தோழிகள் அனைவருக்கும் வணக்கம்..
எனது பள்ளி தோழி இப்போது ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறாள்...அவள் வீட்டிற்க்கு ஒரே பெண்.. சரியான ஜாலி பேர்வழி... நாங்கள் வெளிநாட்டில் இருப்பதால் வெகு நாட்கள் கழித்து சமீபத்தில் இந்தியா சென்றபோது அவளை சந்தித்தேன்..ஆனால் இப்போது அவள் முகத்தில் சந்தோசம் இல்லை..ஏன் என்று கேட்டதற்கு அவள் ஒருவரை காதலிப்பதாகவும்..அதில் அவள் பெற்றோருக்கு விருப்பம் இல்லை எனவும் கூறினாள்..அவர் வேறு ஜாதி என்பதால் பெற்றோர் எதிர்க்கின்றனர்..அவரையும் பிரிய மனமில்லாமல் பெற்றோரயும் எதிர்க்க முடியாமல் அவள் மிகவும் கஷ்ட படுகிறாள்..அவள் சொல்வதில் இருந்து அவரும் நல்லவர் என தெரிகிறது..அதே நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார்.. இதற்கிடையில் பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்..அவள் தவிப்பை என்னால் பார்க்க முடியவில்லை...எனக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..தோழிகள் அனைவரும் எனது தோழிக்கு யோசனை சொல்லி உதவுங்களேன்..
venpoorani
பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முயல வேண்டாம்.உங்கள் தோழியை மனப்பூர்வமாக நேசித்தால் அவரே உங்கள் தோழியின் பெற்றோரை சந்தித்து பேசலாம்.இது என் தனிப்பட்ட கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்கவும்
nazeem
அவரும் வந்து பெண் கேட்டு விட்டார்..ஆனாலும் அவர்கள் மறுக்கிறார்கள்..
venpoorani
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலப்பா. தோழிகள் யாராவது வந்து உதவுவார்கள்.உங்க தோழியோட நெருங்கிய உறவினர் மூலமா அவங்க பெற்றோரிடம் சமரசம் செய்ய முயற்சிக்கலாம். ஆனால் பெற்றொர் சம்மதம் இல்லாம எதும் செய்யக்கூடாது.இது என் கருத்து.
nazeem
உறவினர்களுக்கு தான் அவர்கள் பயப்படுகிறார்கள்....நானும் அவளிடம் பெற்றோரை எதிர்க்க வேண்டாம் என்று தான் கூறினேன்...
venpoorani
பூரணி எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று உங்கள் தோழியிடம் கூறுங்கள். இறைவன் கிருபை படி அவர்கள் சேர வேண்டும் என்று விதி இருந்தால் நிச்சயம் சேர்வார்கள்.
பூரனி
நானும் நஸீமின் கருத்தை ஆதரிக்கிறேன் பெற்றோர் சம்மதம் இல்லாம்அல் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கல் ,அவர்களுக்கு ஜாதி பிரச்சினையாக இருந்தால் ,திருமணத்தை நடத்திவைங்க அப்புறம் நாங்க வேறயா செட்டில் ஆயிடுறோம்னாவது சொல்லச்சொல்லுங்க இய்ன்ற வரை அந்நபர் அத்தோழிக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லிப்புரிய வைக்க ட்ரை பண்ணச்சொல்லுங்க.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
thanks nazeem,poongattru..
thanks for ur valuable advice