தேதி: February 27, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால்- அரை லிட்டர்
மைதா- 500 கிராம்
கடலை மாவு- 150 கிராம்
சீனி- 250 கிராம்
நெய்- கால் கப்
ஏலப்பொடி- 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர்- 1 ஸ்பூன்
பொரிக்கத்தேவையான எண்ணெய்
உப்பு தேவையானது
பாலை கொதிக்க விட்டு ஒரு கப் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கெட்டியாக வரும்வரை கிளறவும்.
அத்துடன் கடலை மாவு, பொடித்த சீனி, ஏலம், நெய் கலந்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும்.
பாக்கியுள்ள மைதாவை பேக்கிங் பவுடர், சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகள் செய்து, அவற்றை மெல்லிய அப்பளங்களாக இடவும்.
ஒவ்வொரு அப்பளத்திலும் ஒரு உருண்டை பூரணத்தை வைத்து மடித்து ஓரங்களை அழுத்தி மூடவும்
அவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Comments
coconut poornam
Portia Manohar
Can you advise how to prepare coconut poornam?
Can we stuff coconut poornam for suryakala.let me know pls
Portia Manohar
தேங்காய் பூரணம்
அன்புள்ள போர்ஷியா மனோஹர்!
தேங்காய் பூரணம் செய்வது மிக எளிது. 2 கப் தேங்காய்த்துருவலை ஒரு ஸ்பூன் நெய்யில் சில வினாடிகள் வதக்கவும். ஒரு கப் வெல்லத்தை கம்பிப்பாகு காய்ச்சவும். தேங்காய், அரை ஸ்பூன் ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறவும். தித்திப்பு அதிகம் வேஎண்டுமென்றால் ஒரு கப் தேங்காய்த்துருவலுக்கு ஒரு கப் வெல்லம் என்று சேர்க்கவும். சூர்யகலாவிற்கு தேங்காய்ப்பூரணம் வைத்து தாராளமாக செய்யலாம். அடுத்த நாள் வைத்திருக்க முடியாது. தேங்காய் என்பதால் கெட்டு விடும்.
Mano Madam
Portia Manohar,
indha pooram kozhulukattai ulla stuff panna mudiyuma mano madam.Clear the doubt mano madam.
Portia Manohar
கொழுக்கட்டையில் தேங்காய் பூரணம்
அன்புள்ள போர்ஷியா மனோஹர்!
தாராளமாக செய்யலாம். கொழுக்கட்டைக்கு இந்த பூரணம் மிகவும் நன்றாக இருக்கும். ஓரங்களை கவனமாக ஒட்டி செய்யுங்கள். நன்றாக வரும்.