நான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்

பல இடத்தில நான்ஸ்டாப்பா மழை பெய்யற போல பல ஊர்ல இருக்குற நம்ம அரட்டையும் நான்ஸ்டாப்பா போகட்டும் மழை நின்னாலும் நிக்கும் ஆனா நம்ம அரட்டை நிக்கவே நிக்காது அப்டி தான தோழீஸ்

என் பையனுக்கு அவளைப் பிடிச்சுது...அவன் என்ன சொன்னான் தெரியுமா? உன்னைப் போலவேதான்ம்மா அவளோட குணங்களும்னான்...அருமையான பொண்ணு...அவ்வளவு மரியாதை...இந்தியா வந்தா எங்களைப்போலவேதான் நடந்துப்பா...என் பிள்ளையையும் மிக நன்றாகப் பார்த்துப்பா...அவள் டெலிவரிக்கு ஜெர்மனி போயிட்டு போன மாதம்தான் வந்தேன்..

பையன் இல்ல வினோ பொண்ணு. அக்டோபர் 22 பிறந்தநாள். ஆனா தமிழ் மாத பிறந்தநாள்தா எனக்கு பிடிக்கும். வரும் செவ்வாய் கிழமை முதல் பிறந்தநாள் வருது. எல்லாம் செய்யனும்னு ஆசை. ஆனா நடக்குமானு தெரியல :-( பார்க்கலாம்.

KEEP SMILING ALWAYS :-)

கேக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு....ஹ்ம்ம்....காலம்தான் பதில் சொல்லணும்....புகுந்த வீடும் மதுரைதானா?

அவங்களுக்குதா பொண்ணு பிறந்திருக்காளா :-)

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு பிள்ளையார்பட்டி பக்கத்துல. புகுந்தவீடு மதுரை.

KEEP SMILING ALWAYS :-)

உங்களுக்கு இளையாற்றங்குடி தெரியுமா? பெரியவா ஆராதனை நடக்குமே அந்த ஊருக்கு பக்கத்துல.

KEEP SMILING ALWAYS :-)

ஆமாம்...இரண்டாவது பொண்ணு....ஹ்ம்ம்....தெரியும்....ஆராதனை பற்றி கேள்விப் பட்டிருக்கேன்....மற்ற தோழிகள்ளாம் சைலன்ட் ரீடிங்க்ல இருக்கா போலருக்கு சரி தோழிகளே....எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம்...பை

நாகா ராம் நிச்சயம் எல்லாம் நல்லப்படியா நடக்கும் நீங்க எதுவும் கவலைப்படாதீங்க நீங்கள் செய்வதை சரியா செய்துட்டே இருங்கப்பா.

ராதாம்மா இருக்கேன் இங்க தான். உண்மையாவே நீங்க ரொம்ப நல்ல அம்மானு தான் நான் சொல்வேன் பிள்ளைகளின் எண்ணத்தை புரிஞ்சுட்டு நடந்துருக்கீங்களே.

ரேணு எங்க போய்ட்டீங்க தூங்கிட்டீங்களா?

இந்த மழைல தூக்கமே வராது பா இடி நம்ம மேல விழறா போல அவ்வளவு சவுண்டா இருக்குபா பயமா இருக்கு அத கேட்க கேட்க முடில
ராதாம்மா நீங்க ஏன் அப்டி சொன்னீங்க நா பாவம்னு புரியல எனக்கு நாகா நீங்க நெனச்சமாறியே எல்லாமே நல்ல விதமா நடக்கும் பா கவலைய விடுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்களுக்கு பெண் குழந்தையா பையன் நினைத்துட்டேன் நாகா தையரிமா கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

மேலும் சில பதிவுகள்