என் கணவருக்கு பெருவிரல் விளையாடும் போது நகம் அடிபட்டு சரியான வலியாக உள்ளது ...நகமும் கலர் மாறி ash+ white கலர்க்கு வந்து விட்டது நகத்தை சுற்றி வேதனையாக உள்ளதாம் .நகத்தை அமத்தும் போது திரவமாக வருகிறது(ஆரம்பத்தில் சிறிது ரத்தம் வந்தது . பிறகு நீர் மாதிரி வருகிறது) . எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல வீட்டு வைத்தியம் பார்க்கலாமா?
நகம்
நகம் பெயர்ந்து வீட்டு வைத்தியம் பார்த்து கவனிக்காமல் விட்ட என் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் கடுமையான காய்ச்சலும்,கால் தேங்காய் அளவுக்கு வீங்கி நடக்க முடியாமல் 50,000 ரூபாய் செலவு செய்து காலை திருப்பி கொடுத்தார்கள்..ரிஸ்க் எடுக்கனுமா?டாக்டரிடம் போங்க
ஜனனி
நீங்க டாக்டர் கிட்ட போறதுதான் நல்லது இதுக்கெல்லம் வீட்டுவைத்தியம் சரிப்பட்டு வராது பா எங்க பக்கது வீட்டுகாரர் தீக்காயம் பட்டு ஆறவேஇல்ல டாக்டர் கிட்ட போன பிறகுதான் தெரிந்தது அவருக்கு சுகர் இருக்குனு ஆரம்பத்திலேயே தெரிந்ததால் டயட்டில் சரி செய்துக்கொண்டார்
நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்
ஜனனி சிவா
நகத்துல அடிபட்டா சின்ன காயமா இருந்தாலும் யோசிக்காம டாக்டர்ட போங்க. என்னோட உறவினருக்கு நகத்துல அடிபட்டு சரியா கவனிக்காம வீட்டு வைத்தியம் போதும்னு இருந்துட்டாங்க. காயம் பெரிசாகி இப்போ நகத்தயே எடுத்துட்டாங்க. ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்க சரியாகிடும். பயப்படாதீங்க.
KEEP SMILING ALWAYS :-)
ஜனனி
//வீட்டு வைத்தியம் பார்க்கலாமா?// வேண்டாம். போய்க் காட்டுங்க.
- இமா க்றிஸ்
நன்றி..
பதில் தந்த எல்லோருக்கும் நன்றி .....hospital கூட்டிட்டு போறேன் ..
ஜனனி ;)
இங்கேதான் பதில் சொல்ல வேண்டுமா? ம். நகத்தில் அடிபட்டால் வேதனை அதிகம்தான். கை நகமா? கால் நகமா? எதுவானாலும் ஒன்றுதான். போய்க் காட்டுங்க. வேறு ஒன்றுமே சொல்ல மாட்டேன். ;) கட்டாயம் மருந்து எடுக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
இமா..மா
கால் பெரு விரல் தான்.. காட்டிட்டு சொல்லுறன் . இங்க எண்டு இல்ல .. எங்க பதில் சொன்னாலும் ஓகே( Face book) ;) thanks agn...