உங்களின் சந்தோசமான பிறந்தநாள் பற்றி ....

ஹாய் தோழீஸ்/தோழாஸ்,

அனைவரும் இங்க ஓடி வாங்க நா ஒரு புதுத்தலைப்பு கண்டு புடிச்சு இருக்கேன் .
அதும் இந்த மாதத்திற்கு ஏற்ற மாதிரி ,ஏன்னா இந்த மாதம் நம்ம அறுசுவைக்கு ஸ்பெஷல் ஆனா மாதம்.இந்த மாதம் நம் அறுசுவை தோழிகள் நிறைய பேர் பிறந்தநாள் கொண்டாடுறாங்க அதான் ஸ்பெஷல்.

சரி விசயத்துக்கு வரேன் உங்களோட பிறந்த நாள்லயே மறக்கமுடியாத பிறந்த நாள் ந எத சொல்லுவிங்க எப்போ யாரால சந்தோசபட்டிங்க,பிடிச்ச பரிசு எது ,யார் கொடுத்தாங்க இப்டி ஒன்னு விடாம வந்து சொல்லணும் சரியா .

எல்லோரும் ரெடியா! முதலாவதா பதிவு போடுறவங்களுக்கு என் கையாள கடைல ஸ்வீட் வாங்கி தரப்படும் ஹி ஹி ஹி வாங்க வாங்க

அன்புடன் உங்கள் தோழி இளையா.க

என்னோட கல்லூரி காலங்கள்ல எல்லாரும் ஏதாவது ஒரு பொம்மை, பரிசுப்பொருள், உளலங்கார பொருள்கள அன்பளிப்பா தருவாங்க. ஒரே ஒரு தோழி மட்டும் (திருப்பத்தூர் பொண்ணு இப்போ பெங்களூர்ல இருக்கா) எனக்கு பிடிச்ச புத்தகங்கள அன்பளிப்பா தருவா. இறுதி ஆண்டு படிக்கும்போது எனக்கு ஒரு மூக்குத்தி குடுத்தா. அதுமட்டும் இல்லாம எங்க துறை சார்பா ஒரு அன்பளிப்பும், ஜூனியர்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு அன்பளிப்பும் கொடுத்தாங்க.

முதுகலை பட்டபடிப்பு படிக்கும்போது ஹாஸ்டல்ல இருந்தேன். சுமார் 2000 மாணவிகள் தங்கி இருந்தோம். அந்த கட்டிடத்தில் 4 ப்ளாக் உண்டு. ஒவ்வொரு ப்ளாக்கிலும் 4 ப்ளோர் இருக்கும். என்னுடைய அறை நான்காவது ப்ளாக்கில் 4வது ப்ளோர். நள்ளிரவு 12 மணிக்கு தோழிகள் அனைவரும் (24பேர்) அன்பளிப்போடு கேக், சாக்லேட் எடுத்துட்டுவந்து முகத்துல பூசிவிட வந்தாங்க. அத பாத்துட்டு எஸ்கேப் ஆக ஓடினேன். தோழிகள் எல்லாரும் படைஎடுத்துவந்த சப்தம் கேட்டு வார்டன் கத்திடே வந்தாங்க. அவங்க எல்லா ப்ளாக்லயும் ஒவ்வொரு ப்ளோரா தேடி வரதுக்குள்ள நாங்க கொஞ்சமா ஆட்டம்போட்டுடு மீதிய ஹிட்லர் போனதும் தொடரலாம்னு ரூம்கு போய்டோம். 1/2 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தோம். நான் மிகவும் சந்தோஷமாக கொண்டாடிய(21வது பிறந்தநாள்) பிறந்தநாள் அது.

அதற்கு அடுத்த வருடம் என் கணவருடன் (திருமணத்திற்கு முன்பு) கொண்டாடினேன். கோவில், ஹோட்டல், ஷாப்பிங், தியேட்டர்னு கோயம்புத்தூரயே ஒரு சுத்து சுத்தினோம்.

இன்றும் என் வீட்டில் என் நண்பர்கள் கொடுத்த அன்பளிப்புகளை மட்டுமே என் வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். சிலர் இதற்காகவே தனியா காசு சேர்த்து வைத்து வாங்குவார்கள். ஒரு தோழி மிக வறுமையான குடும்பத்தை சேர்ந்தவள். தோழிகள் எல்லோரும் சென்றபிறகு தயங்கி தயங்கி கிப்ட் கொடுத்துவிட்டு "இத பாத்து சிரிக்க கூடாது என்கிட்ட இருந்த பணத்துல இதுதா வாங்க முடிஞ்சுது"னு சொல்லி குடுத்தா. அதுல ஒரு குட்டி பையன் கிரிக்கெட் பேட்ட தோள்ல வச்சுட்டு நிப்பான். என்னடா இது பிறந்தநாளுக்கு இதபோய் தறாளேனு நினைக்காதனு சொன்னா. அவளப்போலவே அவ கிப்ட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது.
என் வரவேற்பறைல முதல் பொம்மை அவள் கொடுத்ததுதா வச்சிருக்கேன். ஒவ்வொரு பொம்மையும் தோழிகள், ஆசிரியர்கள், தந்தையின் தோழர்னு ஒவ்வொரு நினைவை சுமந்துட்டு நிக்குது.

இந்த இழைய ஆரம்பிச்ச இளையாக்கு மிக்க நன்றி. உனக்கு ஒவ்வொரு பிறந்தநாளும் (ஒவ்வொரு நாளும்) சிறப்பானதாக அமைய வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

நாகா அக்கா நலமா உங்களோட இந்த அனுபவும் ரொம்ப அருமை அக்கா எனக்கும் இந்த மாதிரி நெறையா இருக்கு நேரம் கிடைக்குரப்போ சொல்லுறேன் முதுகலை எங்க படிச்சிங்க அக்கா ?

//(திருப்பத்தூர் பொண்ணு இப்போ பெங்களூர்ல இருக்கா)// அவங்க யாரு அக்கா பேரு என்னனு சொல்லுங்க எனக்கு தெரியுதான்னு பார்க்குறேன் .

//அதற்கு அடுத்த வருடம் என் கணவருடன் (திருமணத்திற்கு முன்பு) கொண்டாடினேன். கோவில், ஹோட்டல், ஷாப்பிங், தியேட்டர்னு கோயம்புத்தூரயே ஒரு சுத்து சுத்தினோம்.// ரொம்ப சூப்பர் அக்கா

//என் வரவேற்பறைல முதல் பொம்மை அவள் கொடுத்ததுதா வச்சிருக்கேன். ஒவ்வொரு பொம்மையும் தோழிகள், ஆசிரியர்கள், தந்தையின் தோழர்னு ஒவ்வொரு நினைவை சுமந்துட்டு நிக்குது.//
ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா நமளோட நினைவுகள் லாம் இந்த பரிசுகள் தான் சுமந்து நிக்குதுல்ல
உங்க வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி அக்கா by Elaya.G

என்னோட மறக்க முடியாத பிறந்த நாள் நு பாத்தா என்னோட காலேஜ் லைப் ல கொண்டாடினது தான் .எனக்கு எப்போ பிறந்த நாள் வந்தாலும் என்னோட நண்பர்கள் ஏதாது பிளான் போட்ருவாங்க எனக்கே தெரியாது என்ன பண்ண போறாங்கனு அந்த அளவுக்கு பிளான் போட்டு என்ன சந்தோஷ படுத்துவாங்க .

இளங்கலை இரண்டாவது இயர் ல இருந்து தான் என் பிரண்ட்ஸ் கூட நா க்லோஸ் ஆனேன் அப்போ ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் அவங்க கூட சந்தோசமா பிறந்த நாள் கொண்டாடிட்டு இருக்கேன்.

அப்போல இருந்து என்னோட பிறந்த நாள்கு எழுந்து குளிக்க கூட விடமாட்டாங்க கால் பண்ணி என் கிளாஸ் மேட் ஸ்கூல் மேட் நு நாம எதிர்பார்க்காத பெர்சன் லாம் கால் பண்ணுவாங்க அவளோ சந்தோசமா இருக்கும் இதெல்லாம். அறுவை போதுன்றின்களா சரிங்க மேட்டர்க்கு வரேன்.

எனக்கு பிடிச்ச பரிசுன்னு பார்த்தா நெறைய இருக்கு ஆனா லாஸ்ட் இயர் அப்போ என் பிரண்ட்ஸ் இரண்டு பேரு எனக்கு பெரிய டெட்டி பியர் வாங்கி தந்தாங்க அத என்னால மறக்கவே முடியாது எப்போவுமே அந்த கிப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வெளில கூட வைக்க மாட்டேன் என்னோட கப்போர்ட் ல வச்சு நானே அப்போ அப்போ எடுத்து பார்த்து என் பிரண்ட்ஸ் கிட்ட பேசுற மாதிரி பேசிட்டு இருப்பேன் தூங்கும் போது பக்கத்துல வச்சுப்பேன் அவளோ பிடிக்கும் .

எனக்கு டால் நா ரொம்ப பிடிக்கும் அதுனால என் பிரண்ட்ஸ் நெறைய டால் தான் வாங்கி குடுப்பாங்க குட்டி குட்டி டால் நெறையா வச்சுருக்கேன்
ஸ்கூல் படிச்சப்போ என் ஜூனியர் சீனியர் எல்லோரும் எனக்கு விஷ் பண்ணி கிப்ட் கிரீடிங் கார்டு லாம் குடுத்தாங்க எல்லாத்தையும் இன்னும் பத்திரமா வச்சுருக்கேன்.

அப்பறம் முக்கியமா என்னோட அம்மா அப்பா குடுத்த பெரிய கிப்ட் எப்போவும் நைட் 12 கு என்ன எழுப்பி தர முத்தம் இது தான் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச கிப்ட் இத பத்திரமா எனக்குள்ளே வச்சுருக்கேன்.

இன்னும் இருக்கு இப்போ இது போதும் இல்லாட்டி போர் அடிக்கும் ல

என்னோட பிரண்ட்ஸ் தான் என்னோட முழு சந்தோசம் எப்போவுமே. இந்த இயர் அவங்களாம் கூட இருப்பாங்களான்னு தெரில அவங்க மேரேஜ் முடுஞ்சு வேற வேற ஊருல இருக்காங்க ஆனா அறுசுவை பிரண்ட்ஸ் நீங்கலாம் கண்டிப்பா இருப்பிங்கன்னு நம்புறேன்.

அன்புடன் Elaya.G

///உங்களோட இந்த அனுபவும் ரொம்ப அருமை/// நன்றி இளையா :-)

///முதுகலை எங்க படிச்சிங்க/// கோயம்புத்தூர்ல படிச்சேன்

///பேரு என்னனு சொல்லுங்க எனக்கு தெரியுதான்னு பார்க்குறேன்./// அவ பேர் ஜீவிதா. அவ lkg-ug apsaல தான் :-))

KEEP SMILING ALWAYS :-)

///பெரிய டெட்டி பியர் வாங்கி தந்தாங்க///
எனக்கு டெட்டி ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்.

///அம்மா அப்பா குடுத்த பெரிய கிப்ட் எப்போவும் நைட் 12 கு என்ன எழுப்பி தர முத்தம்///
வாழ்க்கை முழுவதும் கூடவே வர இனிமையான தருணம் :-)

///அறுசுவை பிரண்ட்ஸ் நீங்கலாம் கண்டிப்பா இருப்பிங்கன்னு நம்புறேன்.///
கண்டிப்பா இருப்போம். எப்பவுமே இருப்போம். :-)

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு ஒவ்வொரு பிறந்தநாளுமே இனிமையான பிறந்த நாள் தான்... :) ஏன்னா வாழ்நாளில் ஒரு வருடத்தை முடிச்சுட்டோம்னு ஒரு திருப்தி, நிம்மதி அன்னைக்கு தானே கிடைக்குது ;)

மற்றபடி எல்லா பிறந்த நாளுமே ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலா தான் அமையுது. எதைன்னு குறிப்பா சொல்ல... ரொம்ப ஸ்பெஷல்னா... திருமணத்துக்கு முன் நிச்சயம் ஆனதும் வந்த பிறந்த நாள்... கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து என்னவர் அனுப்பிய பூங்கொத்து!!! எதிர் பாராத நேரத்தில் வந்த அந்த பூக்கள் என் பிறந்த நாளை அழகாக்கின!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கண்டிப்பா இருப்போம் எப்பவுமே இருப்போம்.//ரொம்ப நன்றி அக்கா

//எனக்கு டெட்டி ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்.// எனக்கும் ரொம்பபபபபபப பிடிக்கும் அக்கா

எனக்கு உங்க பிராண்ட தெரில பார்த்த தெரியுன் நெனைக்குறேன்
by Elaya.G

///எதிர் பாராத நேரத்தில் வந்த அந்த பூக்கள் என் பிறந்த நாளை அழகாக்கின!!!/// ரொம்ப அழகான தருணம்

KEEP SMILING ALWAYS :-)

//வாழ்நாளில் ஒரு வருடத்தை முடிச்சுட்டோம்னு ஒரு திருப்தி// எனக்கு ரொம்ப கவலையா இருக்கும் அக்கா பெரிய பிள்ளை ஆயிட்டே போறோமேன்னு வயசு கூட கூட எதோ சந்தோசம் குரயுராபுல தெரியுது .

//கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்து என்னவர் அனுப்பிய பூங்கொத்து!!!// ம் சூப்பர்

by Elaya.G

"பிறந்த நாள்....இன்று பிறந்த நாள்...நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்"....

எனக்கு ஒவ்வொரு பிறந்த நாளுமே ஸ்பெஷலான நாள்தான்....திருமணத்திற்கு முன் பெற்றோரால் கொடுக்கப்பட்ட பரிசு...பெரும்பாலும் உடைதான்....என் திருமண நாள் ஏப்ரலில்...பிறந்த நாள் மே மாதம்.....என் திருமணத்திற்கு பின் என் கணவர் வாங்கிக் கொடுத்த புடவை....மிக சந்தோஷமான தருணம் அது........பின் குழந்தைகள் சிறு வயதில் கொடுத்த சின்னப் பரிசுகள்....ஏதோ உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சியான நேரங்கள் அவை....இன்று பெண், பிள்ளைகளோடு மருமகள்கள், பேரன், பேத்திகள் கொடுக்கும் பரிசுகள் ஒவ்வொரு பிறந்த நாளையும் இனிமையாக்குகின்றன....என் குட்டிப் பேத்தி சென்ற வருடம் என்னை மாதிரியே வரைந்து கொடுத்த ஓவியம் மறக்க முடியாத பரிசுதானே?
எல்லாவற்றையும்விட என் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் என் கணவர் என்னைப் பார்த்து "பிறந்த நால் அன்று வயது கூடுவதுதான் இயற்கை....ஆனால் உனக்கு மட்டும் எப்படி வயது குறைகிறது....என்ன ரகசியம்?" என்ற பாராட்டுதான் என்னை வானத்தில் பறக்கச் செய்யும்...

பிறந்த நாள் அன்று வயதைப் பற்றி கவலைப் படாமல்(இது இளயாவுக்கு)இன்னும் நாம் என்னவெல்லாம் செய்யலாம், நாமும் மகிழ்ச்சியோடு இருந்து மற்றவரையும் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று யோசித்து நல்ல காரியங்களைச் செய்து, மனதை இளமையோடு வைத்துக் கொண்டால் எல்லா பிறந்த நாளுமே மறக்க முடியாத நாட்கள்தான்!!

மேலும் சில பதிவுகள்