தாய்பால் குடிப்பதில் பிரச்சனை.....

சகோதரிகளே என் குழந்தைக்கு தற்போது மூன்று மாதம் , எனக்கு 34 வாரத்திலேயே ஆப்பரேசன் செய்து குழந்தையை எடுத்தார்கள் ....ஏன் என்றால் எனக்கு வயற்றில் அம்னடிக் ப்லுஇட் என்ற திரவம் குறைந்துவிட்டது ,எனவே குறைமாத குழந்தை என்பதினால[ NICU ] INTENSIVE CAARE UNIT இல் வைக்க நேரிட்டது ....நாங்கள்
soudi arabia வில் இருக்கிறோம் ,வேலைக்கு ஆள்கிடைக்கவில்லை ....எனக்கு அம்மா இல்லை ...எனவே மாமியார் வீட்டுக்கு நான் போகமால் கணவருடனே இருந்து விட்டேன் ......மூன்று நாள் hospital லில் இருந்தேன் ..என்னுடைய கணவர் தான் கவனித்து கொண்டார் ....நான்கு நாட்கள் NICU வில் குழந்தையை வைத்து இருந்தார்கள் ...பின்பு தான் குழந்தயை வீட்டிற்கு எடுத்து வர நேரிட்டது .....நானும் என் கணவரும் வீட்டு வேலைகளை கவனித்தோம் .....

இ ப்போதுநானே எல்லா வேலைகளையும் செய்து கொள்கிறே ன் ........
பிரச்சனை என்னவென்றால் HOSPITALLIL இருந்த போது குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்து வி ட்டார்கள் ....எனவே குழந்தை என்னிடம் குடிக்கவில்லை ....எனவே டோக்டிரின் ஆலோசனைப்படி SIMLAC கொடுக்க ஆரம்பித்தேன் ...இ டைஇடையே என்னுடைய பாலையும் பம்ப் செய்து கொடுத்தீன் ....பிறகு இரண்டாவது மாதத்தில் சற்று வாய்வைத்து என்னிடம் குடிக்க ஆரம்பித்தான் ...சரி என்று ரொம்பவும் மகிழ்ந்தேன் .....ஆனால் பிரச்சனை முடியவில்லை என்னிடம் குடித்தும் அழுதுகொண்டே இருப்பான் ...நான் பால் பற்றவில்லை என்று நினைத்து உங்களிடம் எல்லாம் சொல்லிருக்கிறேன் ......ஆனால் பிறகு தான் புரிந்தது பாட்டலில் உள்ள ரப்பரை எவ்வாறு சப்புதோ அதே போலதான் சப்புகிறான் .....ஆழ்ந்து உறுஞ்சி குடிப்பதில்லை ......என்னுடைய பாலை பாட்டலில் எடுத்து வைத்து குடுத்தால் குடிக்கிறான் .....சகோதரிகளே வீட்டு வேலைகலை செய்ய வேண்டீருக்கிறதே ........எப்படி தொடர்ந்து எடுத்து வைத்தே கொடுக்க முடியும் ?என்ன செய்வது என்று புரியவில்லை அழுகை அழுகையாய் வருகிறது ...எப்படி நன்றாக உருஞ்ச வைப்பது ....அல்லது பவுடர் பாலை நிறுத்தி பார்க்கலாமா ?ஆலோசனை தாருங்கள் plz

ப்ளீஸ் யாராவது பதில் சொல்லுங்க

இது NICU வில் இருந்த பல குழந்தைகளுக்கும் வரும் பிரெச்சனை தான். நீங்க ஆரம்பத்திலேயே ஃபீடிங் பாட்டில் கொடுத்திருக்க கூடாது. அதை பழகிட்டா இது பழக கஷ்டமா இருக்கும். சரி பராவயில்லை விடுங்க... இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச ஒரே வழி... அழுதாலும் பரவாயில்லைனு நேரடியா ஃபீட் பண்ண ட்ரை பண்ணுங்க, 2 நாள் கஷ்டமா இருக்கும், அப்பறம் பழகிடும்.

இல்ல.. இன்னொரு வழி ப்ரெஸ்ட்’ல ஃபிக்ஸ் பண்ணி ஃபீட் பண்ண நிப்பில் கிடைக்கும். அது ஃபீடிங் பாட்டில் நிப்பில் போல தான் இருக்கும். இது போல் ஃபீடிங் பாட்டில் பழகின குழந்தைகளுக்கு இது பயன்படும். டாகடரை கேட்டா விளக்கமா சொல்லி கொடுத்து, எங்க கிடைக்கும்னும் சொல்லுவாங்க.

கவலை வேண்டாம்... கண்டிப்பா சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சொல்லுறது சரிதா கவனிக்க வேண்டியது என்னனா ஃபீடிங் பாட்டில ஓட்டை பெரிசா இருக்கும் பாலும் நிறைய வரும் இனி வாங்கும் பாட்டில ஓட்டை சிறிதா இடு automaticகா உன் பாலை குடீக்கும் நான் இப்படீ தான் செஞ்சேன் click ஆச்சு

உங்கள் வருத்தம் புரிகிறது,கவலை வேன்டாம்.சின்னகுழந்தை அதனால் அப்ப,அப்ப முயற்ச்சி செய்யவும்,அழுதாலும் பரவாயில்லை வாய்கிட்ட வைத்துபிழிந்து விடுங்க,அப்பொழுது அவன்குடிக்க முயற்ச்சி செய்வான். உங்கள் உடலைசுத்தமாக வைக்கவும்,அவனையும்.இதனைமுயற்ச்சி செய்துபாருங்கள் நன்மைக்கே பயம்வேன்டாம்,வாழ்த்துக்கள். என்றும் தர்ஷினிராம்.

--

தோழிகளே! என்னோட பிரச்சனை இதுக்கு அப்படியே மாறானது
நான் குழந்தை பிறந்தது முதல் தாய் பால் தான் கொடுக்கிறேன் இப்போது மகளுக்கு 6 மாதம் ஆகிறது இது வரை பார்முலா மில்க் எதுவும் கொடுக்க வில்லை இப்போது பாட்டிலில் தண்ணீர் கொடுத்தால் கூட குடிக்க மறுக்கிறாள் ஒரே அழுகை
இப்போது நான் பார்முலா மில்க் கொடுக்கலாம் என நினைக்கிறேன் அனால் பாட்டிலில் உள்ள சூப்பியை வாயில் வைத்தாலே ஓங்கறிக்கிறாள் வெளியில் சென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது பாட்டிலில் குடிக்க என்ன செய்ய வேண்டும்???

hai, yen kulandhayum indha madhiri dhan panna, arambathula ennoda pal pathama bottle ah kuduthom, appuram enakku sarianadhum kudikka mattenu adam pannina, appuram feedung bottle nipple madhiriya nammakita fix panni kudukura madhiri kedaikudhu, doctor kitta ketutu nalla branded ah vangi tru panni parunga, 20 days ku oru dhadava change pannidunga.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிவடைய போகிறது.என் குழந்தை இரண்டு நாட்களாக சரியாக பால் குடிக்க மறுக்கிறாள்.நான் முயற்சி செய்து கொடுத்தால் கை காலை வேகமாக உதைக்கிறாள்.சில நேரம் வாந்தி வருவது போல் செய்கிறாள்.நன்றாக பால் குடிக்க என்ன செய்வது தோழிகளே உதவுங்கள்

எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிவடைய போகிறது.என் குழந்தை இரண்டு நாட்களாக சரியாக பால் குடிக்க மறுக்கிறாள்.நான் முயற்சி செய்து கொடுத்தால் கை காலை வேகமாக உதைக்கிறாள்.சில நேரம் வாந்தி வருவது போல் செய்கிறாள்.நன்றாக பால் குடிக்க என்ன செய்வது தோழிகளே உதவுங்கள்

பழைய பால் கெட்டி இருக்கலாம்.. இப்போதே வெந்நீர் போட்டு இரண்டு மார்பகங்களிலும் பீச்சி விட்டு நன்கு குளித்து வாருங்கள்.

பால் ஊறியதும் குழந்தைக்கு கொடுங்கள்..

மேலும் சில பதிவுகள்