பேன் கேக் செய்முறை.

வெளிநாடுகளின் முக்கிய காலை உணவுகளில், இந்த பேன் கேக்கும் ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதை நாமும் செய்துப் பார்த்து இந்த வார சன்டே பிரேக்ஃபாஸ்ட்டை வீட்டிலேயே அசத்திடலாம் வாங்க. கீழ்க் காணும் முறை பேஸிக்கான பேன் கேக் முறை.

தேவையான பொருட்கள்: மைதா ஒரு கோப்பை, முட்டை ஒன்று,பால் ஒரு கோப்பை,சர்க்கரை நான்கு தேக்கரண்டி,உப்பு ஒரு சிட்டிக்கை, பேக்கிங் சோடா அரைத்தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி,எண்ணெய் இரண்டு தேக்கரண்டி போதுமானது

1.முதலில் முட்டையை உடைத்து மஞ்சட் கரு,வெள்ளைகரு வேறாக பிரித்து வைக்கவும்.

2.அகலமன கோப்பை ஒன்றில் மைதாவுடன் உப்பு, சர்க்கரை பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடரைச் சேய்த்து கலக்கவும். பிறகு பால் மற்றும் முட்டைய்ன் மஞ்சட் கருவையும் சேர்த்து, அனைத்தையும் கரண்டியால் நன்கு கலக்கி வைக்கவும்.

3.பின்பு எடுத்துவைத்துள்ள வெள்ளைக்கருவை நன்கு நுரைக்க அடித்து மாவுக் கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

4.பின்பு தோசைக் கல்லில் சிறிது எண்ணெயைத் தடவி மாவுக் கலவையிலிருது ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றவும், தேய்க்க வேண்டாம் அதுவாக பரவிக் கொள்ளும். கல்லின் அளவிற்க்கேற்றவாரு ஒன்றுக்கும் மேல் ஊற்றலாம். எண்ணெய் ஊற்ற வேண்டாம் கல்லில் ஒட்டியிருக்கும் எண்ணெய் போதுமனது.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு இளஞ்சிவப்பாக சுட்டு எடுக்கவும்.

மேற்கூறிய அளவில் ஒரு கரண்டி மாவு வீதம் எட்டு பேன்கேக்குகள் செய்யலாம்,இதனுடன் வெண்ணெய்,மேபில் சிரப், மற்றும் பிடித்தமான பழங்களுடன் பரிமாறலாம்.

இதன் மாற்று முறையாக பாலுக்கு பதில், நன்கு அடித்த மோரும் சேர்த்து செய்யலாம் அல்லது ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்த்தும் செய்ய்லாம். மேலும் அவரவருக்கு பிடித்தமான பழங்களைச் சேர்த்தும் செய்யலாம்.வாழைப்பழத்தை சேர்த்து செய்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

இதிலுள்ள ஒரு சில நுனுக்கங்களையும் கூறுகின்றேன்.

1. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் அடித்து ஊற்றக்காரணம் அவ்வாறு நுரைக்க அடிக்கும் பொழுது அதனுடன் சேறும் காற்று பேன் கேக்கை பஞ்சுப் போல் மெத்தென்று இருக்க உதவுகின்றது.

2. அடுப்பின் அனல் மிகமிக முக்கியம். தோசைகல் சூடேரும் வரை அனல் இருந்தாலே பொதுமானது, மற்றபடி கிட்டத்தட்ட சிம்மில் இருப்பது நல்லது. இல்லையென்றால் மாவு நின்னு வேகாமல் ஊற்றிய சீக்கிரத்தில் தீய்ந்துவிடும்.

3. மாவுக் கலவையில் திடப் பொருட்களைச் சேர்த்து அனைத்தையும் ஜல்லடையால் ஜலித்து வைத்தாலும் நல்லது,இதனால் மாவு ஒரே சீராக கலக்கியிருக்கும்.

4.மாவை அகலமான கோப்பையில் கலக்குவதால் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து கலக்கும் பொழுது அதிகமாக கலக்கத்தேவையிருக்காது.

டியர் மனொ மேடம்,

எப்பிடி இருக்கிங்க? ஒரு வழியாக் மய்தா வாங்கி வந்தாச்சு. இந்த சனிகிழமெய் பண்ன போகிறேன். என்க்கு ஒரு சந்தேகம். மாவு மிதி இருந்தால் ப்ரிட்ஜில் வய்க்கலாம? என்னுடய்ய தமிழ் கொஞ்சம் தப்பாக இருக்கும். முய்ர்ச்சி பன்னி கொன்டு இருக்கிரேன். தப்பு வராமல் இருக்க. பூன்டு ஊருகாய் போடுவது சொல்லுங்கள். எனக்கு தமிழ் பேச தெரியும் எழுத கொஞ்சம் கஷ்டமாக உள்ள்து. என்க்கு மல்லயாள்ம் தான் தெரியும். என்க்கும் ரெசிப்பி குடுக்க ஆசய்யாக உள்ளது. எனக்கு கேரள சமய்யல் தெரியும். கூடிய சிக்கிரேமே நான் ரெசிப்பி குடுக்க பார்க்கிரேன்.

மனோகரி மேடம்,
உங்கள் குறிப்புகளும் ஆலோசனைகளும் மிக அருமை. உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தெரியாத விசயஙகள் பலவும் தெரிந்து கொன்டென். மிக்க நன்றி.what is the difference between baking soda &baking powder. என்னிடம் bakingsoda இருக்கிறது. US ல் baking powder என்ன பெயரில் கிடைக்கும். thanks.

கதீஜா நேற்று பாதியில் பதில் போட போட போயிட்டேன்..இங்க தான் இருக்கேன் நான்...இன்சாஃப் குட்டி சுகமா.
இப்பல்லாம் இவ தூங்குர்தில்ல பகலில்..அதான் நானும் பிசியாயிட்டேன்.இன்றும் செம்ம வேலை காத்து கிடக்கு..பிறகு வருகிறேன்

ஹலோ jannath எப்படி இருக்கீங்க?என்னுடைய பதிவுகளைத் தாங்கள் விரும்பிப் படிப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன் நன்றி. பேக்கிங் பவுடரை அதே பெயரில் தான் விற்ப்னைச் செய்கின்றார்கள் ஆகவே சோடாஉப்பு வாங்கும் இடத்திலேயே கிடைக்கும் அடுத்த முறை ஸ்டோருக்கு போகும் பொழுது பார்க்கவும்.

இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது என்றாலும் பேக்கிங் சோடாவில் எந்தப் பொருளும் கலந்திருக்காது, ஆனால் பேக்கிங் பவுடர் என்பது பேங்கிக் சோடா ஒரு மடங்கும்,டார்டாரிக் ஆஸிட் என்ற பவுடர் இரண்டு மடங்கும் சேர்ந்த கலவை.

பேக்கிங் செய்ய இவை இரண்டையும் பயன்படுத்த வேண்டும் ஏனென்னில் பொருட்களின் அளவு அதிகரிப்பதுடன் அதிக நாட்கள் கெடாமலும் சுவையுடன் இருக்கும். மேலும் பேக் செய்யும் குறிப்புகளின் தனமைக்கு ஏற்ப இவைகளை கூட்டி, குறைத்து கொள்ளலாம். உதாரணமாக சாப்ட்டாக இருக்க வேண்டுமானால் பேக்கிங் பவுடர் அதிகமாக இருக்க வேண்டும்,மொரு மொருப்பாக இருக்க வேண்டுமானால் சோடாவின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.

பேக்கிங் அல்லாத உணவுப் பண்டங்களுக்கும்,மற்றும் மாவு வகைகளை விரைவாக புளிக்கச் செய்யவும் சோடாவைமட்டும் பயன்படுத்தினால் போதும்,இவைகளுக்கு பேக்கிங் பவுடரைச் சேர்க்கக் கூடவே கூடாது ஒகேவா.நன்றி

டியர் மனொ மேடம்
நான் நன்ராக இருக்கிரேன். ரொம்ப நன்றி.நீங்கள் எப்படி இருக்கிங்க? நான் தெளிவாக தெரிந்து கொன்டென். once again thanks for ur detailed explanation.

நேற்று அனுப்பியஎன் பதிவைக் காணோமே??என்டே பொன்னு ச்சேச்சி இதை நேற்று காலை உணவாக செய்தேன்..மேலே சர்க்கரைப் பாகு ஊற்றினேன்..மிகவும் சுவையாக பஞ்சு போல் வந்தது...அதிலும் என் மகல் சாப்பிட்டாள் அது தான் ஆச்சரியம்..மிகவும் மென்மையாக சுடவே ஆசை வரும்படி எளிமையாக பஞ்சு போல் வருகிறது..சீக்கிரம் வெந்தும் விடுகிறது..அருமையான குறிப்புக்கு மிக்க நன்றி

மேடம் எனக்கு கொஞ்ஜம் பூண்டு உறுகாய் ரெசிப்பி குடுங்களேன். நிங்களும் ஜலிலா மேடமும் தான் எனக்கு உடனேயே தற்றிங்க. ரொம்ப நான்றி

அன்புள்ள மனோஹரி மேடம்
உங்கள் பேன் கேக் ரெசிப்பி செய்து பார்தேன் .மிகவும்
நன்றாக வந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டாங்க.

ரொம்பா அழகா அதன் நுனுக்கங்கலை தெளிவா எலுதியமைக்கு எனது அன்பான நன்றி.

அன்புடன் பர்வீன்.

நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் இரண்டு நாட்களாக இண்டெர்நெட்டில் நுழைய முடியவில்லை என்பதால் உடன் பதில் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். பலமுறை பல இடங்களில் விளக்கிய விசயத்தை மீண்டும் இங்கே விளக்குகின்றேன்.

கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்து குறிப்புகள் கொடுக்க சில விதிமுறைகள் வைத்திருக்கின்றோம். அதன்படி, குறிப்புகள் கொடுப்போர் நல்ல தமிழில் பிழையின்றி குறிப்புகள் கொடுக்க வேண்டும். குறிப்புகள் அவரது சொந்தக் குறிப்புகளாக இருக்கவேண்டும்.

குறிப்புகள் கொடுப்போரே அவற்றை நேரடியாக அறுசுவை தளத்தில் வெளியிடுவதால், அதில் பிழைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு. ஒருவரால் நல்ல தமிழில் பிழையின்றி குறிப்புகள் கொடுக்க முடிகின்றதா என்பதை நன்கு பரிசோதித்த பின்னரே அவரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றோம்.

கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் வழங்கும் ஒரு சிலர் தமிழில் நிறைய பிழை செய்கின்றாரே என்று கேள்வி எழுப்பினால், எனது பதில் அப்படி செய்பவர்களின் எண்ணிக்கையை இனியும் அதிகரிக்க விரும்பவில்ல என்பதுதான். உறுப்பினர்கள் சேர்க்கையில் இனி நிறைய விசயங்களில் கண்டிப்பு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

உங்களுக்கு நான் தரும் ஆலோசனை, வெறும் குறிப்புகள் கொடுப்பதை தவிர்த்து யாரும் சமைக்கலாம் பகுதிக்கு படங்களுடன் குறிப்புகள் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு குறிப்புதான் என்பதால் எங்களால் அதை எடிட் செய்து வெளியிட முடியும். உங்கள் குறிப்பும் எல்லோரையும் சென்றடையும்.

ஹலோ விஜி எப்படி இருக்கீங்க? உங்களுக்கு பிடித்த பூண்டு ஊறுகாய் குறிப்பை இன்று எனது கூட்டாஞ்சோறு குறிப்புகளில் இணத்துள்ளேன், தயவுச் செய்து அங்கு சென்று பார்வையிடவும், இன்றைய புதுசு கலா புதுசிலும் உள்ளது செய்து பார்த்து எப்படி இருந்ததென்று கூறவும்.நன்றி.

மேலும் சில பதிவுகள்