கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ஹாய் ஹாய் ஹாய்... மாலை நேரம் அரட்டை பக்கம் வந்த காரணம் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... ;)

நான் நாளை மாலத்தீவு கிளம்பறேன். :) இன்னும் 1 வாரத்துக்கு என் தொந்தரவு இருக்காது. நல்லா அரட்டை அடிங்க எல்லாரும். 1 வாரம் போனதும் கொஞ்சம் வீட்டில் செட்டில் ஆயிடும், அதன் பின் ஓரளவு நேரம் கிடைக்கும் போது வரேன். :) என்னை யாரும் மறக்க கூடாதுன்னு ரூல்ஸ் போடுறேன்... மறந்தா பென்ச் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன இப்டி சொல்லிட்டீங்க உங்கள மறக்கமுடியுமா ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வாங்க உங்களுக்காக காத்திருக்கிறோம் hav a nice journey

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு உடம்பு எப்படி இருக்கு? சூப்பர் தலைப்பு ,

உடம்பு தா என்ன என்னனு கேக்குதுபா நடந்தா கை கால் உதறற மாறி இருக்கும் உட்கார்ந்தாலும் தலை சுத்துது கை கால் வலி தாங்கல எதையும் டைட்டா பிடிக்கமுடில என்னத்த சொல்றது துளி சவுண்ட் அதிகமா கேட்டகூட தலைவலி பயங்கரமா இருக்கு எக்ஸ்ட்ராவா வாய்புண் வேற படுத்துட்டே தா இருக்கேன் ஒன்னும் முடில

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இந்த அரசியல்வாதிகள் தொல்லை ரொம்ப அதிகமாப் போச்சி. இவங்க மேலத்தான் கொலைவெறி.

ஜெய்க்கும் வரை நம்மைக் கூழை கும்பிடு போட்டு ஜெய்ப்பாங்க.

ஜெயச்சதும் நாங்கதான் இந்த நாட்டைக் காக்கும் மக்கள் பிரதிநிதி, சட்டசபை, மேலவை இவற்றை விட வேற எதுவும் பெருசில்லைன்னு பவர் காட்டுவாங்க.

எல்லாத்தையும் குப்பை மாதிரி தூக்கிப் போடணும், அப்பத்தான் நாடு உருப்புடும்.

கல்யாணம் பண்ணினதும் உடனே குழந்தை வேண்டாம் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு அப்பறம் குழந்தையைபத்தி யோசிக்கலாம்னு சொல்ற காட்டுமிராண்டிகளை பிடிக்கவே பிடிக்காது... கொலவெறிதான் வரும்...

குழந்தைகள் கடவுளோட ரெப்ரசன்டேட்டிவ் மாதிரிதானே அவங்க இருந்தா ஜாலியா இருக்க முடியாது இம்சைனு நினைக்கிற ராட்சச கும்பலுக்கு விமோசனமே கிடைக்காது..

இங்க எத்தனையோ பேர் குழந்தை வேணும்னு கேக்கறத தினமும் பார்க்கிறோம். ஆனா இங்கயும் ஒரு உறுப்பினர் ஜாலியா இருக்க முடியாது நாள்கழிச்சு பெத்துகறதுதா சரினு சொன்னாங்க. அது அறுசுவைக்கு திருஷ்டி பூசணிக்காய்னு நெனச்சு மனச தேத்திக்க வேண்டியதுதா :-/

KEEP SMILING ALWAYS :-)

நீங்க சொல்றதும் சரிதா பா கல்யாணம் ஆனதும் குழந்தை பெத்துக்கறது தா கரெக்ட் தள்ளிபோட்டுட்டு அதுக்காக ஏங்க கூடாது அது ரொம்ப கஷ்டம்பா குழந்தையில்லையேன்ற ஏக்கம் எங்களமாதிரி ஆனவங்களுக்கு தா தெரியும் ஆண்டவன் எப்ப கண்திறப்பானோனு காத்திட்டிருக்கோம் அந்த நிலைமை யாருக்கும் வரகூடாது அப்டி நினைச்சி வாழறவங்கள பார்க்கும் போது சிரிப்பு தா வரும் பா கொடுமையான உலகம் அதை தா பெரிய சந்தோசம்னு நினைக்கிறாங்க உண்மைல நமக்குனு ஒரு குழந்தை இருக்கறதுதா சந்தோசம்னு எப்ப தெரிஞ்சக்கப்போறாங்களோனு நெனக்கதோணுது கொலவெறியோட

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அதைவிட பெத்த குழந்தையை வளர்க்க தெரியாம வளர்க்கறவங்கள பாத்த ரொம்ப கொலைவெறி தா இப்பவே ரௌடியாகிடுவாங்க போல அவங்க பேச்சும் நடவடிக்கையும் அப்டி இருக்கும் இப்டி சரியான முறையில வளர்க்க தெரியாதவங்கள பாத்தா கொலவெறி தா அந்த குழந்தையோட எதிர்காலமே வீணாக்கிறவங்க எப்பதா திருந்தப்போறாங்களோ

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்கயாவது வெளில போன அங்க குழந்தையை வெச்சிட்டு பிச்சை எடுக்கறவங்கள பார்த்தாலே கொலைவெறி தா பாவம் அந்த பிஞ்சு அதுக்கு இப்பவே ட்ரெயினிங் குடுக்கறாங்க அது வாழ்க்கை என்னாகுமோ நாம தா கவலை படுறோம் அவங்க சட்டை பண்ணமாதிரி தெரில தன் குழந்தை நல்லாயிருக்கனும் நெனைக்காத சுயநலவாதிகள என்ன பண்ணாலும் தகும் அது போல பீச்லயும் நிம்மதியா கொஞ்ச நேரம்கூட உட்கார்ந்து பேச முடியாது அதுக்குள்ள ஜோசியம் பாக்கறேன்னு வந்துடுவாங்க எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டாங்க அவங்கள பாத்தாலும் கொலைவெறி தா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் உங்க டிச்கஷன்ல நடுவில் வரேன்னு கோவிக்காதீங்க... உங்க கருத்தை கொஞ்சம் நான் சொல்லும் விஷத்தில் யோசிங்க...

பொதுவா கல்யாணம் அதுவும் அரேஞ்டு மேரேஜ் பண்றவங்க இருவருமே புதிதாக சந்திக்கறாங்க. அவங்களுக்கு ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாது. அந்த நேரத்தில் குழந்தை உண்டாகினால் அவங்களுக்குள் ஒரு அன்யூன்யம் இருக்காது. திருமணம் ஆன 1 மாதத்தில் ஒரு இடைவெளி வந்துடும். அந்த இடைவெளி அந்த நேரத்தில் ஆபத்தானது. உறவை கசப்பாக்கிடும். ஒருவரை ஒருவர் புரிந்திருக்காத நேரம் என்பதால் சின்ன சின்ன எதிர்பார்ப்பும் கூட ஏமாற்றத்தை கொடுக்கும், விட்டுக்கொடுக்கும் பக்குவமும் இருக்காது. பல உறவுகள் பலமில்லாமல் உடைந்து போக இது பெரிய காரணம்.

அது மட்டுமில்லை உடனடியாக உண்டாகும் பலருக்கு முதல் குழந்தை ஆரோக்கியமாகவோ அல்லது கரு நிற்பதோ இல்லை. அதன் பின் தான் உடலில் இருக்கும் பிரெச்சனைகளே தெரியும்... இதனால் பல பிரெச்சனைகள் பின் நாளில் ஏற்படும். அடுத்த குழந்தை விரும்பினாலும் பெற்றெடுக்க தாமதமாகும். ஒரு சிலருக்கு திருமணம் ஆன புஹிதில் கரு உண்டாகி 2, 3 முறை கரு சிதைவு ஏற்பட்டதை எல்லாம் கண்டிருக்கேன். காரணம் அவங்களுக்கு அவங்க உடல் வாகு, பீரியட்ஸ் என எதுவுமே திருமணத்துக்கு பின் ஏற்படும் ஹார்மோன் சேஞ்சஸ் மூலம் மாறுபடுவதை உணர நேரம் இருப்பதில்லை. அதுக்குள்ல கரு நின்னா இந்த ஹார்மோன் சேஞ்சஸ் பற்றி தெரியாம போயிடும், பலல் பிரெச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.

இது எல்லாம் எல்லாருக்கும் பொறுந்தாது... உண்மை... ஆனா ஒரு சிலர் ஊசி போட்டு 3 மாசம் கருதரிக்க கூடாதுன்னு சொன்னா கூட என்னால் காத்திருக்க முடியாதுன்னு சொல்றாங்க... இந்த அவசரம் ஏன்? குழந்தையை 1 வருடத்தில் பெற்றெடுக்கிறோமா, 7 வருடத்தில் பெற்ரெடுக்கிறோமா என்பது முக்கியமில்லை... என்னை பொறுத்தவரை பெற்ற பிள்ளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுக்காக நாம் பொறுமை காப்பதில் தப்பில்லை. ஒரு பிள்லையின் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் கணவன் மனைவிக்கு நடுவே அன்யூன்யத்தையும் வளர்க்க வேண்டும்... அது தான் அந்த குழந்தை அந்த வீட்டில் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வளர் முக்கியம்... அப்படி ஒரு சூழல் நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நமக்கு பிள்ளை வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்து பெற்றெடுக்கும் போதே கிடைக்கும்.

யோசியுங்கள். ஒருவரது சூழ்நிலை தள்ளி வைக்க காரணம் ஏதும் புரியாமல் நாம் “காட்டுமிராண்டி” என்பது தப்பில்லையா? அவங்க பிள்ளை உண்டாகி இப்போது வேண்டாம் என்று அழித்தால் நானும் தப்புன்னு சொல்வேன்... ஆனா உண்டாக வேண்டாம் இப்போதுன்னு இருப்பது தப்பா தெரியல.

தப்பா சொல்லி இருந்தா மன்னியுங்கள் தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்