தோழிகளே!
நம் நட்பினை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பது இனிமை தான் அல்லவா?
நம்மை இணைத்த அறுசுவை என்னும் இப்பாலம் நமக்கு முதலில் அறிமுகம் ஆனது எப்படி?
ஒவ்வோருவரும் சற்று பின்னோக்கி சென்று உங்கள் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே?
தோழிகளே!
நம் நட்பினை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பது இனிமை தான் அல்லவா?
நம்மை இணைத்த அறுசுவை என்னும் இப்பாலம் நமக்கு முதலில் அறிமுகம் ஆனது எப்படி?
ஒவ்வோருவரும் சற்று பின்னோக்கி சென்று உங்கள் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே?
shahubanath
அதான் நா வந்துட்டேன்ல எதுக்கு செல்லமே கவலை???????.
கூடிய சீக்கிரமே உங்களையும் மாத்திற்றேன்.
அடுத்த பதிவு குடுக்கும் போது உங்கள் பெயரை தமிழில் அனுப்பவும்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
என்னுடைய பெயர்
என்னுடைய முழுப்பெயர் சுமையா ஷஹுபானத்.
Nandri thozhi gale inimel
Nandri thozhi gale inimel ellarum thozhigal than.En peyar nisar banu.
nisarbanu
அமினா...
அமினா...
நான் சும்மா சமயல் குறிப்பு இருக்கானு கூகுள் பாத்திட்டு இருக்கும் போது கண்ணில் பட்டது..சும்மா எல்லாத்தையும் படிசுட்டு இருந்தேன்.. தமிழ்ல டைப் பண்ண ரொம்ப சோம்பேறித்தனமா இருந்தது.. இப்போ சரி ஆச்சு,, அறுசுவை இல்லாம இருக்க முடியாது மாரி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அமினா என்னயும் சேத்திகங்க
ஹாய் தோழிகளே
என்னங்க என்ன மட்டும் விட்டுட்டு நீங்களாம் ஃப்ரென்ட் அகிட்டீங்க... நான் பாவம்க என்னயும் சேத்திகங்க... நான் 85... ஹி ஹி ஹி
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
அறுசுவை அறிமுகம்- நண்பர்கள் பட்டியல்
எதுக்கு வம்பு!!!!!!!
இந்த த்ரெட்டில் வரும் அனைவரும் என்/நம் தோழிகள் தான்.!!!!!!
(அப்படியாவது நறைய பேர் வராங்களான்டு பாப்போம்.)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அறுசுவை அறிமுகம்
4 வருடத்துக்கும் மேலாக அறுசுவையின் சைலன்ட் ஆளு. கேக் கேக்குனு ஒரு ஐயிட்டம்பா.அத எப்டியாவது பண்ணிடனும்னு என் சித்தி பொண்ணு சொல்லபோய் அறுசுவைக்கு வந்தேன்.கல்யாணம்,குழ்ந்தை எல்லாம் ஒகே. எல்லாரும் கேக் வேணாம்னு சொல்லிட்டாங்க. நிறைய நல்ல கேக் கடைல கிடைக்குமாம் கேக் எக்ஸ்பர்ட் என் சித்தி பொண்ணு சொல்றா.
Arusuvai helps in my pregnancy period. thanks a lot.
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
ஹாய் ஜெயா
அச்சச்சோ என்னப்பா கீது???
சொல்றத கரக்குட்டா சொல்லுங்க;-) நீங்க செஞ்ச கேக்குதான் எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க...அருசுவைக் கேக் ரெசிப்பி எல்லாம் எக்ஸ்பர்ட் கொடுத்ததுதான். சூப்பரா இருக்கும்;-)
யாராவது கம்பு எடுத்துட்டு வரதுக்குள்ள ஓடிருங்க;-))
Don't Worry Be Happy.
ஹாய் தோழிஸ்..........
ஹாய் நான் அக்காவிட்டிற்கு போன போது அக்காவும்,தம்பியும் சொன்னர்கள். நான் தினகரன் தான் முதலில் பார்த்தேன். இப்போ எப்பொழுதும் அறுசுவைதான்.அது மட்டும் இல்லாமல் என் நாத்தானாரையும் பார்க்க சொன்னேன். நல்ல இருக்கு என்று அவர்கள் உறுப்பினர் ஆகிவிட்டார்.
இன்று வேளையை இன்றை முடிப்பது
தோழிகளே
நான் எனக்கு குழந்தை கிடைக்கவேண்டி சர்ச் செய்தேன் அப்ப கிடைத்ததுதான் அறுசுவை ஒரு மாசம் புல்லா பேர் இல்லாம நானும் சுத்திட்டு இருந்தேன் அப்றம் தோழிகளின் பேச்சுகளை கேக்கவும் எனக்காக உதவி கேக்கவுமே நான் உறுப்பினரானேன் இன்னைக்கு வரைக்கும் தினமும் அறுசுவைக்கு நான் மொபைல் நெட் தா உபயோகிக்கிறேன் ஆனால் தவறாமல் பதிவிடுவேன் சமையல் கைவினை எல்லாம் பிடிக்கும் என் தோழிகள் சென்ற பிறகு எனக்கு புதிய தோழிகள் திருப்பிகிடைக்க செய்த அறுசுவைக்கு மனமார்ந்த நன்றி எனக்கு இப்ப நிறைய தோழிகள் இருக்காங்க தாங்ஸ் அறுசுவை டீம்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்