தேதி: October 27, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கம்பு மாவு - ஒரு கப்
வெல்லம் (துருவியது) - 1/2 ல் இருந்து 3/4 கப் வரை
தேங்காய் துண்டுகள் - 1/3 கப்
ஏலக்காய் - 2
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் - 2 மேசைக்கரண்டி
முதலில் ஏலக்காயை தட்டி, உள்ளே இருக்கும் விதைகளை பொடித்து வைக்கவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொண்டு அதனுடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, தேங்காய்த்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி, அரை மணி நேரம் விடவும். அதன்பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பின்னர், ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையிலேயோ (அல்லது) எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரிலோ மெல்லிதாக தட்டி நான்கு, ஐந்தாக தவாவில் போட்டு, சுற்றிலும் சிறிது நெய்/நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும், அடைகளை மெதுவாக திருப்பிவிட்டு மேலும் ஒரு சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

மாலை நேரத்தில் சாப்பிட, சுவையான, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு ஐட்டமாக இருக்கும் இந்த இனிப்பு கம்பு அடை.

சிலசமயம் வெல்லத்தில் ஏதேனும் தூசி, மண் இருக்க வாய்ப்பிருக்கு. அப்படி தெரிந்தால், கரைத்த வெல்லத் தண்ணீரை வடிக்கட்டி, அடை மாவு பிசைய பயன்படுத்தவும்.
அடையை தட்டும்போது, ரொம்பவும் மெல்லிதாக தட்டாமல் கொஞ்சம் தடிப்பாகவே தட்டவும். மிகமெல்லிதாக இருக்கும் பட்சத்தில், திருப்பிபோடும்போது, உடைந்து விட வாய்ப்பிருக்கு.
Comments
susri
நல்ல ஆரோக்கியமான குறிப்பு. வாழ்த்துக்கள். மேன்மேலும் நல்ல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகிறேன்.
சுஸ்ரீ
ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான குறிப்பு. பார்க்கவும் ரொம்ப பிடிச்சிருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கணும். அழகா வந்திருக்கு படங்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரொம்ப நல்ல டிஷ்... கம்பு மாவு
ரொம்ப நல்ல டிஷ்... கம்பு மாவு என்பது கடையில் ரெடிமேடாக வாங்கும் கம்பு தோசை மாவா..... இல்லை கம்பை பொடி செய்வதா..............
கம்பு மாவு என்றால் என்ன?
கம்புமாவு என்றால் என்ன யாராவது சொல்வீங்களா?pls..............
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
சுஸ்ரீ,
சுஸ்ரீ,
கம்பு அடை சூப்பர் குறிப்பு.அழகா செய்து இருக்கீங்க.அதுவும் வெல்லம் சேர்த்து செய்திருப்பதால் கண்டிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.விருப்ப பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சுஸ்ரீ.
susri
கம்பு அடை சூப்பரா இருக்கு ஸ்ரீ.எனக்கு ஆரோக்கியமான உணவு வகைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.கட்டாயம் செய்து பார்த்துவிட்டு சொல்றேன்பா.வாழ்த்துக்கள்.
கம்பு அடை
பார்க்கும் போதே அழகா இருக்கு நான் கேழ்வரகுல தா இது போல இனிப்பு கார அடை செய்வேன் இது புதுஷா இருக்கு கண்டிப்பா ட்ரை பண்ணிபாக்கறேன் வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
சுஸ்ரீ
சுஸ்ரீ சத்தான கம்பு அடை. முழு கம்பு அரைச்சு இதுப்போல் செய்யலாமா.
சுஸ்ரீ
சுஸ்ரீ சத்தான கம்பு அடை ரொம்ப நல்லாருக்கு,நாங்களும் இப்படித்தான் பன்னுவோம்,இதேபோல கேழ்வரகிலும் செய்யலாம்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அனைவருக்கும் நன்றி!
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி!
நசீம்,
முதல் ஆளா வந்து கொடுத்த உங்க வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி!
வனி,
நன்றி வனி! உங்களுக்கு பிடிச்சிருந்ததா?! ரொம்ப சந்தோஷம்! செய்வது ரொம்ப சுலபம்தான், சீக்கிரமா செய்துட்டும் சொல்லுங்க எப்படி இருந்ததென்று! :)
ப்ரியா ஜெயராம்,
ரொம்ப நன்றி!. நான் கடையில்தான் வாங்கினேன். கம்பை பொடி செய்த ரெடிமேட் மாவுதான் இது. நீங்க வீட்டில கம்பு இருந்தாலும் மாவு தயார் செய்து இதுபோல செய்து கொள்ளலாம்.
பூங்காற்று,
கம்பு என்பது, Pearl Millet என்று ஆங்கிலத்தில் சொல்வாங்க. (ராகி)கேழ்வரகைவிட கொஞ்சம் பெரிதா இருக்கும். கலர் ஒருவித பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையாதா இருக்கும். கூகிளில் போட்டு பாருங்களேன், உங்களுக்கே தெரிந்துவிடும்! அப்புறம், ரொம்ப லேட்டா பதில் தரதுக்கு சாரி... இப்பதான் வந்தேன் பதிவுகள்போட... :)
அன்புடன்
சுஸ்ரீ
மிக்க நன்றி!
ஹர்ஷா,
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! ஆமாங்க, நீங்க சொல்வது சரிதான். இது என் பெண்ணுக்கு ரொம்ப பிடித்தமான ஐய்ட்டம்! எனக்கும்தான்! :) நல்ல சத்தானது என்பதால், அடிக்கடி செய்துக்கொடுக்கலாம். விருப்பப்பட்டியலில் சேர்த்திட்டிங்களா?! ரொம்ப சந்தோஷம்! செய்திட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னும்! :) மீண்டும் நன்றி!
சுந்தரி,
உங்க பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! செய்வது ரொம்ப சுலபம்தான். செய்துபார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு.
ரேணு,
உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி! ஆமா, நீங்க சொல்வது மாதிரி நானும் ராகி மாவில செய்வதுண்டு. பாட்டி வீட்டில், கம்புமாவில் எப்பவும் கார அடை செய்வாங்க. நான் இனிப்பில் செய்தேன். கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க. நன்றி!
வினோஜா,
நன்றி! நான் செய்தது கடையில் வாங்கிய ரெடிமேட் மாவிலதான். நீங்க முழு கம்பை மெஷினில் கொடுத்து அரைத்த மாவில் இருந்தும் செய்யலாம்.
சுவர்ணா,
அப்படியா, நீங்களும் இதுப்போலதான் செய்வீங்களா?! சந்தோஷம். வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ