பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நடுவரே

ரொம்ப லேட்டா பட்டியில கலந்துக்கறதுக்கு முதல்ல மன்னிச்சிருங்க இங்க யூஏஇ நேசனல்டே அதனால மூணுநாளு எல்லாருக்கும் லீவாயிருச்சு;( பொண்ணுக்கும் ஃபீவர் ;((

உங்களுக்கு எனது முதற்கண்வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிரணிக்கும் பெரிய கும்புடு போட்டறேன் ஹி ஹி ஹி;-)

நடுவரே...

இயற்கை அழகே போதுமா இல்லை ஒப்பனை அவசியாமான்னா முதல்ல இயற்கை அழகுன்னு எத சொல்றோம் நார்மல் ஸ்கின் தெளிவான கண்கள், பெரிய கண்கள், அளவான உதடு செழுமையான கண்ணம் இதெல்லாம் பாட்டிக்கு மட்டும் விதிவிலக்குதான் ;) பொக்கை வாய்கூட அழகுதான் அந்த வயதில். அலைலையான கூந்தல் கொஞ்சம் சுருளா இருந்தா இன்னும் அழகு..ஆங்கிலத்துல ஒரு பாட்டு வரும் சப்பி சீக்ஸ் டிம்ப்ள் சின் ரோசி லிப்ஸுன்னு ........................அப்படி இருக்கிறதுதான் பேரழகுன்னு நான் நினைச்சுப்பேன்;) ஏன்னா பொதுவா நம்ம புராணக் காவியங்கள்ல கூட அழகுன்னு எடைப்போட்டு பாடி இருக்கிற பாடல்களில் இத்தகைய அழகுகளைத்தான் குறிப்பிட்டிருப்பாங்க...
அப்ப இந்த மாதிரி இல்லாதவங்களை அழகு இல்லைன்னு எடுத்துக்கலாமா??

நடுவரே

அந்தக்காலத்திலகூட ஒப்பனைக்கு முக்கியத்துவம் இருந்தது மஞ்சளை ஒப்பனைக்காகதான் பெண்கள் பூசினார்கள். அது ஆண்டிசெப்டிக் இருக்கு அதனால பூசறோம்னு சொன்னாக்கூட அதை பெண்கள்தானே பூசறாங்க ஆண்கள் இல்லையே!! ஏன்னா நம்ம பூராண கதைகள்ல கூட பார்வதி பூசும் மஞ்சள்ல இருந்துதான் விநாயகர் வந்ததா வரும். அப்பேற்பட்ட கடவுளே ஒப்பனைக்காக மஞ்சளை பூசிக்கிட்டதா இருக்கும்போது சாமானியமக்களான நாம ஒப்பனை அவசியம் இல்லைன்னு எப்படி ஒதுக்க முடியும்??

உதட்டு சிவப்புக்கு பீட்ரூட் சாறு, கசகசா விழுது, கொத்தமல்லிச் சாறுன்னு பூசினவங்கதான் நம்ம முன்னோர். அந்த விசயத்த நம்ம முன்னோர் நமக்கு சொல்லித்தரலை இதுதான் சாக்குன்னு வெளிநாட்டுக்காரன் கடைய விரிச்சு உக்காந்துட்டான் அதுக்காக ஒப்பனையே அவசியம் இல்லைன்னு சொன்னா எப்படி??

நரை முடிக்கு ஹென்னா போடறதும் ஒப்பனைதான் ஹேர்டை போடறதும் ஒப்பனைதான். இளநரைய வச்சிட்டு மாப்பிள்ளைக் கொடுன்னு கேட்டா கொடுத்துருவாங்களா என்ன??

பாரம்பரிய முறைப்படி மை எப்படி செய்யறதுன்னு சொல்லிக்கொடுக்காதது மூதாதையரது குற்றம் ஆனா அதுக்காக மார்க்கெட்ல இப்ப கிடைக்கிற ஐ லைனரை உபயோகப்படுத்துறது சரியில்லைன்னு எப்படி சொல்ல முடியும்?

நடுவரே!

வீரபாண்டியன் கூட என் குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயான்னு வசனம் பேசியிருப்பாரு....மஞ்சளை ஒப்பனைக்காக பெண்கள் பூசியதினால்தானே

இப்போ வர சிகப்பழகு க்ரீம் போடறதுதான் ஒப்பனைன்னு சொன்னா எப்படி??

டிசம்பர் மாசக் குளிர்ல பச்சைத் தண்ணியில முகத்தக் கழுவச் சொன்னா எப்படி நடுவரே??

கரக்ட்டா முக ஒப்பனை செய்யத் தெரியாததால்தான் வேர்வை கசகசப்பு எல்லாம் போட வேண்டிய ஃபேஸ் மேக்கப் போட வேண்டிய நிறத்துக்கு போட்டா ஒன்னும் வராதே.... லாக்லாஸ்ட் லிப்ஸ்டிக்கும் இப்போ இருக்கு, ஃபேஸ் க்ரீமும் இப்போ இருக்கு.

நடுவரே எதிரணித் தோழி குறிப்பிட்டிருந்ததைப்போல அவங்கள்து லவ்மேரஜா இருந்துமே உனக்கு புடிச்சுதானே கல்யாணம் பண்றேன்னு க்கேக்கும்போது ..., எங்கள மாத்ரி அரேஞ்சுடு மேரேஜ் பண்ணினவங்கள எப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்க. அதுக்காகவாவது ஒப்பனை அவசியம்தானுங்க....

இந்திராகாந்தி லைட்டா தலைய கோதி விட்ட மாதிரி வெள்ளை ஹேர்டை போடிருப்பாங்க.. அதேமாதிரி அமிதாப் பச்சன் யூ மாதிரி தாடியில வெள்ளை ஹேர்டை...நம்ம நடிகர் திலகம் சிவாஜியும் இந்த ஒப்பனை எல்லாம் இப்படி பெரிய இடத்தில் பதவியில் இருக்கும் மனிதருக்குகூட தேவையா இருக்கும்போது நமக்கு எல்லாம் வேண்டாம்னு சொன்னா எப்புடீ???

அன்னைத் தெரசா கண்களில் மட்டுமா கருணை இருந்தது ஐசேடோ போட்டிருந்த இளவரசி டயானா கண்ணிலும்தான் கருணை இருந்தது.
கருணையை என்னேரமும் எப்படி கண்ணிலே சுமந்துட்டு இருக்க முடியும் பஸ்ஸில முட்டித்தள்ளற எருமைமாடுகளை முறைக்கவாவது கண்மை பூசின முறைக்கும் கண் தேவைதான் நடுவரே....அதுவும் இல்லாம அப்பப்ப வீக்கர் செக்சா இருக்கிற நமக்கு வர கண்ணீரை அடைக்கற வழியும் இப்படி பூசின கண்மையால்தான் நடுவரே போட்ட கண்மை தாரை தாரையா கண்ணீரோடு முகத்திலேயும் அப்பும்னு என்னமாதிரி நிறய பேர் பொது இடத்தில அழுகாம இருக்க கண்டுபிடிச்சிருக்கற புது வழி நடுவரே அத்தகைய கண்மைய வேண்டாம்னு சொன்னா எப்பூடி??

அதுவும் என்னைமாதிரி ப்ரவுன் கலர் கண்ண வச்சிருக்கவங்க ஐலைனர் போடக்கூடாதுனா நால்பூராசீக்கோழிமாதிரிதான் காட்சிகொடுப்போம்;(

சுருட்டை முடி, குட்டை முடி, சீவக்கட்டை முடி, கம்பி முடி இன்னும் எத்தனையே பேர வாங்கி வைச்சிருக்கிற என் சகதோழிகளுக்கு ஹேர்ஸ்ட்ரெய்டனிங்கும் ஒரு வரப் பிரசாதம்தான் நடுவரே

இங்க நான் யூஏஇக்கு வந்தப்போ ஓரளவுக்கு எல்லா மால்லேயும் இந்தியர்கள்தான் கவுண்ட்டர்ல நின்னுட்டு இருப்பாங்க ஆனா இப்போ எங்கேயுமே இந்தியர்களைப் பாக்க முடியறதில்லை...எல்லா இடத்திலேயும் பிலிப்பைன்ஸ்தான். நீட் லுக் ஃப்ரெஸ்னஸ் எல்லாம் ஸ்ட்ரெய்ட் ஹேர் லிப் க்ளாஸ் லுக்தான் இங்கிலூசும் எதோ வேற்றுக்கிரகத்து பாசைமாதிரி முழிப்பாங்க....ப்ரில்லியண்ட்டா இருந்தும் தோற்றபொழிவு இல்லாததால நம்மாளுங்க பொண்னுங்களுக்கு இங்க அவ்வளவா ஷோரூம்.. மால்லயெல்லாம் வேலை இல்லை.. இயற்கையா கிடைக்காத தோற்றத்தை ஒப்பனை மூலம் ஈடுகட்ட ஒப்பனை அவசியம்தானுங்க...

நடுவரே

முப்பது...முப்பதஞ்சு...ஏன் ஐம்பது வயசு வரைக்கும் கூட ஆண்கள் இளமையாதான் காட்சி தருவாங்க ஏன்னா அவங்க ஹார்மோன் அப்படி ஆனா நம்மக்கு??

ஒரு குழந்தை பெத்ததுமே போயிடுதே கண்ணோட களை ..சுத்தியும் கருவளையம் அதோடையே கணவரோட வெளியப்போனா நமக்கும் நம்ம கணவருக்கும் கவுரவக் கொறைச்சல் இல்லைதான். ரசிக்கரவரு அவருதான் அவரு ஒன்னும் கண்டுக்க மாட்டாரு ஆனா நம்ம கணவரை சைட் அடிக்கறவங்களை பாக்கும்போது நமக்கு கொல வெறி வராதா??? இதெல்லாம் எதனால நாம ஏதோ நம்ம கணவருக்கு ஆண்டின்னு தப்பா அவங்க நினைச்சதுனாலதானே நாம கொஞ்சம் சுதாரிப்பா கன்சீலர் போட்டு போயிருந்தா இந்த நிலைமை வருமா??

சத்தியமா ஐஸ்வர்யா ராய் மாதிரி எல்லாம் ஆயிடுவோம்னு யாரும் மனக்கோட்டை கட்டறது இல்லை நடுவரே ஆனா அதே ஐஸ்வர்யாராய் திருத்தமா அவங்ககண்ணுக்கு ஏத்தமாதிரி கொஞ்சமே கொஞ்சுண்டு ஐப்ரோ வைச்சிருக்கறதுனாலதான் அவங்க கண்ணு அவ்வளவு எடுப்பா காட்சியளிக்குது அது மாதிரி தன்னோட கண்ணும் எடுப்பா காட்டனும்னு நினைச்சா அதுல என்ன தப்பு நடுவரே??

மேக்கப் போடறவங்கதான் விவகாரத்து வழக்குல ஜாஸ்தியாம்....அப்போ ஹிட்லர் மீசை வச்சிட்டு நடிச்ச சார்ளி சாப்ளின பாத்து நாம பயந்து போயா பாத்தோம்...அவரும் என்ன ஹாரர் படமா எடுத்தாரு??? தோற்றத்த வைச்சு எல்லாம் தப்பா மதிப்ப போடவேண்டாமே நடுவரே... நான் சொல்றது சரிதானே??? ( விவகாரத்து யார் பண்றாங்க ந்னு வேணாம் ஒரு தனிப் பட்டி வைச்சி வாதம் செஞ்சுக்கலாம்)

நடுவரே..

ப்ளசண்டா காட்சிளிக்கதான் மேக்கப் அப்படியில்லாம டெரரா மேக்கப் போட அவங்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம் ஒருவேளை தன்கிட்ட ஜொள்ளுவிடற ஆண்களிடம் நாண்டெரரர்னு காமிக்ககூட இருக்கலாம்....இல்லை நேரங்கெட்ட நேரத்தில கால்செண்டர்ல இருந்து வெளிய வரும்போது இந்தியில நூரி நூரின்னோ இல்லை நானே வருவேன்னு ஹம்மிங்கோ பாட அவசியம் இல்லாம இந்த பிசாசு லுக் போதும்னு கூட நினைச்சு ஒப்பனை போட்டிருக்கலாம் ஆனா எல்லாமே காரணகாரியாமாதான் அதனால ஒப்பனை அவசியமே இல்லைன்னு முழுமையா ஒதுக்க முடியாது....எல்லாரும் அவங்கவங்க ஹேர்டை போட்டிருக்கிற அட்லீஸ்ட் ஹென்னா போட்டிருக்கிற தலையில கைவெச்சாவது உண்மைய ஒத்துங்குங்க்ன்னு சொல்லி நடுவரே எதோ என்னால முடிஞ்ச நேரம் ஒதுக்கி வந்துருக்கேன் என் மனம் குளிர்ர மாதிரி ஒரு நல்ல தீர்ப்ப சொல்லுங்க;-))

கடைசி குறிப்பு: ஹி ஹி கடைசி கடைசியா மாய்ஸ்டரைசிங்கூட ஒப்பனைகூட சேர்ந்ததில்லைன்னு சொல்லிட்டாங்களே உண்மையாவா???

Don't Worry Be Happy.

சனிக்கிழமை ஃபுல் டே கரன்ட் கட். இன்னிக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு, வியர்கக விறுவிறுக்க ஒடி வராம , நீட்டா , திருத்தம்மா, வந்து உக்காந்து, எங்க கட்சிக்கு பொலிவு கூட்டுவோம்ல!!
இயற்கை அழகை பத்தி நாலு பக்கத்துக்கு பேசறவங்களுக்கு நாங்க நாலே வரியில நச்சுனு பதில் சொல்ல்லாம் தான். ஆனா , உங்களுக்கு புரியற மாதிரி நாங்களும் பட்டியில பேச வேணாமா??
(நீதிலட்சுமி, எனது பணிவான் வேண்டுகோள்! இயற்கை அழகு என்பதன் சரியான விளக்கம் என்ன? என்பதை உங்கலள் தீர்ப்பில் வெளியிட வேண்டுகிறேன்)
சரி, கமிங் டு த பாயிண்ட்ஸ்!!
1.இயற்கையை விரும்பும் அணியில் எத்தனை பேர் , தலை நரைத்தலும் டை அடிக்காமல் இருக்கீங்க(இப்பொல்லாம் 30 வயசுலயே நரைக்குதே!!
2.அழகுணர்ச்சி என்பது நம் இந்திய கலாசாரத்தில் ஊன்றிய ஒரு விஷயம். சுவாமி, அம்மன் பட்ங்களையே எடுத்துப் பாருங்க்கள். அலங்காரம் என்பது என்ன என்பது புரியும்.
3. கறுப்பை சிவப்பாக மாற்றம் செய்ய நினைப்பவர்கள், இன்னும் அறியாமை என்னும் பெருங்க்கடலில் இருந்து கரை சேரவில்லை. (கருப்பாக இருப்பவர்களும் ஒழுங்காக ஒப்பனை செய்து கொண்டால் களையாகத்தான் இருப்பார்கள்)
4. அழகு என்பது பார்ப்பவரின் கண்களைப் பொற்த்த்து. ஆனால் உறுத்தாத மேக் அப் போட்டால் உங்கள் தன்னம்பிக்கை மேம்படும்.
5.ஒரு உதாரண்ம்... ஐ ஐ டி ரிசர்ச் க்ருப் டிஸ்கஷனுக்கோ, மிகப் பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வுகளுக்கோ செல்லும் போது ட்ரஸ்க்கோட் என்று உள்ளது என்பதை எதிர் அணியினர் உண்ர்வார்களா? பர்ஸ்னாலிட்டி டெவலப்மண்ட் ஸ்கில்ஸில் தன்னை அழ்காக வெளிக்கொணற்வது எப்படி? என்பது ஒரு தனி பாடம், தெரியுமா?
6. இயற்கை அழகா? ஒப்பனையா? என்பதிற்கு பதில் செய்யற்கை அழகா என்று தலைப்பு கொடுத்தாலும் --- காமிரா முன் நின்று நடிப்பவர்களுக்கு கெமிக்கலினால் ஆன செயற்கை அழகு நிச்சயம் வேண்டும் என்றே வாதம் செய்திருப்பேன்.
7. தலையை விரித்து போட்டுக் கொண்டு சாதாரண் வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட ஏகப்பட்ட க்ரீம்களை பூசிக் கொண்டு பயப்படும் படியான தோற்றத்துடன் சென்றால் ---அவர்கள் பாட்த்தை சரியாக படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கறது என்னான்னா,´ அது மஞ்ச்ளோ , மருதாணியோ
க்ரீமோ, லோஷனோ
டையோ, தைலமோ
வேக்ஸிங்கோ, பேஷியலோ
அலங்காரமோ, க்ரூமிங்கோ
ஒப்பனைங்கறது பொருளில் இல்லைங்க!! செய்யும் வித்த்தில் தாங்க இருக்கு!!
சோ, இடம் , பொருள் ஏவல் பார்த்து லவ் பண்ணி ஒப்பனை செய்யுங்க !! லைஃப் நல்லா இருக்குமுங்க!!
(இத்துடன, செந்தூரத் திலகமிட்டு
சிங்காரப் பேச்சினால், என் உள்ளம் கவரப்போகும் என் தலைவிக்கு புன்னகையை பொன்னாடையாக அணிவிக்கும்( எப்பூடி சொல்லுக்கு ஒப்பனை) உங்கள் ஒப்பன சுந்தரி

அந்த காலத்தில் மஞ்சள் பூச காரணம் பற்றி கூறுகிறார்கள்.. அது கண்டிப்பா ஒப்பனையே கிடையாது.. மஞ்சள் பூசினால் முகத்தின் நிறம் இளம் மஞ்சள் ஆக மாறுகிறது என்பதால் நாம் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. நாம் மஞ்சளை பூசும் ஓது கிருமி நாசினியாக மாறி உதவுகிறது. அதை எப்படி ஒப்பனையாக எடுத்துக் கொள்ள முடியும்? பாசிபயிறு,கடலை மாவு, தலையில் போடும் ஹென்னா என அனைத்துக்குமே இருக்கும் மருத்துவ குணத்திற்கு தான் நாம் அதை ஆரம்பத்தில் பயன்படுத்த தொடங்கினோம். ஆனா நம்ம மக்கள் சொன்னா கேக்க மாட்டாங்கனு அதை அப்படியே அழகு சாதன பொரிட்களில் கொண்டு வந்துட்டோம்.சுத்தத்திற்காக பயன்படுத்தும் பொருட்களை தயவு செய்து ஒப்பனையில் கொண்டு வராதீர்கள்.ஒப்பனை மெருகேற்றுவது.( சோப்பு, பேஸ்ட்,அரப்பு அனைத்துமே). இது போன்ற இயற்கையா பயன்படுத்தும் ஒரு பொருளில் மருத்துவ குணம் இல்லைனு சொல்ல முடியுமா?மருத்துவ குணம் இருந்ததால் தான் நாம் அதை பயன்படுத்தவே தொடங்கினோம். அழகை மட்டும் கொடுக்கும் ஆனா மருந்தாக பயன்படுத்த முடியாத ஒரு இயற்கை பொருளை சொல்லுங்க. அப்ப ஏன் ஆண்கள் பயன்படுத்தலைனு கேப்பாங்க.. மாதவிலக்கும், அதற்கான தோல் மாற்றமும் இருப்பது பெண்ணுக்கு தான். மேலும் மலர்,மஞ்சள் அனைத்தும் பெண்ணுக்குரியது. கிருமி நாசினியாய பயன்பட்டு வந்த பொருளை அழகு சாதனமா மாத்தி இன்று ஒப்பனை லிஸ்ட்ல கொண்டுவந்து விட்டுடாங்களே..

லவ் மேரேஜா இருந்தாலும், புடிச்சு தானெ கல்யாணம் செய்யற நம்ம மக்கள் கேட்பதே அவர்களுக்கு இருக்கும் அறியாமை காரணம் தான்.. இதை மாற்ற முடியாது.. ஜல் ஜல்னு இருந்தா தான் கல்யாணம் பொண்ணுனு ஒரு கூட்டம் முடிவு பண்ணிக்குது. படித்த இன்றைய கால பெண்கள் எல்லாம், சிம்பிளா அழகா இருக்கனு சொன்னாலும், அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஆசாமிகள் கேட்ட கேள்வியை நான் ஒரு உதாரணத்துக்கு எடுத்து வைத்தால், மக்கள் அதை பிடித்துக் கொள்கிறார்கள் :). ஆனால் அந்த ஃபோட்டாக்ராஃபர் சொன்னதை பற்றி இவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை போலும் ;)

தூக்கம் வரும் போது பச்ச தண்ணிய முகத்தில் அடிப்பது பற்றி சொன்னேன்.. ஆண்டவா.. தண்ணி ஐஸா இருந்தா வார்ம் வாட்டரை யூஸ் பண்ணுங்க. இதை எல்லாம் சொல்ல முடியுமா? அப்ப தூக்கம் வரும் போது பவுடர் போட்டு ஐ லைனர் போட்டா ஃப்ரஷா மாறிடுவோமா?

நாலு வரியில் நச்சுனு பேசுவதால் வேதி பொருட்கள் நிறைந்த ஒப்பனைகள் நல்லது ஆகாது நடுவரே. அதை புரிய வைக்க தான் நாங்களும் பக்கம் பக்கமா பேசி மெனங்கெடுறோம்.

தலைக்கு டை அடிப்பதும் அவரவர் விருப்பம்.. உண்மையா சொல்றேன் எங்க வீட்டில் யாரும் அடித்து நான் பார்த்தது இல்லை.. இரண்டு வெள்ளை முடி இருந்தால் அது அழகேனு தான் நினைக்கறாங்க. டை அடிப்பவர் கூட்டம் இருக்கும் போது அடிக்காமல் இருப்பவர்கள் இல்லாமல் இல்லையே.

அம்மன் , சாமி படம் அலங்காரத்தோடு இருக்கு.. அதேயே நாமும் செய்தால் எந்த நாடக குழுவில் இருந்து வந்தனு கேப்பாங்க.. ராஜா, ராணி, சாமிகள் எல்லாமே நம்மை கவர செய்து வைத்த ஓவியமே.. யாருக்கு தெரியும்.. இப்படி தான் இருந்தார்கள் என?

நாமே நினைத்துக் கொள்கிறோம்.. ஒரு மீட்டிங்கனா நமக்கு ஒரு கோட்டிங்னு. அப்ப தான் மக்கள் மதிப்பாங்கனு ஒரு எண்ணம்.நீட்டா போறதுக்கும், மேக் அப்புடன் போறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. நீட்டா போக முடியும்னு நாங்க சொல்றோம். ஆனா மேக் அப் இருந்தா தான் நீட்டாவே ஆக முடியும் எதிரணி நினைக்கறாங்க..

கண்ணை உறுத்தாம போட்டாலும் மேக் அப் கெமிக்கல் தன்மையில் இருந்து இயற்கை பொருளா மாறாது.. வினை என்றும் வினைதான்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//ஆனால் அந்த ஃபோட்டாக்ராஃபர் சொன்னதை பற்றி இவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை போலும் ;)//

ஹா ஹா ஹா ஃபுல் மேக்கப்ல இருந்த என்னைப் பார்த்துகூடதான் நடிகை ஸ்னேகா மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாரு அதையும் நம்பச்சொல்றீங்களா;-) நடுவரே கல்யாணப்பொண்ணு ஏதோ தையிரியத்துல மேக்கப்போ இல்லை மேக்கப்போடாமலோ எதையோ ஒன்னு தனக்கு தோணின விதத்தில செஞ்சு இப்படி செஞ்சாதான் நல்லாயிருப்போம்னு ஒரு இரண்டு கெட்டான் தையிரியத்தோட இருக்கு அது கிட்ட போயி இன்னும் உன் மேக்கப் சரியில்லை இன்னும் கொஞ்சம் மேக்கப் போடுன்னு எல்லாம் சொல்லி கடைசி நேரத்தில அதுவும் கலவரம் ஆயி அதை அப்படியே முகத்தில காட்டி எடுக்கிற எல்லா ஃபோட்டோவும் வீணாப்போகனுமா....நல்லாயிருக்குன்னு சொல்லும்போது முகத்தில எக்ஸ்ட்ராவா ஒரு க்ளோ வருதுல அதுபோதும் ஃபோட்டோ எடுக்க;-) ஆனா கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தா இன்னும் நல்லாயிருக்குமேன்னு என்னிக்காவது நினைக்காம இருந்திருக்காங்களான்னு அவங்க மனச தொட்டு சொல்லச்சொல்லுங்க நடுவரே!

//தூக்கம் வரும் போது பச்ச தண்ணிய முகத்தில் அடிப்பது பற்றி சொன்னேன்.. ஆண்டவா.. தண்ணி ஐஸா இருந்தா வார்ம் வாட்டரை யூஸ் பண்ணுங்க// .....ஆஹா நல்லா இருக்கே கதை...அப்ப நான் தான் சரியா படிக்கலையோ!!! ஏனுங்க நடுவரே தூங்கும்போது எதுக்குங்க மேக்கப் நாங்க முழிச்சிருக்கும்போதுதான் மேக்கப் போட சொல்றோமுங்க ..தூங்கும்போது க்ளன்சர்., டோனர் வைச்சு நல்லா மேக்கப்ப வைப் பண்ணிட்டு போங்க...பகல்ல மேக்கப் போடறதே இந்த ஐவி ரேஸர் யூவி ரேஸர்கிட்ட இருந்து ஸ்கின்ன பாதுக்காக்கதான்..ஒன்னும் போடாம வெறும் தண்ணில மட்டும் கழுவிட்டு நின்னா டைரக்டா வெயில் பட்டு ஸ்கின் சீக்கிரம் சுருங்கிப்போயிடும்ங்க...

//நாலு வரியில் நச்சுனு பேசுவதால் வேதி பொருட்கள் நிறைந்த ஒப்பனைகள் நல்லது ஆகாது நடுவரே. அதை புரிய வைக்க தான் நாங்களும் பக்கம் பக்கமா பேசி மெனங்கெடுறோம்.//.........அப்பாடா..நீங்களும் அதுதான் சொல்ல வரீங்களா;) நாங்க மட்டும் என்ன வேதிப்பொருட்கள்தான் ஒப்பனைன்னு சொல்லிட்டு இருக்கோமா என்ன?? நடுவரே ரெட் சந்தனத்தையும் முல்தானி மட்டியும் கொஞ்சம் எடுத்து அதுல கொஞ்சமே கொஞ்சம் வெட்டி வேரை கலந்து பவுடர் பண்ணி முகத்துல ஃபேஸ் பவுடரா யூஸ் பண்ணுங்க முகம் நல்லா சில்லுன்னு இருக்கும். எந்த கெமிக்கலும் இல்லாத ஃபேஸ் பவுடர் ரெடி இப்ப ஒத்துக்கிறீங்களா ஒப்பனை அவசியம்னு.

ஒரு தடவை பார்லருக்கு போயிட்டு கிடைச்ச மோசமான அனுபவத்த வைச்சும் பார்லருக்கே போகாம இப்படிதான் இருக்கும்னு நினைச்சுக்கறத வைச்சும்., அரைகுறை மேக்கப் விஷயத்த தெரிஞ்ச ஃப்ரெண்டா கசினா? அவங்ககிட்ட முகத்த கொடுத்துட்டு முகம்போச்சு எரியுதுன்னு சொல்றவங்களை வைச்சு எல்லாம் ஒப்பனை அவசியமில்லன்னு எடுத்துக்க முடியுமா?? என்னைக்கும் இளமையா இருக்கிற காலத்துக்கும் மேக்கப் போடற ஸ்ரீதேவியும், ஹேமாமாலினியும் வந்து சொல்லட்டுங்க நடுவரே ஒப்பனை அவசியம் இல்லைன்னு அப்ப நாங்க நம்பறோம்;-)

நடுவரே

தன்னோட தோழியோட ஸ்கின் பாலானதைப் பத்தி அங்கலாய்ச்சாங்க எதிரணித்தோழி ஒருத்தங்க.. நடுவரே ஒரு காய்ச்சல் வருதுன்னு வையுங்க டாக்டர் என்னிக்கும் ஒரே மருந்தையா மாத்தாம கொடுக்கறாரு?? ஒவ்வொருதடவையும் மாத்தி மாத்திதானுங்க கொடுக்கறாரு.

ஏன்? ஒரே மருந்தை தொடர்ந்து உபயோகப்படுத்தினா அது நம்ம உடம்புல ஏண்ட்டி ரியாக்ஸனை உண்டு பண்ணி இன்னும் அதிகமா முடியாமப் பண்ணிடும்.. இப்படி ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு கொடுக்கிற மருந்தே இந்த வாங்கு வாங்கும்போது மேல பூசிக்கிற க்ரீம் மட்டும் நான் இதேதான் உபயோகப்படுத்துவேன்னு சொன்னா இப்படிதான் ஆகும் நடுவரே! அதையும் மாத்தி மாத்திதான் உபயோகப்படுத்தனும்னு தெரியாதது அவஙக் அறியாமை நடுவரே!

நடுவரே

முதல்ல க்ளன்சர் வச்சி தோலோட நுந்துளைகளில் இருக்கிற அழுக்க வெளிய எடுத்து அப்புறம் டோனர் வச்சி ஸ்பேரே பண்ணி அந்த ஸ்கின்னுக்கு புத்துணர்வு கொடுத்து ஸ்கின்னுக்கு ஒத்துப்போற மாய்ஸ்டரைசிங்க் க்ரீம்போட்டு அதுமேல மேக்கப் பேஸ் போட்டு அப்புறம் பவுண்டேசன் போட்டு கடைசியா ஐசேடோ, ஐலைனர், லிப்லைனர், லிப்ஸ்டிக், லிப்க்ளாஸ் போட்டு முடிக்கறதுதான் முறையான மேக்கப். இத பண்ணாம ஸ்கின்னுக்கு உள்ள இருக்கிற அழுக்கை வெளிய எடுக்காம அப்படியே மேக்கப் போடறதுனால வருதுதான் இந்த ப்ளாக்ஹெட்ஸ், பிம்பிள்ஸ் எல்லாம். முறையான மேக்கப் போடுங்க காலைலேர்ந்து சாய்ந்தரம் வரை ஃப்ரெஸ்ஸாதான் இருப்பீங்க. தண்ணிய போட்டு கழுவினா சரியாயிடும்னு சொல்றத எல்லாம் நம்பி வீண்வினையில இறங்கிறாதிங்க நடுவரே! அதுவும் நம்ம சென்னை தண்ணிய நம்பி;((

நடுவரே

இப்ப மார்க்கெட்ல விக்கற ஃபுருட்ஸோட விலை தெரியாம எதிரணி ஃபுரூட்ஸ் சாப்பிடுங்க ஸ்கின் நல்லாகும்னு சொல்றாங்கன்னு நினைக்கிறேன். நாலு ஆப்பிள் நூறு ரூபாய் கொடுத்து வாங்கி நாலே நாள்ல தீர்க்கறதுக்கு....ஒரு நல்ல புரோடக்ட் விலை கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லைன்னு வாங்கி வையுங்க ஒரு வருசத்துக்கும் மேல பலனைக் கொடுக்கும்.

நடுவரே

இயற்கை அழகோட காம்பினேசன் ஸ்கின் வச்சிட்டு தண்ணிய மட்டும் போட்டு கழுவி குழந்தைய ஸ்கூலுக்கு விடப்போங்க பாக்கறவங்க என்ன உங்க மாமியா? ந்னு ஆயாசமா கேப்பாங்க அதுவே கொஞ்சம் லிப் லைனரும் ஐலைனரும் போட்டுட்டு போங்க என்னது உங்க மம்மியா அப்படின்னு ஆச்சரியமா கேப்பாங்க;)

நடுவரே

முடி நரைத்து பல் விழுந்து தள்ளாத வயதில் இருந்தாலும் இன்னும் நீங்க இளமையா இருக்கீங்கன்னு சொல்றதைதான் பெண்கள் விரும்புவாங்க அதுதான் அவங்க குணம் அப்படிப்பட்ட பெண்குலத்தில் இருந்து வந்த நான் சொல்றேங்க ஒப்பனை அவசியமே ஒப்பனை அவசியமே

Don't Worry Be Happy.

அனைவருக்கும் காலை வணக்கம்...... இப்பதான் சந்தோஷமா இருக்கு. நம்ம அணியில இருந்து நாலு பேர் குரல் கொடுத்தா தானே தெம்பா இருக்கு. சந்தோஷமா இருக்கு. 10 மணிக்கு கரென்ட் போய்டும். மதியம் வ்ரேன். வந்து வாதாடுகிறேன் ஒப்பனை அவசியமே அவசியமே அவசியமேனு. பை.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கல்யாண பொண்ணு ஸ்நேகாவா இருக்க வேண்டிய அவசியமில்லை.. மற்றவர்களின் கல்யாண மேக்கப்பை சொன்னால் அது அஸம்ப்ஷன் ஆகும் வாய்ப்பு இருப்பதால் தான் நான் என் திருமண நாளை கூறினேன்.. இதில் எந்த அஸம்ஷனும் எதிரணி தோழிக்கு வேண்டாம்.. காசுக்காக வரும் ஃபோட்டோக்ராஃபர் வேண்டுமெனில் அவர்கள் கூறியது போல கூறலாம்..அவரிடமே அப்படி கூறியும் இருக்கலாம் என்பது எனது அஸம்ஷன் ... ஆனால் நான் கூறியர் நட்புக்காக வந்தர். அப்படி சொல்ல அவருக்கு அவசியம் இல்லை. சரி இல்லை எனில் நேரிலே கூறி சரி செய்து வர சொல்லும் நட்பு கொண்டவர் எங்களிடம்.(குறிப்பு : எதிரணி தோழி ஸ்நேகாவை விட அழகாய் இருப்பாவராச்சே. ஃபோட்டோகிராப்ர் சரியில்லை:) ).மனசாட்சி தொட்டே கூறுகிறேன்.என்னவர் யூஎஸில் இருந்து வாங்கி வந்த நல்ல ப்ராண்ட் மேக் அப் கிட்ஸ் இருந்தும், எனக்கு ஏனோ போட பிடிக்கலை.. சிம்பிளா இருக்கவே நினைத்தேன் :).அதை பற்றி எனக்கு சந்தோசமே.. எத்தனையோ பேர்.. ஏன் எதிரணி தோழி ஒருவரே கூறி இருக்கிறார். அழகா தான் இருந்தேன் .. மேக் அப் போட்டு விடறேனு சொல்லி என்னை அசிங்கமாக்கிட்டாங்கனு.

அவங்க தானே நடுவரே கூறினார்கள்.. தூங்கி வழியும் போது மேக் அப் அவசியம் பொடணும்னு சொல்லி..நாங்கள் எந்த சமயத்தில் தண்ணி பயன்படுத்த சொன்னா அவங்க எதை பற்றி பேசுகிறார்கள் பாருங்க.நாங்க தூக்கம் வர சமயத்தில் தான் கூறினோம்.அதையே பகல், ஃபங்ஷன்னு எல்லாத்துக்கும் அவங்களாவே சேர்த்து அழுகினி ஆட்டம் ஆடறாங்க நடுவரே ;). அதுக்கு தான் நாங்க இப்படி கூற வேண்டியதாயிற்று. சரி தான்.. சூரியன் வெளியில் இருந்து பாதிக்கறார். க்ரீம்ஸ் உள்ளே இருந்து தாக்குகிறது.. எது பெஸ்ட்னு முடிவு பண்ண சொல்லுங்க நடுவரே.. மருந்துகளை கூட இப்போ ஒப்பனை ஆக்கிட்டாங்க..

என்ன தான் சொல்லுங்க.. வெளிபுற கேட்டிங் என்பது கண்டிப்பாக தேவையில்லாதது.. அரைகுரையாய் பயன்படுத்துகிறார்களோ.. இல்லை பார்லரில் கொட்டி கொடுகிறார்களோ.. காசை இறைப்பதற்கே சமம்.. மேக் அப்பால் வரும் டிஸிஸ் பற்றியும், அலோங்கலப்படுத்தலை பற்றியும் கூறினால்.. பொதுவாக மேக் அப் செய்ய தெரியாதவர்கள், இல்லை சரியான இடத்திற்கு போகாதவர்கள் எனக் கூறி சமாளிக்க வேண்டியுள்ளது.. ஆனால் இந்த நிலை இயற்கையை தேடி போறவங்களுக்கு இல்லையே.. ஒப்பனை என்பதே ஆர்டிஃபிஷியல் ஐடம்ஸ் தான்.. இயற்கை/செயற்கைஅழகு சாதனம் எது எதுனு கேட்டு ஒரு பட்டி நடத்தனும் போல..அத்தனை மேக் அப் சாதனங்களிலும் இருக்கும் க்ரிஸ்டலின் க்வார்ட்ஸ் நமக்கு ஸ்கின் டிஸிஸ் கொடுத்து கேன்சருக்கே அழைத்து செல்லும்.. நமது தோலை ஸ்வாசிக்கவிடாமல் செய்து நுரையீரலை டாக்ஸின் வாயுவை ஸ்வாசிக்க செய்யும்.

உண்மையாகவே வெளியே அப்பி மெனங்கெட வயத்துக்கு ஒழுங்கா கொடுத்தா போதும்.. ஏன் நடுவரே.. இந்த பேச்சு பேசும் எதிரணி தோழி வாங்கிய ஆப்பிளில் நாலு நல்லா இல்லாம போன சும்மா விடுவாங்களா? ;) அழுகிய பழத்தை வாங்கும் ஆளை பாருங்க.. ;)

ஆமாம்.. ஸ்கூலுக்கு குழந்தையை விட போகவே லிப் க்லாஸ்ஸில் இருந்து ஐ லைனர் வரை பயன்படுத்தினால், பாவம் ஆத்துக்காரர்.. தலையை ஒழுங்கா ஒதுக்கி குளிச்சு நல்ல ட்ரஸ் போட்டு போங்க.அதுவே போதும்.. ஆடையே பாதி அழகை கொடுத்திடும்.. எப்பவும் எப்படி தான் இப்படி மேக் அப்போடு இருக்காங்கனு நினைத்தாவே தலை சுத்துது..

அதிலும் ஹேர் ஸ்டெயிடனிங், கர்லிங், அது இதுனு பாவம் அந்த முடியை வலுவில்லாம செய்ய வேண்டியது. அப்பறம் அறுசுவையில் வந்து முடி அதிகம் கொட்டுகிறது.உதவுங்கள் தோழிகளேனு கேக்க வேண்டியது.. தலையை பரட்டை போல ஆக்கி பார்ப்பவர்களை எல்லாம் பயமுறுத்த 1000 ரூபாய் செலவு செய்யறாங்க ( உடனே செய்ய தெரியாதவங்கனு முத்திரை குத்தாதிங்க.. அதுக்கு பேருதான் ஸ்டைலாம்.. அதை தான் விரும்பி செய்யறாங்க ).. அதில் வேற நெயில் ஆர்ட்டாம்.. மூனு நாளைக்கு ஒருதரம் நகத்தில் படம் வரைந்து வருவது. வரைபவருக்கென்ன காசு வருத்து.. குடும்பம் வீதிக்கு வந்துவிடும். நெயில் பாளிஷ் ரிமூவர் கர்பபைக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.. நககண்களில் தான் முக்கிய நரம்புகள் உள்ளன.. காலிலும் அதே கதை.. நல்லா மேக் அப் போட்டு போட்டு பழக்கி அந்த ஸ்கின் மேக் அப் இல்லாம பாக்கவே சகிக்காத நினைக்கு கொண்டுவர வேண்டியது.

நடுவரே.. செயற்கையான அழகு இருந்தா தான் நம்மை மற்றவருக்கு பிடிக்கும் என நினைக்கிறார்கள்.. அது முற்றிலும் தவறு என உங்க அழகான தீர்ப்பை கொடுங்க..

நாங்க தான் இங்கே அடிச்சிகிட்டு இருக்கோம்.. நடுவரை தான் காணலை ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்கூளுக்கு கூட மேக் அப்பா.ஏங்க மேக் அப் இல்லாம போனா மாமி இருந்தா மம்மியா ஏங்க மாமிங்க எல்லாம் அசிங்கமா தான் இருப்பாங்கன்னு சொல்லுறீங்களா
வாதத்துக்காக இல்லை ஆனால் உண்மையில் வாழ்க்கையில் நிகழும் சில பல மாற்றங்களை அனுபவித்து இறப்பதிலும் ஒரு சுகம் உண்டு தெரியுமோ.நரைத்த முடியை டை அடிச்சு வச்சுட்டா சின்னதா தெரியுவாங்களோ.நடிகைகளுக்கு அது அவங்க பொழப்பு அடிச்சுக்கறாங்க இல்லன்னா அம்மா ரோல் வந்துடும்.
ஒரு உதாரணம் வெளிநாட்டில் பாதி ஆம்பிளைகளுக்கு முப்பது வயசில் முடி எல்லாம் கொட்டி சொட்டையாகியிருக்கும் நம்ப ஊரில் என்ன செய்வாங்க?அதை ஒரு குறையா கற்பனை பண்ணி இருக்கிற நாலு முடியை இழுத்து வச்சு மண்டையை மறைச்சு சீவுவாங்க அதை விட அசிங்கம் வேற ஒன்னுமே இல்லை அதையும் விட்டா விக் வைப்பாங்க..வெளிநாட்டில் பாருங்க அப்படி வழுக்கையா இருந்தா முடியை ஒட்ட நறுக்கி விட்டு இளமைக்கு திரும்பிடுவாங்க பாக்க ஒழுங்கா இருக்கும்.நாமாவே கற்பனை பண்ணிக் கொண்டு தான் எதெதுவோ செஞ்சுகிட்டொரிக்கோம்.
வயசான காலத்தில் ஒரு குழந்தை பிறந்து அது வளந்துச்சுன்னு வைய்யுங்க நாம அம்மா வல்லாமல் போய்விடுவோமா நரைத்தாலும் அம்மா தானே..அதையும் மீறி குழந்தை என் அம்மா அம்மா போல இல்லை பாட்டி போலன்னா நாம குழந்தையையும் அறியாமையில் வளத்திட்டோம்னு அர்த்தம்.
எனக்கு தெரிந்த பியூட்டீஷியன் பெண்ணிடம் எப்படி மேக் செய்யலாம் என்றபோது சொன்னது அதெல்லாம் எதுவும் வேனாம் நீங்க யோகா பண்ணுங்க என்ன மேக் அப் போட்டீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க என்று.அந்தம்மா இதுநாள் வரை எதுவுமே செய்து பார்த்ததில்லை..ஏன் இருக்கிற க்ரீமையெல்லாம் எடுத்து தேச்சு பார்க்கலாமே.சும்மா மேலோட்டமா செய்யுற எந்த ஒரு விஷயமும் வாழ்க்கையில் நிலைக்காது.வயிற்றில் சத்தானது சென்றால் தான் அதன் பிரதிபலிப்பு சருமத்துக்கு வரும்
எனக்கு தெரிந்த பொண்ணுக்கு இளநரை இப்போ சுமார் 35 இருக்கும் ஆனால் 80% நரைத்தாச்சு முடியோ நல்ல அடர்த்தியாக இருக்கும்..இதுநாள் வரை அவங்க டை அடிச்சதில்லை அவங்க திருமணத்துக்கு கூட அப்படியே தான் இருந்தாங்க ஆனால் அழகில் எந்த குறையும் இல்லை ரொம்ப அழகா இருப்பாங்க.அந்த முடியும் எந்த வகையிலும் குறையா தெரியாது அதை அழகா குட்டியா வெட்டி வ்ட்டிருப்பாங்க பரபரன்னு பிசினெஸ்ஸில் பம்பரம் போல சுத்துரவங்க..தினசரி முடியை அலங்காரம் பண்ணிட்டு இருந்தா பிழைப்பு நடக்குமா.ஆனால் அவங்க வேலைக்காரங்களை பார்த்தால் இவங்க ஆஜரானால் போதும் வேலை நிமிஷத்தில் முடியும் எங்களுக்கு எல்லாருக்குமே அவங்களை கண்டால் ஒரு பயம் கலந்த மரியாதை அதிகம் .அவ்வளவு கேப்பபிளான பெண் அவங்க..ஒரு மனுஷனுக்கு இதெல்லாம் தான் முக்கியம் எந்த வகையிலும் நமக்கு கிடைக்கும் மரியாதைக்கும் பாசத்துக்கும் மேக் அப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.ஒரு ஸ்கூள்ள கூட பாருங்க தினசரி ஃபேஷன் ஷோக்கு வரும் டீச்சர்களும் உண்டு அவங்க மேல பிள்ளைகளுக்கே அவ்வளவு மரியாதை வராது அதுவே கண்டிப்பும் கடமையும் நிறந்த டீச்சர்களை பாருங்க பிள்ளைக தன்னையறியாம எழுந்து நிற்கும்..அத் ...து

நடுவர் இல்லைன்ன என்ன நாங்க இங்குட்டுதானே இருக்கோம்;-))

//உண்மையாகவே வெளியே அப்பி மெனங்கெட வயத்துக்கு ஒழுங்கா கொடுத்தா போதும்.. ஏன் நடுவரே.. இந்த பேச்சு பேசும் எதிரணி தோழி வாங்கிய ஆப்பிளில் நாலு நல்லா இல்லாம போன சும்மா விடுவாங்களா? ;) அழுகிய பழத்தை வாங்கும் ஆளை பாருங்க.. ;)// நடுவரே வயித்தெறிச்சலை ஏன் கொட்டிக்கிறீங்க நாலு ஆப்பிளும் அழுகியிருந்தாலும் பரவாயில்லை நடுவரே ஆனா பளபளன்னு இருக்கேன்னு ஆசையா கடிக்க போனா வேக்சின் பூச்சு பயமுறுத்துது நடுவரே;( இப்படி பழங்களை பழுக்க வைக்க கார்பன் கல்லும் பளபளக்க வேக்சினும் போட்டிருக்கிற பழங்களையா வாங்கி சாப்பிடுங்கன்னு சொல்றாங்க...அது வயித்துக்குள்ள போயி இல்லாத வியாதியக் கொண்டு வரதுக்கு உண்மையாவே சன் ப்ளாக்ல இருந்து காப்பாத்தற இந்த ஃபேஸ் க்ரீம் எவ்வளவோ பெட்டர்;-)

Don't Worry Be Happy.

//ஸ்கூளுக்கு கூட மேக் அப்பா.ஏங்க மேக் அப் இல்லாம போனா மாமி இருந்தா மம்மியா ஏங்க மாமிங்க எல்லாம் அசிங்கமா தான் இருப்பாங்கன்னு சொல்லுறீங்களா//....அச்சச்சோ நடுவரே நான் மாமிய எல்லாம் அசிங்கம்னு சொல்லலைங்க அதுக்காக சின்னப்பொண்ணா இருக்கிற என்னைய பாத்து மாமின்னு சொன்னா ஒத்துக்க முடியுமா என் மனசு எவ்வளவு கஷ்டப்படும்;( அதே கொஞ்சம் ஐலைனரும் லிப்க்ளாஸும் போட்டா நான் எந்த காலேஜுன்னு கூட கேக்கறதில்லை நடுவரே எந்த ஸ்கூல்னுகேக்கறாங்க;-)) இதுதானுங்க வேணும் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு;-)

//.தினசரி முடியை அலங்காரம் பண்ணிட்டு இருந்தா பிழைப்பு நடக்குமா.ஆனால் அவங்க வேலைக்காரங்களை பார்த்தால் இவங்க ஆஜரானால் போதும் வேலை நிமிஷத்தில் முடியும் எங்களுக்கு எல்லாருக்குமே அவங்களை கண்டால் ஒரு பயம் கலந்த மரியாதை அதிகம் .அவ்வளவு கேப்பபிளான பெண் அவங்க..ஒரு மனுஷனுக்கு இதெல்லாம் தான் முக்கியம் எந்த வகையிலும் நமக்கு கிடைக்கும் மரியாதைக்கும் பாசத்துக்கும் மேக் அப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.ஒரு ஸ்கூள்ள கூட பாருங்க தினசரி ஃபேஷன் ஷோக்கு வரும் டீச்சர்களும் உண்டு அவங்க மேல பிள்ளைகளுக்கே அவ்வளவு மரியாதை வராது அதுவே கண்டிப்பும் கடமையும் நிறந்த டீச்சர்களை பாருங்க பிள்ளைக தன்னையறியாம எழுந்து நிற்கும்..அத் ...து//...........நடுவரே அஜீத் ஸ்டைல்ல சொன்னா நாங்க ஒத்துக்குவோம்னு எதிரணி நினைச்சா அது தப்புங்க நடுவரே;-) பாருங்க அப்பவும் இயற்கையான அழகோடு பாசமா இருக்க மாட்டாங்களாம்...அவங்கள பாத்ததும் ப.......ய.......ம் கலந்த மரியாதை..!! மேக்கப் போடற டீச்சர்ஸ்கிட்ட கண்டிப்பு இல்லாம இருக்கலாம் ஆனால் கடமை தவறினவங்கன்னு சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன் நடுவரே! எப்படியெல்லாம் வீரவசனம் பேச வேண்டி இருக்கு அப்ப்ப்ப்ப்ப்பாஆஆ........இப்பவே கண்ணக்கட்டுதே சாமீ.............

நடுவரே

இந்த டெரர் மேக்கப் இல்லாம (டெரர் மேக்கப்புக்கு ஒப்பா இயற்கை அழகையும் எடுத்துக்கலாம்;-) ) ப்ளசண்ட் மேக்கப்போட வர டீச்சர் வரதுக்கு முன்னாடியே ரெக்கார்டு நோட்டெல்லாம் நீட்டா அவங்க டேபிள்ள உக்கார போட்டி போட்டுட்டு இருக்கும் நடுவரே! டீச்சர் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லும்போது அவங்க கண்ணம் சிவக்குதோ இல்லையோ எங்க மனம் சந்தோசத்துல பறக்கறத எந்த கவிஞானுலும் எழுத்துக்களால வடிக்க முடியாது நடுவரே!!

அதே டீச்சரோட ஹேண்ட்பேக்க வாங்க போட்டி வரும் பாருங்க ஆஹாஹா அதுல தெரியுதுங்க அன்பு பாசம் எல்லாம்;-)

நடுவரே

தன்னோட இயற்கை அழக காட்டி யாரையும்பயமுருத்தக்கூடாதுங்கற நல்லெண்ணத்தில பொதுநலத்தோடதான் மேக்கப்பே போடறாங்க..

தூங்கறதுக்கு எட்டு மணிநேரம் கூட கிடைக்காத இந்த அவசரக்காலத்துல நின்னு நிதானாமா யோகா கத்துக்க உன் முகம் பொழிவாகும்னா அது நான் ரிட்டயர்ட் ஆகும்போதுதான் நடக்கும் அது வரை பொழிவிழந்த முகத்தோடதான் ரோட்டுல நடமாடனுமா என்ன? அதுக்கு இப்போ கிடைக்கிற முகப்பூச்சு எவ்வளவோ தேவலை நடுவரே!

நடுவரே!

ஆண்கள் மாதிரி தலைமுடி இழந்ததும் ட்ரிம் பண்ணிட்டு நம்மாள நடக்க முடியாதே;( முன் தலைலை கொஞ்சம் அதிகமா முடிகொட்டினாக்கூட பாக்க சகிக்காதே அதுக்குதாங்க நாங்க கொஞ்சமா ஃபோர்மிங் பண்ணிக்கறோம். இருபது வயசுப் பொண்ணை இளநரையால தலைமுடியெல்லாம் நரைச்சு போயி மணவரையில உக்கார வைச்சா என்ன ஆகும் நடுவரே! கொஞ்சம் ஹேர்டையோ இல்லை ஹென்னாவோ போட கருணைக் காட்டுங்கோ நடுவரே!

Don't Worry Be Happy.

நடுவரே!

ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணின முடிக்கு தினசரி தலை சீவி சிக்கு எடுக்கனுங்கற அவதி இல்லை பாருங்க...தலைக்கு குளிச்சோமோ துவட்டினோமோன்னு போய்ட்டே இருக்கலாம். ஆனா இந்த இயற்கை அழகை மட்டுமே நம்பறவங்க பாடு பாருங்க அரைமணிநேரம் சிக்கு எடுத்து முன்னந்தலை முடி பறக்காம இருக்க அம்புட்டையும் வழிச்சு ஸ்லைடூசிகுத்தி இங்குட்டு திரும்பி அங்குட்டு திரும்பி எங்கனயாவது முடி எந்திரிச்சு டான்ஸ் ஆடுதான்னு பாத்து கிளம்பறதுக்குள்ள வெளியக் கிளம்பின மனுசன் ஷோபாமேலேயே உக்காந்து ஒரு குட்டி தூக்கம் போட்டுருவாங்க;-)

நடுவரே இப்படி கண்டபடி பின்குத்திறதுனாலதான் ரோட் ஆக்சிடண்ட்ல கூட கன்னாபின்னான்னு தலைகுப்புற விழும்போது தலையில ஏறி ஆபத்தில கொண்டு போய் விடுது..இந்தக் கஷ்டம் லேயர் கட்டிங்க்லேயும் ஸ்டெப் கட்டிங்க்லேயும் இல்லை பாருங்க ரஜினி ஸ்டெயில்ல அழகா கோதியும் விட்டுக்கலாம் அப்பப்ப;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்