சாப்பாட்டு செலவை குறைப்பது எப்படி?

ஆரோக்கியமும் கெடாமல்,பர்ஸூம் நோகாமல் சாப்பாட்டு செலவை குறைப்பது எப்படி? (வீண் விரயம் தவிர்ப்பது தவிர).விருந்தினர்கள் வரும் சமயம் எப்படி செலவை கட்டுபடுத்துவது?

பட்ஜெட்டில் 99,000 ரூபாய் எனில், அதை 1000 ரூபாயாக மாத்துவது எப்படி?

மனிதனுக்கு மிகவும் முக்கியமான மூன்றில் சாப்பாடு தான் பிரதானம் வகிக்கிறது. நீங்கள் சொன்னீங்க பாருங்க ஆரோக்கியம் கெடாமல்....அந்த பாயின்ட் மிக சரி. அது என்னங்க பர்ஸ் காலியாகாமல் விருந்தினர் வரும் சமயம் எப்படி செலவை கட்டுப் படுத்துவது என்றால்.....நீங்கள் அவர்களுக்கு போடும் விருந்தை பற்றி கேட்குறீங்களா இல்லை கவனிப்பா என்று கொஞ்சம் உங்களின் கேள்வியை தெளிவா கேட்டால் நன்றாக இருக்கும்.

எப்பொழுதுமே பட்ஜெட் என்றாலே சிக்கனம் என்று தான் அர்த்தம்....அதிலும் நான் பட்ஜெட் போடும்போது அதற்கென்று துண்டு விழுமேன்றேல்லாம் சொல்லுவார்கள் அதற்காக நீங்க சொல்லியிருப்பதை பார்த்தால் ஒரு பெரிய துணி பண்டுலே விழுந்த மாதிரி இல்ல இருக்கு. எனக்கு தெரிந்த வரையில் அவ்வளவுக்கு பட்ஜெட் போட்டு இவ்வளவு தான் செலவு பண்ண வேண்டும் என்றால் அப்போ பட்ஜெட் போட்டதில் ஏதோ தவறு இருக்குமோ என்று நினைக்கிறேன்?

நீங்கள் உங்களின் கேள்வியை இன்னமும் தெளிவாக கேட்டால்....நிறைய பதில்கள் வர வாய்ப்பிருக்கிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சரியா தான் கேட்டீங்க லாவன்யா நானும் இதை தான் நினைத்தேன்..அதுவும் விருந்தினர்கள் என்னும்போது போட்ட பட்ஜெட்டிலிருந்து எகிற தான் வாய்ப்பு நமக்கு வரும் மாத செலவை வேணா குறைக்க வழி சொல்லலாம்..

என் கணவரோட தம்பி கல்யாணத்திற்கு பட்டு புடவை எடுக்க விழுப்புரம் அருகே ஒரு கிராமத்திற்கு போயிருந்தேன். அங்கே பெண் வீட்டாரது உறவினர் வீட்டில் 25 பேருக்கு சாப்பாடு அரேஞ்ச் பண்ணினாங்க.25 பேருக்குன்னு ஸ்பெசலா எதும் இல்லை. ஆனால், சுவையாகவும் ,படு திருப்தியாகவும் இருந்தது. அந்த குடும்பத்து பெரியவங்க கிட்ட கேட்டென். அது பழக்கத்தில வரும்னு சொல்லிட்டாங்க. மெனு இதோ .சாம்பார்,உருளைகிழங்கு காரக்கறி,புடலை கூட்டு,வாழைக்காய் பொரியல்,அப்பளம்,கூழ்வத்தல்,ரசம்,மோரு . இதில் உருளைகிழங்கு காரக்கறி,வாழைக்காய் பொரியல் ஜஸ்ட் அவிச்சு தாளிச்சது ,கூழ்வத்தல் வீட்டில் போட்டது.மோரும் தாளிச்சது. இதே சிட்டுவேசன்ல நானா இருந்தால் அவியல்,பேபி கார்ன் பிங்கர்ஸ் ப்ரை,தக்காளி பச்சடி ,குடைமிளகாய் கறிமசாலா போட்டதுனு செய்துருப்பேன்பா. இதுல ஒரு விசயம் என்னன்னா அவங்க செலக்ட் பண்ணின காய் எல்லாம் அங்கேயே விளையற விலை கம்மியான,நல்ல காய்கள்.

சித்தி ஒருத்தங்க சொன்னாங்க.பயறு போட்ட புளிக்குழம்பு வீக்லி ஒன்ஸ். அதனால காய் மிச்சம். அதே நேரம் ப்ரோட்டீன்,வித்யாசமாவும் இருக்கும்னு.

கல்யாண்மான புதிதில் என் ஹஸ்+ எனது சொந்தகாரங்க சேர்ந்து வருவாங்க. 10 - 15 பேரு இருப்பாங்க. குறைந்தது 5 நாளைக்கு. ஒரு தடவை நா வெண்டைகாய் 1 கிலோ வாங்க போனேன். ஆனா என் அம்மா சொன்னாங்க. கட்டுபடி ஆகாது. முட்டைக்கோஸ் வாங்கிடுன்னு.. :-) . விருந்தாளிக்களுக்கு செலவு பண்ரது எப்டி தவிர்க்கன்னு கேக்கலை.எப்டி குறைக்கன்னு கேக்கிறேன்பா :-).

அதே போல எங்க வீட்டுல 2 பேரு மட்டுமே. இது எப்டி செலவை குறைக்க..

நா ஓரளவுக்கு புரியும்படி சொல்லிருக்கேனா இல்ல மறுபடியும் குழப்பிடேனா ?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

தளிகா ,லாவண் வாங்கோ

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சமைக்கிறதை குக்கரில் சமைப்பேன் எதையும் வேஸ்ட் பண்ண மாட்டேன்.அளவா அன்றன்றைக்கு சமைப்பேன் .அப்படியே கொஞ்சமா மீதம் வந்தால் அடுத்த வேளை அது தீரும்படியாக எதாவது கசாமுசா வேலை பண்ணி அதை செலவு பண்ணிடுவேன் .மத்தபடி விருந்தினர்களானாலும் சரி நாங்கள் மட்டுமானாலும் தேவை எதுவோ அப்போதைக்கு அதை வாங்குவது என்று பழகிவிட்டேன் ஆனால் ஒரு பட்ஜெட்டில் செய்கிறவர்களுக்கு அது நடக்காது..நீங்க சொன்னது புரியுது ஆனால் எனக்கே தெரியாது உங்களுக்கு வரும் பதிலை வச்சு தான் வெண்டக்காயா முட்டைகோசான்னு தெரியும்;-)
சந்தையில் போனால் காசு செலவும் குறைவு பொருளும் நல்லது கிடைக்கும் என்று கேட்டிருக்கிறேன் ஆனால் அதுவும் சரியான்னு தெரியலை.உறவினர் ஒருவர் ஒரு வருஷதுக்கான பொருளை ஹோல் சேல் விலையில் வாங்கி வைப்பார்களாம்(??!!)ஆனால் எனக்கோ ஒரு வாரத்துக்கான பொருளை வாங்கி வைக்கவே திண்டாட்டம் தான்..எனக்கு அழகா செலவு செய்கிறவங்களை கொஞ்சம் பொறாமை கூட

நீங்களே சொல்றீங்க அவங்க கிராமத்துல இருக்காங்கனு....உங்களுக்கே நன்றாக தெரியும் கிராமத்துக்கும் நகரத்துக்கும் விலை வாசி எவ்வளவு வித்தியாசம் இருக்கும்னு...அதுவும் இல்லாமல் அங்கே வீட்டில் பலர் தோட்டம் கூட வெச்சிருக்கலாம்.

உங்களால் முடிந்தால் நீங்களே இடமிருந்தால் நிறைய காய்கறிகள் அல்லது தொட்டியில் வைத்து வளரும் காய்கறிகள், புதின, கொத்தமல்லி, கீரை, தக்காளி அந்த மாறி விளைய வைக்கலாம். இல்லையா உங்கள் ஊரில் சந்தை எப்போவோ அல்லது பெரிய ஹோல் சேல் காய்கறி மார்கேட்டிலோ பொய் வாரத்திற்கு ஒரு முறை காய்கறிகள் வாங்கி வரலாம். அப்படி வாங்கிட்டு வந்த காய்கறிகளை தனி தனி கவரில் போட்டு பிரிட்ஜில் வெச்சி எந்த காய் முதல் கெட்டுவிடுமோ அல்லது அழுகிவிடுமோ அப்படின்னு பார்த்து சமைக்கணும். அந்த அந்த சீசன் காய்கறிகள் பழங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதை அதிகம் வாங்கி வரலாம். எப்பொழுதுமே அளவாக சமையல் செய்யலாம். யாராவது வந்துவிட்டால் (இப்பொழுதெல்லாம் யாரும் சொல்லாமல் கொள்ளாமல் வருவதில்லை இல்லையா?) அப்பொழுது அவர்களுக்கும் சேர்த்து செய்யலாம். அப்படி அறிவிப்பில்லாமல் வந்தால் கூடுதலாக எதாவது செய்யலாம். அவங்க வீட்டில் இதனை பேருக்கு இப்படி செய்தாங்க நானாக இருந்திருந்தால் இப்படி செய்திருப்பேன்னு என் சங்கடமாக சொல்றீங்க....வந்திருப்பவர்களை அவர்கள் அப்படி கவனித்தால் நீங்கள் இப்படி கவனிக்குறீங்க. இல்லை அதனால் காசு செலவாகுது என்றால் நீங்களும் மாற்றி பாருங்கள். நீங்கள் அப்படி கவனிப்பை மாற்றுவது விருந்தினர்களுக்கு தர்ம சங்கடத்தை தர கூடாது. என்னடா முன்னே கவனிப்பு வேற மாதிரி இருந்தது இப்போ மாறிவிட்டதே என்று அவங்க நினைக்காத மாறி பார்த்துக்கோங்க....அதான் நீங்களே சொல்லிட்டீங்களே கல்யாணம் ஆன புதுசுலன்னு...அப்படி தாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க எப்படி இருக்காங்க அப்படின்னு பார்க்கவே நிறைய பேர் வருவாங்க.....அப்புறம் போக போக குறைந்து விடும். ஆரோக்கியம் கெடாமல் சமைக்கணும்னா அதிகம் பொரிப்பது வறுப்பது அப்படின்னு செய்யாதீங்க. அதையெல்லாம் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம். எண்ணையை குறைவாக செலவு செய்ங்க. தாளிப்பதற்கு ஒரு ஸ்பூன் எண்ணையே போதுமானது. மற்றபடி எப்பொழுதுமே சாப்பாட்டை வீணாக்காதீங்க.....அதற்காக கம்மியாகவும் செய்யாதீங்க. எனக்கெல்லாம் சாப்பாட்டு விஷயத்தில் கணக்கே பார்க்க வராது. வீட்டிற்கு யாராவது வந்தால் போதும் எனக்கு ஒரே கொண்டாட்டம்....விதம் விதமா சமையல் தான்.....நான் சமைப்பதற்காகவே அடிக்கடி வீட்டிற்கு யாரையாவது கூப்பிடுவேன். மீதம் இருந்தால் அதை அவங்களுக்கு வேணும்னா பேக் பண்ணி அனுப்பிடுவேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்