வாகனங்களின் பாதுகாப்பையும் கொஞ்சம் கவனிக்கலாமா?

தோழிகளே,
நாம் வாங்கும் வாகனங்களை புதியதில் நன்கு கவனிக்கிறோம்,பின் அதனை பராமறிப்பதில் சற்று தேக்கநிலை உருவாகிறது.இதனால் வாகனங்கள் சீக்கிரம் பழுதடைதல்,மைலேஜ் குறைதல்,இதனால் அடிக்கடி பாகங்கள் மாற்றுதல்,பணம்,நேரம் செலவு இப்படி இழப்புகள். இதைத்தடுக்க வாகனங்கள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.மேலும் அவற்றிற்கு உண்டாகும் பிரச்சனைகள்,அதனை சரிசெய்தல் போன்றவற்றையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்....

ஒவ்வொரு வாகனத்தைப்பற்றி தெரிந்த தோழி,தோழர்கள் அதனை பாதுகாப்பது மற்றும் அவற்றில் வரும் பிரச்சனைகள்,அதை சரிசெய்யும் முறைகளையும் இங்கு வந்து கூறுங்கள்.அது அனைவருக்கும் உதவியாக இருக்கும். (எனக்கு கண்டிப்பா உதவும்....)

கார் பானட்டில் ,
காரின் பானட்டில் எலி பூந்து விளையாடுகிறது.இதுதான் எனக்கு இப்போதைய பெரும் பிரச்சனை....இடதுபக்க "ஹெட் லாம்ப்பின்" ஒயரை (மேல் கலர் ஒயர்) கடித்துவிட்டது.மேலே கருப்பு டேப் சுத்தியுள்ளோம்.எலி வராமலிருக்க என்ன செய்யலாம்?

கார் பானட்டில் எலி
இது கதை தலைப்பல்லப்பா, யாராவது இதற்கு வழி தெரிந்தால் சொல்லுங்களேன்......ரேணுதேவ் உன்னவரை கேட்டு சொல்றன்னுட்டு இப்படி காணாம போய்ட்டயே.......:(

சாரி ரேணுராஜ், எனக்கு பைக் கார் பத்திலாம் ஒண்ணும் தெரியாது... இருந்தாலும் இதுல எக்ஸ்பர்ட் யாரது இருப்பாங்க... அவங்க சொன்னா எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சாரி ரெண்டு தடவை லோட் ஆயிட்டு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எலி தலைவர்கள் தொல்லை எப்பவும் அதிகம் தான்... ;) எங்க வீட்டு பழைய அம்பாசடர் காரிலும் சுற்றி திரிந்தார்கள் ஜோடியாக. இப்போது இருவரும் எங்க கிராமத்தில் வசிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். போன முறை ஊருக்கு போனப்போ இறக்கி விட்டுட்டோம். ;) ஹிஹிஹீ.

சில யோசனைகள்:

1. கார் கவர் இல்லாம நிறுத்துங்க... கவர் இருந்தா பதுங்க, குளிருக்கு அடக்கமா இருக்கும்.

2. பானட்டில் உள்ளே எலி மருந்து வெச்சு பாருங்க.

3. கார் நிறுத்தும் இடம் சுத்தமா வைங்க. செடி மண்டி கிடந்தா எலி ஒழியாது. குப்பை இல்லாம பார்த்துக்கங்க. கண்ட சாமாங்கள், தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைக்காம பார்த்துக்கங்க.

4. கார் உள்ளே எதுவும் சாப்பிடும் பழக்கம் வேண்டாம். அதுக்காகவே இவங்க வருவாங்க.

5. வீட்டில், பூனை நாய் இருந்தா கார் கிட்ட கட்டுங்க தினமும்... இவங்க வாசம் கார் கிட்ட இருந்தா எலி வராதாம். ;)

6. புகை இலை பேனட் உள்ளே அங்க நக்க வைங்க. இது வாசத்துக்கு எலி எட்டியே பார்க்காதாம்.

7. மிளகாய் தூளை அவங்க ஊல்லே நுழையும் வழியில் தூவி வைக்கலாமாம்... அது பட்டதும் எறிச்சல் தாங்காம ஓடிடுவாங்க :)

இதெல்லாம் ஒரு காலத்தில் எங்க வீட்டு கார் உள்ளே இருந்தவர்களை விரட்ட நெட்டில் படிச்சு பார்த்தது. உங்களுக்கு பயன்பட்டா சரி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நா இப்பதா பாத்தேன் பா என்னப்பா மெக்கானிக் கிட்ட எலி ஒழிக்கிறது எப்படினு கேட்ட கோவம் வரும் பா ஏதாவது மெக்கானிக்கல் ப்ராப்ளம்னா சொல்லுங்கபா கண்டிப்பா கேட்டு சொல்றேன் வனிக்கா சொன்னதும் உங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும்னு நெனைக்கிறேன் பா நாய் இருந்தா அங்க எதும் வராது உண்மையாவே எங்க ஷெட்ல அந்த ப்ராளமே இல்ல ஏன்னா அங்க 3 பேர் இருக்காங்க பா நைட்ல அவங்கள கழட்டி விட்டுட்டு வந்துடுவாங்க பா எதும் நாசம் ஆகாது பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வனி,ரேணுதேவ்
எலிபோக நீங்கள் கூறியதில் சிலதை முயற்சித்தாயிற்றூ, 2மட்டும் செய்யலை.
வனி
1.கார் கவரில்லாமல் நிறுத்தினால் பனியினால் கலர் போயிடும்னு சொல்றாங்கப்பா.
2.நாங்கள் மேல்புறம் மட்டும் சீட் இறக்கி இருக்கோம்(சுற்றிலும் ரூம்போல அடைக்கலை.)கீழே சிமெண்ட் பூச்சு உள்ளது.
3. நாய் இருந்ததுப்பா அப்பவும் எலி ஓ.....டி விளையாடுது,நாய் மேல கூட....:(
4.குப்பை,சாமான்கள் இல்லாமல் சுத்தமாகத்தான் வைத்துள்ளேன்.ஆனால் நிறுத்துமிடம் மட்டுமல்லாமல் நாங்கள் இருக்குமிடமும் காடாக உள்ளது(அறுவங்காடு ),சோ என்ன செய்வது ? மழைநாட்களில் புற்களுக்குக்காகவே பசு வருகிறாது.
5.எலி மருந்து ரேட்கில் அடிக்கடி வைத்தோம் 2எலி வெளிவர வழி தெரியாமல் உள்ளேயே இறந்துவிட்டது.அதையெடுக்க நான்பட்ட பாடிருக்கே......ஐய்யய்யய்யோ.....:(( இப்பவும் வாமிட் வருதுப்பா...
6.புகையிலை வைத்தோம் பயனில்லை.அதையும் கொறித்து ஓரத்தில் குப்பை பண்ணிடுத்து......
7. மிளகாய்ப்பொடிதான் இன்னும் முயற்சிக்கலை.......இனி அடுத்து அதுதான்........உர்......அந்த பொல்லாத காட்டு எலிகளை.....நான் கவனித்துக்கொள்கிறேன்....இனி சக்தி மிளகாய்ப்பொடிதான் அதுகளுக்கு.........

ரேணுதேவ்:
கண்டிப்பா கோவம் வராதுப்பா, ஏன்னா இதுமாதிரி பிரச்சனைகள் நிறைய வரும்ப்பா....டெக்னிகள் கேள்விகள்,மெக்கானிசம் பற்றியும் சந்தேகம் இருக்கு மெதுவா கேட்கிறேன்ப்பா.......

கண்டிப்பா கேளுங்கப்பா நானும் பதில் சொல்றேன் இதுக்கும்தா பதில் நைட் சொல்றேன் சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

காரின் கிளச் பற்றி,
தோழீஸ் காரில் கிளச் பாயிண்ட் எப்படி வைப்பார்கள்?
அதாவது நாம் ஓட்டும்போது பைட்டிங் என்று சொல்வோம்,கிளச்சை சிறிது சிறிதாக விடும்போது ஒரு பாயிண்டில் விடும் அதே செகண் எக்சிலேட்டர் கொடுக்கனும்.அப்பதான் வண்டி மூவாகும்,.இல்லைன்னா குலுங்கி ஆஃப் ஆகிடும்.
எனக்கு என்ன சந்தேகம்ன்னா இந்த பாயிண்ட் நாம சர்வீசில் சொல்லி நமக்கு தகுந்தார்போல வைத்துக்கொள்லலாமா?ஏன்னா எனக்கு ஒரு இடத்தில்(கிளச் விடும்போது பாதியில்) டப்புனு அதுவே ரிலீஸ் ஆகுது அதனால் கேட்கிறேன்...

மைலேஜ் கிடைக்க வழிகள்:
புது வண்டி வாங்கும்போது கிடைக்கும் மைலேஜ் வருடம் ஆக ஆக குறைகிறது. பொதுவாக இது எந்தெந்த காரணங்களால் குறையும்?
நாம் வண்டி ஓட்டும்போது எதை செய்தால் மைலேஜ் கிடைக்க வழிசெய்யும்?என் வண்டியில் பெட்ரோல் மற்றூம் எல்,பி,ஜி இரண்டும் உள்ளது...தெரிந்தவர்கள் சொல்லுங்களேஎன்....

மேலும் சில பதிவுகள்