பள்ளிக்கூட குழந்தைகளின் காலைஉணவு.

அன்பு நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் பற்றி மற்றொரு தலைப்பாக அவர்களின் காலை உணவைப்பற்றி அதைக் கொடுக்க எப்படியெல்லாம் அவர்களை சமாளிப்பதுப் பற்றியும் உரையாடலாம் வாங்க. குழந்தைகளுக்கு காலை உணவு மிகவும் முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அதைச் சரியாக செயல்படுத்த முடியாமல் தாய்மார்கள் தவிப்பதை காணமுடிகின்றது. அதற்கு நேரமும் பொருமையும் இருப்பதில்லை என்றாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.அந்த காலத்தில் பள்ளிக்கூடங்கள் காலை ஒன்பதிலிருந்து பத்து மணிக்கு தான் திறக்கும் ஆகையால் பள்ளிமாணவ மாணவிகள் முதல் வேலைக்கு போகும் தாய்மார்கள் வரை நிதானமாக எழுந்து குளித்து காலையுணவை சாப்பிட்டுவிட்டு விவிதபாரதியில் நீங்கள்கேட்டவை எல்லாம் கேட்டு முடிந்த பிறகு நிதானமாகப் போனால் போதும்.

ஆனால் எனது குழந்தைகளின் காலத்திலிருந்தே அந்த நேரம் மாறிவிட்டிருந்ததென்னவோ உண்மை. என்னிலிருந்து இன்றைய இளந் தாய்மார்கள் வரையில் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவதும்,உணவை சாப்பிடவைப்பதும் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை என்று தான் கூறூவேன். ஆனாலும் ஒவ்வொறு நாளும் அவ்வாறு குழந்தைகளுக்கு செய்யும் எந்த விசயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் கிடைக்கும் என்பது உண்மை என்றாலும் அதை சரிவர செய்யமுடியாமல் தான் போகின்றது. இதில் யார்மேலும் குற்றம் கூறமுடியாது இன்றைய அவசர வாழ்க்கையின் சூழல் அவ்வாறு அமைந்துவிட்டது தான் காரணம். ஆனாலும் குறைந்தப் பட்சம் நம்மால் முடிந்தவரை வாழ்க்கை முறையைத் திட்டமிட்டு செம்மைப்படுத்திக் கொள்வதின் மூலம், சூழ்நிலைக்கேற்ப்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு குறைந்தப் பட்சம் பத்துவயது வரையிலாவது தாய்மார்கள் காலையுணவை கூடயிருந்து கொடுக்கவேண்டும் அல்லது ஊட்டிவிட வேண்டும் மற்றநேர உணவுகளுக்கு அவ்வளவு கவனம் தேவையில்லை மேற்ப்பார்வை பார்த்தால் போதுமானது.காலையில் குழந்தை எழுந்தவுடன் முதலில் பல்தேய்க்க வைத்து விட்டு சாப்பிட பழக்கிவிடுவது நல்லது. முதலில் பால் பிறகு திட உணவு என்றெல்லாம் வேண்டாம்.அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லையே.

1.பாலுடன் சேர்ந்த திட உணவாக அவர்கள் விரும்பும் கார்ன்ஃபிளேக் கொடுத்துவிடுங்கள்.கூடவே ஒரு சிறிய பழத்துண்டு போதும்.
2.நமது பாரம்பரிய உணவான மோர் சாதம் மிகவும் நல்லது.இதனுடன்வேறு எதும் வேண்டாம்.
3.இட்லி தோசை போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து சூடு படுத்தி கொடுங்கள்.
4. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகளை கொண்டு ஸ்டஃப் செய்த்த பரோட்டாகளின் துண்டுகளை பழஜூசுடன் கொடுக்கலாம்.
5. பால் சேர்த்த ராகிகஞ்சி ஒரு கப் கொடுத்தால் போதுமானது.
6.சப்பாத்தியில் ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் கூட போதும்.
7.முட்டையை ஆம்லட்டாக ஊற்றி அதன் மீது குடமிளகாயை பொடியாக நறுக்கி தூவி சிறிது சீஸைப் போட்டு மடித்து கொடுக்கலாம்.
8.ஃபிரன்ச் டோஸ்ட்டின் மூலம் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான காலையுணவைக் கொடுக்கலாம்.
9. வேகவைத்த முட்டையுடன் ஒரு கப் பால் அல்லது ஜூஸ் போதுமானது.
10. ஒரு நாளைக்கு பேன் கேக்ஸ்ஸை முன்கூட்டியே செய்து வைத்திருந்து காலையில் கொடுக்கலாம்.
11. இரண்டு துண்டு பெனானா பிரட்டுடன் ஒரு சிறிய கோப்பை ஃபுரூட் ஜெல்லி போதுமானதாக இருக்கும்.
12.ஒரு நாளைக்கு பீனட் பட்டர் சான்வீச் செய்து குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
13. ஒரு நாளைக்கு சீஸ் சான்வீச் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
14.பழங்களுடன் கேரட் போன்ற காய்களில் செய்த ம்ஃப்பினும் பாலும் சேர்த்து தரலாம்.
15. இடியாப்பம்,வேகவைத்த நூடுல்ஸ் அல்லது பாஸ்தா கையிருப்பு இருந்தால் அதனுடன் சிறிது சர்க்கரை, வறுத்து பொடித்த வேர்கடலைத்தூள்,சிறிது உருக்கிய வெண்ணெய் ஒரு சிட்டிகை ஏலப்பொடி தூவி நன்கு கலக்கி கொடுத்தால் குழந்தைகள் அதை நொடியில் காலிசெய்து விடுவார்கள்.

இவ்வாறு தினமும் அவர்களுக்கு, உணவில் வெறுப்பு உண்டாகாத வகையில் உங்க கற்பனைக்கேற்றவாறு மாற்றி மாற்றி ஏதாவது ஒரு காலைஉணவை தினப்படிசாப்பிட வைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்க்கும், மனவலிமைக்கும் மிகவும் நல்லது.இதனால் குழந்தை நாள்முழுக்க வகுப்பில் பாடங்களை கவனமுடன் பயிலயும், மற்றவர்களுடன் நிதானமாக பழகவும் வழிவகுக்கும்.

இதைச் செயல்படுத்த காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் தாய்மார்கள் குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்திரிக்க பழகிவிடுவது நல்லது. இதனால் முக்கால்வாசி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம், ஒரு மணி நேரம் உங்களுக்காகவும், மீதியிருக்கும் நேரத்தில் குழந்தையை நிதானமாக பள்ளிக்கூடத்திற்க்கோ அல்லது டேக்கேருக்கோ அவர்களை தயார் செய்ய முடியும்.முக்கியமாக தாய்மார்கள் காலையில் சமைப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் இதனால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம். காலையில் தேவையான உணவை இரவிலேயே தயார் செய்து வைத்துவிடுவது நல்லது.

தினமும் இரவில் சாப்பிடுவதற்க்கு முன்பு சுடுதண்ணீரில் குளிக்கவைத்த பிறகு சாப்பிடவைத்து, அதன் பிறகு உறங்க வைத்தால் காலையில் நல்ல பசிஎடுக்கும். குறைந்தது பத்துமணி நேரம் உறங்கும்படி பழக்கப்படுத்த வேண்டும், அப்போதே அடுத்த நாளைக்கான காலையுணவைப் பற்றி அவர்களிடம் கூறி சம்மதம் வாங்கிவிடால் பிறகு அதே நினைவில் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு பசியும் தானாக எடுக்கும், அதே நேரத்தில் நல்ல உறக்கம் இருந்ததால் அம்மாவிற்க்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஆகவே உங்க குழந்தைகள் பிள்ளிக்கூடம் செல்வதற்க்கு சிறிது கால இடைவெளியிலிருந்தே இந்த பழக்கத்தை சிறிது சிறிதாக பழக்கிவிடுவது நல்லது. பள்ளி விடுமுறை என்றால்கூட காலையில் சிறிது நேரம்கழித்து எழுந்திரிக்க விடலாமே ஒழிய அந்த காலைநேர ஒழுங்கு முறையை தவறாமல் கடைப்பிடிக்க வைப்பது நல்லது. குளித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு தான் டீவி, ஆட்டம் பாட்டம்மெல்லாம்.

என்னைக் கேட்டல் வேலைக்கு போகும் தாய்மார்களை விட வீட்டிலிருப்பவர்களுக்கு தான் இந்த நேரப்பிரச்சனை அதிகமாயிருக்கும் ஆனாலும் அவர்களும் அவர்களின் அலுவல்களுக்கு ஏற்றமாதிரி காலைநேரத்தில் கவனம் செலுத்தி குழந்தைகளை வளர்ப்பது தொட்டில் பழக்கம் கடைசீ மட்டும் என்பதைப் போல் ஒரு தாய் மனதுவைத்தால் அவள் தன் குழந்தைக்காக எந்த சூழ்நிலையையும் அவர்களுக்கேற்றவாறு எப்படிவேண்டுமானாலும் மாற்றிவிட முடியும் என்பதால் இந்த ஒரு சிறிய ஆலோசனையை கூறினேன், உங்க கருத்துக்களையும் கூறலாம். நன்றி.

hi friends,
is anybody know any playschool or learning centerin norwood area.my son is almost 3 years,now v r in malden,boston.v r moving to norwood gardens apt. so plez let me know good play school.

ஹலோ மாலதி எங்க போயிட்டீங்க? ரொம்ப நாளாச்சி உங்கள பார்த்து?விட்ல எல்லோரும் செளக்கியமா? முன்பு என்னிடம் என் வீட்டு பாத்திரங்கள் எப்படி இவ்வளவு பளபளப்பாக உள்ளது என்று கேட்டிருந்தீர்கள், இந்த லொள்ளு தானே வேண்டாங்கிறது. ஒகோ அப்படியில்லையா!!!!நிஜம்மாத்தான் கேட்டீங்களா அப்படீன்னா எங்க ஊரில் சில்வர் பாத்திரங்கள் அப்படித்தான் இருக்கும் உங்க ஊரில்? இப்படி ஜோக்கடிக்கவாவது தினமும் வந்து ஏதாவது எனக்கு பதிவைப் போடுங்க. நீங்க சொல்லுவதுப் போல் குழந்தைகளின் நினைவுகளும் அனுபவங்களும் எத்தனை வருடம் ஆனாலும் நமக்கு அவைகள் பசுமரத்து ஆணி போல் தானே,. எனக்கும் என் குழந்தைகளின் சிறு வயது நினைவுகள் எல்லாமே ஏதோ ஒரு நீண்ட திரைப் படம் போல் அப்படியெ மனதில் பதிந்துவிட்டது. உங்க பிரேஃபாஸ்ட் மெனு மிகவும் நன்றாக உள்ளது. இன்னும் கூட எழுதுங்க, குழந்தைகள் அதனால் பலன் பெறட்டும். அடிக்கடி வாங்க சந்திக்கலாம் நன்றி.

ஹலோ அஸியா ஒமர் எப்படி இருக்கீங்க? குழந்தைகள் நலமா? குழந்தைகளின் பெயர்கள் என்ன? இந்த பிரேஃபாஸ்ட் அயிட்டங்கள் சிறிய குழந்தைகட்க்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே தேவைபடும் குறிப்புகளாக தான் இருக்கும், ஆகவே உங்க குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொடுங்கள். ஆமா அது என்ன ரைட்டிங் டாலென்ட் ஏதோ நீங்க சொன்ன சரி. மேலும் வேறொரு இடத்தில் குழந்தைகளின் சேட்டையைப் பற்றி எழுதியிருந்தீர்கள் அதற்க்கு நிச்சயம் எனக்கு தெரிந்த குறிப்புகளை எழுதுகின்றேன் கூடியவிரைவில் எதிர்பார்க்கவும். நன்றி.

ஹல்லோ ரம்பா டியர் எப்படி இருக்கீங்க? குழந்தை எப்படி உள்ளது.பெயர் என்ன வைத்திடுக்கின்றீர்கள்?தனியா எப்படி சமாளிக்கின்றீர்கள்.எனக்கும் உங்க பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆமாம் நீங்க சொல்வதுப் போல் மன்றத்தில் திடீரென்று மூட் வந்துவிட்டது, மேலும் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த விசயங்களைத் மறப்பதற்கு முன்னால் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றேன்,நீங்களும் ஏதாவது என்னிடத்தில் கேட்ட்கனும் என்றால் கேளுங்கள் ஆனால் அடிக்க கூடாது சரியா. நன்றி டியர் மீண்டும் சந்திப்போம்.

ஹலோ சர்மி எப்படி இருக்கீங்க? குழந்தை கர்ன்பிளேக்ஸ் சாப்பிடுவதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது. இது தான் சாக்கென்று அதிலுள்ள பல வெரைட்டிகளை மாற்றி மாற்றி வாங்கி வந்து பழக்கப் படுத்துங்கள், பாக்கெட்டுகளை மிகவும் குறைந்த அளவிலுள்ளதாக வாங்குங்கள், இதனால் கூட பல வெரைட்டிகளை உடனுக்குடன் அறிமுகப்படுத்த வசதியாக இருக்கும். மேற்கானும் மெனுக்களையும் பழக்கப் படுத்துங்கள், ஒரே மாதிரி கொடுக்கும் போது போக போக ஆவர்களுக்கு அதைச்சாப்பிடுவதில் இருக்கும் ஆர்வம் குறையும் என்று நினைக்கின்றேன். ஆகவே பல வெரைட்டிகளை இப்போதிலிருந்தே அறிமுகப்படுத்துவது நல்லது, நன்றி.

this is jayasri
from norwood and from windsor garddens
here some play schools r here
but i dont know exacltly

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

thanks for your immediate reply,all cannot write what they think,but you are doing ,simply great.i wish you all the best in every step of your life.my son shakeel going to 10 th,daugter rumaana going to 7th.both are in abudhabi indian school.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hi jayasri,

thanks for ur reply.how much is the rent in windsor gardens for 2 bedroom,is that nearby to the rly station.
could u plez tell me the play school name.thanks

அன்புள்ள மனோஹரி மேடம்
காலை உணவை சாப்பிட வைக்க எனது 15வயது பெரிய மகனை விட எனது 8வயது மகன் தான் எனக்கும் பிரச்சனை.
காலை உணவில் மிகவும் இலகுவாண ஆரோக்கியமான டிப்ஸ் கொடுத்தமைக்கு எனது அன்பான நன்றி.

அன்புடன் பர்வீன்.

மனோகரி!.... கொஞ்சம் பிஸியாக இருந்துவிட்டேன். இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். ஜோக் இல்லை மனோகரி உங்கள் வீட்டு பாத்திரங்கள் ரொம்ப பள பளப்பாகத்தான் இருக்கிறது. நீங்கள்தான் தேய்க்கிறீர்களா? அங்கெல்லாம் வீட்டுவேலைக்கு ஆள் கிடைக்காதுதானே. நீங்களும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகைதானே. அவருடைய மறைவு இரண்டு நாள் கொஞ்சம் டிஸ்டர்ப்டாக இருந்தது. நானும் அருசுவையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலியில் எழுதியிருந்தேனே படித்தீர்களா? உங்களுடைய பேன்கேக் செய்முறை நன்றாக இருந்தது. என் பேரன் வரும்போது செய்யவேன்டும். அடுத்து லஞ்ச்பாக்ஸ் என்ற தலைப்பில் எழுதலாம் என்று இருக்கிறேன். நீங்களும் எழுதுங்க. நீங்க எப்ப இந்தியாவுக்கு விசிட்? உங்களைப்பற்றி நான் என் மகளிடம் அடிக்கடி சொல்வேன். உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்ன பண்ணிகொண்டு இருக்கிறார்கள் மனோகரி. பேன்கேக் செய்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன்.

மனோகரி அக்கா முதலில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். விஷயம் என்னவென்றால் உங்கள் ஆலோசனையை படித்த பின் என் பெண்ணை கடைக்கு கூட்டிச் சென்று அவளுக்கு வேண்டிய சீரியலை அவள் கையாலே வாங்க வைத்து நேற்று காலை அதை சமர்த்தாக சாப்பிட்டாள்.மீண்டும் நேற்று இரவு நிறைய பான் கேக் கதைகளை சொல்லி இன்று காலை அதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டாள். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

மேலும் ரீஸன்டாகத்தான் ஒரு ஆர்ட்டிக்களில் படித்தேன். காலை உணவு சாப்பிடுபவர்களை விட அதை சாப்பிடாதவர்களுக்கு உடல் உபாதைகளும், உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாம். மேலும் குழந்தைகளால் பள்ளியில் சரியாக கவனம் செலுத்த முடியாதாம். அதை படித்ததிலிருந்து ஒரே கவலையாக இருந்தது. தக்க சமயத்தில் நீங்கள் இந்த பதிவை எழுதியதால் உங்கள் ஆலோசனைகளை செயல் படுத்த முடிந்தது. இப்படியே ஒவ்வொரு சாப்பாட்டையும் அவளை நைஸாக சாப்பிட வைக்க வேண்டும். எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். உங்களின் கனிவான அழைப்பிற்கு நன்றி கேட்பதற்கே சந்தோஷமாக உள்ளது.

டியர் பர்வீன் காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், ஆமா உங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? சொல்லவேயில்ல. நல்லா திட்டமிட்டு தான் இரண்டு குழந்தைகளுக்கும் இடைவெளி விட்டு பெற்றிருக்கின்றீர்கள். இளையவருக்கு எட்டு வயது தானே கவலைப்படாதீங்க போக போக அண்ணனைப் பார்த்து அவராகவே தானாக சாப்பிட கற்றுக்கொள்வார், சில வீடுகளில் மூத்தவர்களுடன் தான் அம்மாவிற்க்கும் புள்ளைக்கும் இந்த விசயத்தில் மல்லிகட்டு நடக்கின்றது. நீங்க கூறியிருப்பதுப் போல் இலகுவான இது மாதிரியான காலை உணவுகளையே பிள்ளைக்கு கொடுத்து சாப்பிட வைக்கமுயற்ச்சி செய்யுங்க சரியா நன்றி .

மேலும் சில பதிவுகள்