கொண்டைக்கடலை குழம்பு

தேதி: September 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (6 votes)

இந்த குறிப்பு தாளிகாவின் வறுத்து அரைத்த கோழி குழம்பு குறிப்பினை பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

கொண்டைக்கடலை - 100 கிராம் (ஊற வைத்தது)
வறுக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், சோம்பு போட்டு பொரிந்ததும் அதில் தேங்காயை போட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கொண்டைக்கடலை, உப்பு, அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு சிறுதீயில் கால் மணி நேரம் வைத்து இறக்கவும்.
சுவையான வறுத்த அரைத்த கொண்டைக்கடலை குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

நன்றி ஹமீத் ஃபாத்திமா..உங்களை போன்ற சமையல் புலிகள் எனது குறிப்பையும் செய்து பார்த்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.குழம்பு சிவக்க பார்க்க அருமையாக உள்ளது

கொண்டைக்கடலை க்குழம்பு படங்களும் செய்முறை விளக்கமும் ஈசியா இருக்கு. செய்து பாத்து சொல்ரேன்.

செய்துபார்த்து சுவை எப்படிஎன்ற சொல்லுரேன் சப்பாத்திக்கு நல்ல சைடிஷ் பார்க்கும் போதே சாப்பிட தோன்ணுது......

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.

குழம்பை பார்த்தாலே டேஸ்ட் தெரியுது..
நல்ல கலரா வந்திருக்கு :)
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
கொண்டைக்கடலை வைத்து வித்தியாசமா குழம்பு செய்து இருக்கீங்க.சூப்பரா இருக்கு.அடுத்த முறை இந்த ரெசிப்பியை செய்து பார்க்கிறேன்.குறிப்பு கொடுத்த தளிகாவுக்கும் வாழ்த்துக்கள் .

கொண்டைக்கடலை குழம்பு நல்ல நிறத்துடன் பார்க்க சூப்பரா இருக்கு.

பாத்திமா கொண்டைகடலை குழம்பு செம கலரா பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா அம்மா,

அருமையாக செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்லா இருக்கு பாத்திமா வாழ்த்துக்கள், செய்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

//.உங்களை போன்ற சமையல் புலிகள் எனது குறிப்பையும் செய்து பார்த்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது//ஹா ஹா........

தளி புலியே நீங்கதான் நான் பூனைக்குட்டி ரொம்ப நன்றி தளி

வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மிக்க நன்றி...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Erandu murai seithuvitten migavum suvayaga erunthathu. Naangal sappathi ku thottu kondu sappitom ennavar migavum virumbi sappitar vilakka padathudan kurippu migavum arumai mikka nanri intha kuripirku!!!!!

Hi Sister, thanks for a wonderful receipe..i cooked today...it had nice smell and good taste too..

Sorry..i donot have tamil font to type...

Regards,
Manoj

கொன்டைகடலை குழம்பு நானும் செய்து பார்க்கிரேன்,ரொம்ப அழக கலர்புல செஇது இருக்கீங்க்

எளிமையான குறிப்பு.கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன்.நன்றி