பச்சைபயிறு பொடி.

பச்சைபயிறு வெயிலில் காய வைக்காமல் அரைத்து வைக்கலாமா? குழந்தைக்கு குளிப்பாட்ட பயன் படுத்துவேன். இங்கே குளிர் வந்துவிட்டதால் காய வைக்க முடியவில்லை.வறுத்து அரைத்து பொடி செய்து குழந்தைக்கு உபயோக படுத்தலாமா

பச்சைபயிறு பொடி.

Kalai

பச்சைபயிறு பொடி.

Kalai

தோலுடன் இருக்கும் பயறு நல்லா காய்ந்து இருந்தாலே போதும் அதை அரைத்து நன்றாக பொடித்து சலித்து வைத்து கொள்ளலாம். வறுக்க தேவையில்லை.

நன்றி உமா,பயிரை வெயிலில் காய வைக்கவேண்டாமா?அப்படியே பொடித்து வைத்தால் அதிக நாட்கள் இருக்குமா?

Kalai

//பொடித்து வைத்தால் அதிக நாட்கள் இருக்குமா?// இது நீங்கள் இருக்கும் இடத்து காலநிலையைப் பொறுத்தது. கெட்டுவிடும் என்று நினைத்தால் ஒன்றாக அல்லாமல், குறைந்த அளவில் பொடித்து வைத்துக் கொள்ளுங்க கலா. எப்படியும்.... ஒரு மாதமளவுக்கு இருக்காதா? ஒரு தடவை ட்ரை பண்ணுங்க.

(ஒரு ஐடியா, ;) திட்டப்படாது, ப்ரிஜ்ல வச்சுட்டு... குளிக்க அரைமணி முன்னால தேவையான அளவு எடுத்து வெளில வச்சா!!!)

‍- இமா க்றிஸ்

தோல் பச்சை பயறை நன்றாக காயவைத்து தான் அரைக்கணும். ஆனால் காயாமல் இருந்தால், ஒரு கடாயை நல்லா சூடு பண்ணி அதில பயறை போட்டு நல்லா சூடு பண்ணுங்க பயறை தொட்டால் சுடணும், நன்றாக வறுத்து விட கூடாது. வறுத்தால் வாசனை வரும் அதற்கு முன்பே சூடேறியதும் அதை எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

இமா ஆன்டி நன்றி..கொஞ்சமா அரைத்து வைத்து பார்கிறேன் ஒரு தடவை.
//(ஒரு ஐடியா, ;) திட்டப்படாது, ப்ரிஜ்ல வச்சுட்டு... குளிக்க அரைமணி முன்னால தேவையான அளவு எடுத்து வெளில வச்சா!!!)//இது நல்ல யோசனைதான் இதுக்கு ஏன் திட்டனும்,அதுவும் இமா ஆன்டிய :)

Kalai

இதைத்தான் முதல்ல வருக்கலாமானு கேட்டுட்டேன்..இதையும் செய்து பார்கிறேன் கொஞ்சமாக..நன்றி உமா

Kalai

மேலும் சில பதிவுகள்