yaravathu uthavungalaen

வணக்கம்
எனது பெயர் மதி. நான் மன்றத்தில் புதிதாக சேர்நதுளேன். தற்பொழுது சிங்கப்பூர் புகிட் மேராத் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னது குழந்தைக்கு nappy கட்டுவதால் rash வந்துள்ளது. அதை போக்க வழி தெரிந்தால் சொல்லுங்களேன். மற்றும் குழந்தை மருத்துவர் முகவரியும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

அன்புள்ள கே ஆர் உங்களுக்கு எப்படி தெரியும் நான் சலாவாத்து நாரியா ஓதுவது என் மூச்சே அது தான்
ஜலீலா

Jaleelakamal

அம்மாவின் ஹஜ்ஜை, அல்லா ஏற்றுக்கொள்வான்,இன்ஷாஅல்லா.ஷிஃபாவும் தருவான்.கவலை தான் எதிரி.அதற்கு பதிலா அவனிடமே துஆ கேட்போம்.

சலவாத்துக்களில் நெருப்பு போன்றது சலாவாத்து நாரியா, பிறகு ஏன் அக்கா கவலை.அல்லா விரும்பியவர்களை சோதித்து பார்ப்பான்,ஆகவே புலம்பாமல் பொறுமையாக இருப்பவருக்கு வெற்றி நிச்சயம்.

எப்படி இருக்கீங்க இப்ப குழந்தைக்கு பரவாயில்லைன்னதும் சந்தோஷமாக இருக்கு. உண்மையில் யார் குழந்தையாக இருந்தால் என்ன குழந்தைக்கு என்று ஏதாவது வந்துவிட்டால் ஒரு தாயாக இருப்பவள் அந்த குழந்தையை தனது குழந்தை போல நினைத்து அந்த குழந்தைக்கு தன்னால ஏதாவது முடியுமா என்று தான் பதில் சொல்கிறோம். கண்டிப்பா நீங்க எங்கள் எல்லார் கூடயும் பேசலாம். உங்களுக்கு எப்ப பேச நேரம் இருக்கோ அப்ப இங்க மன்றத்துல வந்து யாரிடம் பேசனுமோ அவங்கள் பெயரை குறிப்பிட்டு பதிவு போடுங்கள் அவர்கள் ஆன்லைனில் இருந்தால் உங்களுக்கு உடனே பதில் போடுவோம் இல்லை என்றால் பிறகு படித்து பார்த்து விட்டு கண்டிப்பாக உங்களுக்கு பதில் போடுவோம்.

அன்புடன் கதீஜா.

டியர் கே ஆர்
எங்க அம்மாவும் இதை பெரிய அளவில் மாதம் மாதம் ஓதுகிறார்கள்.
நான் எனக்குள் ஓதிக்கொள்கிறேன்.
ரொம்ப நன்றி உங்கள் தூவாக்களுக்கு.

அல்லா உங்களுக்கும் எல்ல விதத்திலும் நல் கிருபை புரிவானகவும்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, யார் இல்லாவிட்டாலும் நீங்களும் தளிகாவும் நிட்சயம் அறுசுவையில் எப்பவுமே பதில் தந்துகொண்டே இருப்பீங்க இப்ப காணவில்லையே என யோசித்தேன். இப்ப எப்படி இருக்கிறது உடல்நிலை. கொம்பியூட்டர் மனம் பொறுக்காமல் பாவித்தால் நோய் கூடிவிடும் இது எனது அனுபவம். சோ நல்லா றெஸ்ட் எடுங்க. சீக்கிரம் குணமாகி அறுசுவையில் கலக்குங்க.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மதிமணி, இன்னுமொன்று நினைவிற்கு வந்தது எழுதுகிறேன். 2 அல்லது 2 1/2 மணித்தியாலங்களுக்கு மேல் nappy மாற்றாமல் விடக்கூடாது. ஈரமாகவிட்டாலும் பறவாயில்லை, கழுவி மாற்றிவிடுங்கள். அதிலும் கக்கா கொஞ்சமாயினும் போனால் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவேண்டாம் உடனேயே மாற்றவேண்டும். அடிக்கடி check பண்ணிக்கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பென்பது சும்மாவா? அதுவும் ஒரு மிக மிக இனிமையான அனுபவம்தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன அதிரா எப்போ வந்தீங்க நான் நீங்க வந்தத கவனீக்கல. நல்லா இருக்கீங்களா? உங்க பையன் எப்படி இருக்கான்? ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த அறுசுவை பக்கம் வரலனா எதயோ இழந்த மாதிரி ஒரு பீலிங். நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாம் காணும். ஹாய் ப்ரண்ட்ஸ்.

நான் இப்ப தான் பார்த்தேன். எல்லாம் வல்ல இறைவனிடம் நான் உங்களுக்காக வேண்டுகிறேன்.
கவலைபடாமல் இருங்க.

நூர் வா அலைக்கும் அஸ்ஸலாம்

சில பேர் என்னை குழப்பிவிட்டார்கள்
ஓதகூடாது ஷிர்கு என்று
இடையில் நிருத்தி விட்டேன்
பிறகு மறுபடியும் ஓதுகிறேன்
20 பது வருடமாக ஓதுகிறேன்
அது நிய்யத் வைத்து என்றால்
4444 ஓதனும்
இல்லை ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஆயர்த்தில் குர்ஸியும் சலாவாத்து நாரியாவும்.ஐந்து முறை ஓதுவேன்.
மற்ரபடி சும்ம இருக்கும் போதெல்லாம் ஓதுவேன்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்