HAIR STOP GROWING IN THE BODY? I HAVE A LOT OF BODY HAIR.
HELLO,
CAN YOU PLEASE TELL ME HOW TO REMOVE UNWANTED HAIR FROM BODY? ALSO CAN YOU TELL ME HOW TO MAKE HAIR STOP GROWING IN THE BODY? I HAVE A LOT OF BODY HAIR.
லேசர்
லேசர் ட்ரீட்மென்ட் தேவையில்லாத ரோம வளர்ச்சியை தடை செய்ய பெரிதும் உதவுமென்றும் ..சைட் எஃபெக்ட் சிறிதும் இல்லாததென்றும் சென்ற வாரம் டிவியில் ஒரு மௌத்துவர் சொல்லிக் கேட்டேன்.
உடம்பில் உள்ள முடியை நீக்க
தேவையற்ற முடியை நீக்க சிறந்த வழிகள் வாக்சிங் மற்றும் எபிலேட்டர் தான். மற்ற வழிகளான ரேசர், க்ரீம் போன்றவை முடியில் அடர்த்தியை அதிகப்படுத்தி வளர்ச்சியையும் அதிகப்படுத்தும். மஞ்சள் போன்றவை சிறு வயதிலிருந்து உபயோகப்படுத்தி இருந்தால் மட்டுமே முடி வளர்ச்சியை குறைக்கும். அதிலும் கஸ்தூரி மஞ்சள் மட்டுமே சரியான பலன் தரும். கோல்ட் வாக்ஸ், ஹாட் வாக்ஸ் போன்றவை செய்த பிறகு மாய்ஸுரைசிங் உபயோகியுங்கள். எபிலேட்டர் (Philips, Braun Brands)உபயோகிப்பதும் எளிது. ஸ்கின்னும் ஸ்முத்தாகவும், முடியின் வளர்ச்சி குறைந்தும் நன்றாக இருக்கும். காலப்போக்கில் நீங்கள் எதையுமே உபயோகிக்க தேவையில்லாத அளவு முடியின் வளர்ச்சி குறைந்து விடும். வாக்சிங்கில் கூட ஸ்கின் இழுபடுவதால் மிருதுத்தன்மை பாதிக்கப்பட்டு, சுருக்கம் வர வாய்ப்பிருக்கிறது. கண், மேல் உதடு போன்றவற்றிற்கு த்ரெட்டிங் சரியான சாய்ஸ்.
black heads
யாரெனும் black heads நீக்க ஏதேனும் வீட்டு வைத்தியம் சொல்லவும், ஏனென்றால் எனக்கு பார்லர் மெதடு ஒத்துக் கொள்ளவில்லை அலர்ஜி ஆகிறது.மூக்கு பகுதியில் அதிகமாக இருக்கிறது.
Black Heads
சர்க்கரையும்,கசகசாவும் சேர்த்து கரகரப்பாக அரைத்து "black heads" இருக்கும் இடங்களில் தேய்த்தால்(தோல் பாதிக்காதவாறு பார்த்து தேய்க்கவும்) படிப்படியாக குறையும்.வாரம் 2 முறை செய்யலாம்.ஆவி பிடித்து பின்பு செய்யலாம்.
சர்க்கரை மிருதுவாக்கும்.உள்ளங்கை மிருதுவாக சிறிது சர்க்கரை எடுத்து கொஞ்சம் தண்ணி சேர்த்து கைகளில் தேய்த்து கழுவினால் கைகள் மிருதுவாகும்.
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
ஹாய் திவ்யா
எப்படி இருக்கீங்க? நன்றி திவ்யா ரொம்ப. அப்ளை பண்ணிட்டு சொல்றேன்.
Hi deepa
நான் நல்லா இருக்கேன் தீபா.நீங்க எப்படி இருக்கீங்க?இப்போ ஜலதோஷம் தான் பெரிய தொந்திரவா இருக்கு.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
நல்லா இருக்கேன்
திவ்யா எதுவும் மாத்திரையும் இப்போ எடுத்துக் கொள்ளாதீங்க. ஏதாவது கைவைத்தியம் பன்னிக்கோங்க, உடம்ப பாத்துக்கோங்க. நீங்க இந்தியாவுல எங்க இருக்கீங்க திவ்யா.
ஹாய் தீபா.....
நான் மும்பைல இருக்கேன் தீபா.மாத்திரை எதுவும் எடுக்கலை.சுக்கு காபி,இஞ்சி ஜூஸ்,பால்ல மஞ்ச தூள்,மிளகு போட்டு குடிக்கறது,விக்ஸ் போட்டு ஆவி பிடிக்கறது இதெல்லாம் செய்யறேன்.ஆனாலும் விடுவனாங்குது.என்ன பண்றது?
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.