வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

அது எங்க ஊர்ல எல்லாரும் கட்டுவாங்கப்பா. அதுபார்டர் சாரின்னு சொல்லுவாங்க என் ப்ரண்ட்ஸ். எங்க ஊர்ல கம்பி புடவை, விலை 1500, 1000 எல்லாம் இருக்கும். குறைஞ்சது 800 ரூபாயிலேந்து இருக்கும். வெளிநாட்டிலேந்து கொன்டு வருவாங்கபா. அதான் எங்க ஊர்ல பேமஸ்.

இருகீங்களா பா கம்பி புடவை காட்டனா பா பட்டு புடவை மாதிரியே காட்டன்ல இருக்குமா டிசைனிங் இருக்குமா பிளைனா இருக்குமா பா சொல்லுங்க ப்ளீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ரேணு வேலையா போயிட்டேன். அதான் கவனிக்கல. கம்பி புடவைனா பூனம்சாரின்னு சொல்லுவாங்கள்ள அதுல கோல்டு கலர்ல ஜரிகை வச்சு இருக்கும்.ஜரிகை பார்டர்ல இருக்கும். பார்க்க பளபளன்னு சைனிங்கா இருக்கும். துணி சாப்டா இருக்கும். கட்டினா அவ்ளோ நல்லா இருக்கும். எங்க ஊர்ல எல்லாரும் அத தான் கட்டுவாங்க. எல்லா பங்ஷனுக்கும் ஏத்ததா இருக்கும்.

வாங்க எல்லாரும் , என்ன பண்றீக, வேலையா பா,

அரட்டைல யாரும் இல்லையா இப்ப என்ன வர்த்தினி வேலையெல்லாம் முடிஞ்சதா காலைல சீக்கிரமா வந்து பதிவிட்டிருக்கீங்க ம்ம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா எல்லாம் பிஸியா? ரேணு சாப்டாச்சா? ஹஸ் ஆபிஸ் போய்ட்டாங்களா? நாகா பர்த்டே எப்படி போச்சு?

இப்படிக்கு ராணிநிக்சன்

ம்... நல்லபடியா நடந்துது. ஆனா ஒழுங்கா கவனமா எதுவும் செய்யமுடியல... மாமியார்க்கு உடம்பு சரி இல்ல. ஹார்ட்ல ப்ளாக் இருக்குனு சொன்னாங்க.. அவர் ரொம்ப டல்லா இருந்தார்.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய்....ரேணு, ராணி, வர்தினி, நாகா...எல்லாரும் எப்பிடி இருக்கீங்க?
நாகா....ஆண்டு நிறைவு நல்லபடி ஆச்சா? மாமியார் எங்க இருக்காங்க? சென்னையா...மதுரைலயா?
ரேணு...இப்போ உடம்பு எப்படி இருக்கு? வயற்று வலி தேவலயா?
வர்தினி...சாப்பாடு ஆச்சா? என்ன சமையல்?
ராணி..நலமா?

எனக்கு வேலை முடிந்தது ரேணு , ராணி எங்க வாங்க , நாகா உங்க பாப்பா பிறந்த நாள் எப்படி போச்சு ? நசீம் எங்க வாங்க , மீனு என்ன ரொம்ப வேலையா, ஆண்டி நீங்க நல்லா இருக்கீங்களா ? சாப்பாடு முடிந்தது , நீங்க என்ன சமையல் ,

நாகா அத்தைய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனிங்களா? என்னப்பா சொன்னாங்க? அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னா அப்படித்தான் இருப்பாங்க அவங்கள நீங்க நல்லா பாத்துக்கோங்க அப்போ அவங்களுக்கு உங்க மேல அன்பு வரும்பா

ராதாம்மா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? உங்க வீட்டு குட்டிங்க எப்படி இருக்காங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்