நான் கர்ப்பமா?

நான் தற்போதுதான் இதில் பதிவு செய்திருக்கின்றேன். இதில் இருக்கும் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்டு கொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றது. எனக்கு பீரியட்சிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றது. எனக்கு இதுவரை மாதவிடாய் மிக சரியாகவே வந்து விடுகின்றது. ஆனால் தற்போது எனது அடி வயிறு வழக்கத்தை விட அதிகமாய் கனமாய் இருப்பதை போன்ற உணர்வு இருக்கின்றது. வழக்கம் போல் என்னால் உட்காரவோ, தரையில் அமரவோ முடியவில்லை. மூச்சு திணறுவது போல் இருக்கின்றது. வழக்கத்தை விட அதிகமாய் சோர்வாய் இருக்கின்றது.

ஆனால் எந்த தடவையும் இல்லாத வகையில் இந்த தடவை அடி வயிறு வலி அதிகமாய் இருக்கின்றது. வயிறுக்குள் ஏதோ ஒரு தண்ணீர் இருப்பது போன்ற உணர்வு. ஏதோ ஒன்று குலுங்கி கொண்டே இருப்பது போன்ற புதிய உணர்வு தோன்றுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? நான் தற்போது என்னென்ன உணவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது கற்பத்தின் அறிகுறியா? தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றியுடன்....பால்சி

இப்பொழுது ஆகவில்லை.நீங்கள் முதலில் டாக்டரிடம் போய் செக்செய்து பாருங்கள் ..நீங்கள் தாய்மையாக எனது வழ்த்துக்கள்.ok.

இந்த அறிகுறிகளை வைத்து சரியாக சொல்ல முடியவில்லை. periods டேட்டில்இருந்து ஒரு வாரம் களித்து pregnency டெஸ்ட் செய்து பாருங்கள். ரொம்ப வயிறு வலித்தால் உடனடியாக டாக்டரை பாருங்கள், உடல் சூட்டின் காரணமாக வயிறு வலிக்கலாம். குளிர்ச்சியான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், விரைவில் தாய்மை அடைய இறைவனை வேண்டுகிறேன்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

fruits niraya sapidunga.sogai elam poidum.mor and night tiffin matum.aft noon sapadu.sila nerangalil elam fruits than. athan nalathu.sapida vendiya important fruit mathulai palam.by divyajothi

நான் முன்னமே ஒரு பதிவு போட்டேன்.... நான்கு நாள் கழித்து வந்து பார்த்தல் அந்த பதிவையே காணும்.....
என்னோட சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே
என்னக்கு நவம்பர் 25தேதி பீரியட்ஸ் ஆச்சு... எனக்கு இருபத்தி எட்டு நாள்ல ஆகிடும்.... இதுவரைக்கும் ஆகலை.... நான் 34vathu நாள் செக் பண்ணேன் நெகடிவ் வந்தது.... இன்று நாப்பதாவது நாள் ஆகுது... இன்று காலை செக் பண்ணேன் அப்போ ரொம்ப லேசா பிங்க் கலர்ல லைன் இருந்த மாதிரி இருக்கு.... சந்தேகத்துல டாக்டர் கிட்ட போனேன்.. அங்கயும் இதே மாதிரி தான் செக் பண்ணங்க.... அங்க நெகடிவ் சொல்றாங்க.... இப்போ நான் என்ன செய்றது.... ஒரே குழப்பமா இருக்கு

உங்களை தான் காணோம்னு தேடிகிட்டு இருந்தோம்... :) சரி விடுங்க மேட்டரை.

நீங்க டாகடரிடம் போய் ரத்த பரிசோதனை செய்யுங்க, இப்ப வேண்டாம் 45 நாளில். அதுவரை எதுவும் உருதியா நம்ப முடியாது. 45 நாளில் வெறு யூரின் டெஸ்ட் போதாது, ப்லட் டெஸ்ட் எடுக்கனும்.

நீங்க சொல்லி இருந்த வெள்ளை படுதல் அது இது எல்லாம் பீரியட்ஸ் தள்ளி போனா, இல்ல பீரியட்ஸ் நெருக்கத்தில் கூட இருக்கும். வேறு சில காரணத்தால் கூட வெள்ளை படலாம். எல்லாம் ஹார்மோன் பிரெச்சனை... அதனால் இதெல்லாம் குழப்பிக்காம ரிலாக்ஸ்டா இருங்க. 45 டேஸ்ல மீண்டும் செக் பண்ணுங்க. காலை first urine தான் சரியான ரிசல்ட் தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ வெள்ளை படுறது நின்று விட்டது.... பசி தான் அதிகமா எடுக்குது.... சாப்பிட கொஞ்சம் நேரம் ஆனாலும் வயிறு புரட்டுது வாமிட் வர மாதிரி ஆகிடுது

இப்போ உங்களுக்கு 45 நாட்கள் ஆயிருந்தா திருப்பியும் urine டெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் doctor ஐ போய் பாருங்க.CONFORM ஆக எனது வாழ்த்துக்கள்.

divya

இல்ல பா 40 நாள் தான் ஆகுது...?

தமிழரசி நீங்க இன்னும் ஒரு வாரம் கழித்து மீண்டும் செக் பண்ணி பாருங்கள். காலை எழுந்தவுடன் first urine ல டெஸ்ட் பண்ணி பாருங்க. இல்லேன்னா 10 நாள் கழிச்சு hospital போய் blood டெஸ்ட் பண்ணி பாருங்க, அது வரை ரிலாக்ஸ் ஆ இருங்க, நல்ல ரெஸ்ட் எடுங்க. healthy ஆ சாப்பிடுங்க,
சிலருக்கு 40 நாளில் confirm ஆ தெரியாது. எப்படி இருந்தாலும் 50 days ல டாக்டர் எ பார்த்து consult பண்ணிக்குங்க, positive result வர வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நன்றி..... வனிதா, DIVYA HARINI, karthikarani
நான் இன்னும் ஐய்ந்து நாட்கள் கழித்து செக் பண்றேன்....

நன்றி

மேலும் சில பதிவுகள்