மிகவும் அவசரம் பதில் தாருங்கள் என்னருமை தோழிகளே குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி

அன்புள்ள தோழிகளே
என் குழந்தைக்கு முஹம்மது ஆதிப் என்று பெயர் வைத்து இருக்கிறோம்.....வாழ்த்து சொன்ன அனைத்து தோழிகளுக்கும் எங்களது மனார்ந்த நன்றிகள் .......எனக்கு ஒரு பிரச்சனை தோழிகளே இது எனக்கு முதல் குழந்தை ,இன்று வரை பத்து நாள் ஆகிறது என்னவென்றால் மார்பிலிருந்து பால் வடிந்து கொண்டே உள்ளது ......குழந்தை குடிக்கும் போது பால் வருவது இல்லை .......மிகவும் அவசரம் பதில் தாருங்கள் .......

தில்ஷாத்....நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை. விளக்கமாக சொன்னால் பதில் சொல்ல எதுவாக இருக்கும்.

குழந்தைகள் குடிக்க குடிக்க தான் பால் ஊரும். குழந்தைகளின் பசியை பொருத்து தான் ஊரவும் செய்யும். அந்த விகிதத்தை தெரிந்துக் கொள்ள தாய்மார்களின் உடம்பிற்கு இரண்டு மாதங்களாவது ஆகும்.

முதல் சில நாள் குழந்தைக்கு சீம் பால் போன்று தான் வரும். அது கண்டிப்பாக குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். பிறகு தான் நார்மலாக வரும். நீங்கள் குழந்தைக்கு பத்து நாள் தான் ஆகிறது என்று சொல்லியிருக்கீங்க....அதனால் பால் சுரப்பு அதிகமாக இருந்தாலும் குழந்தைக்கு சப்பி குடிக்க தெரியாது தான். போக போக பழகிடும். வடியும் பாலை சங்கில் பிடித்து குழந்தைக்கு புகட்டி பாருங்கள். அத்தோடு விட்டு விடாமல் மார்பில் வைத்தும் பழக்கி விடுங்கள். மார்பில் வைத்து குழந்தையின் கீழ் உதட்டை மேலும் கீழும் ஆட்டுங்கள். சும்மா இருக்கும் போது கூட இப்படி செய்யலாம். அவர்களுக்கு அப்படியே பழகும்...சில குழந்தைகள் முரண்டு பண்ணும்....அவர்களுக்கு இப்படி சொல்லிக் கொடுக்கலாம். முக்கியமான விஷயம் பால் கட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலைப்பை சிறியதாக மாற்ற முடிந்தால் மாற்றிவிடுங்கள் ப்ளீஸ்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சிலருக்கு இப்படி இருக்கும்னு சொல்வாங்க 40 நாள் பீப்பால் ஊறும்னு சொல்வாங்க முடிந்த மட்டும் 10,20 நிமிஷத்திற்கொருமுறை கொடுக்க முடிந்தால் தூக்கி கொடுங்கள் இல்லாவிட்டால் பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி கொடுங்கள் பிள்ளைகள் அதிகனேரம் தூங்கிக்கொண்டே இருக்கும் குழந்தை வாய் வைத்து சப்புவதே நல்லது மற்ற நேரம் பால் ஊராமலிருக்க லேசாக மார்பகத்தை சுத்திவிடனும் அதுவே வருவது மாறிக்கிரும்

மேலும் சில பதிவுகள்