"நச்" னு இருக்கணும்..

ஹாய் தோழீஸ்!!

ஒரே ஒரு உதவி பிளீஸ்... திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லவிருக்கும் ஓர் இந்து மணப்பெண்ணுக்கு என்ன மாதிரி பரிசு குடுக்கலாம்? எதிர் பார்க்காத மாதிரியும், விட்டிட்டு போக மனசு வராத மாதிரியும், "நச்" னும் இருக்கணும்.. அதுக்காக ஐடியா சொல்றன்ற பேரில என்னை பிச்சைக்காரி ஆக்கிடாதீங்கப்பா.. பிளீஸ்..
<!--break-->

அலறல் திவ்யா, எப்படி இருக்கீங்க? :) நீங்க கிப்ட்டோட பட்ஜெட் எவ்ளோன்னு சொல்லலை. அதனால எனக்கு தோணின ஐடியாவை சொல்றேன். வெள்ளில விளக்கு வாங்கி தாங்க. பூஜையறைல வச்சு பூஜிக்கும் போதெல்லாம் உங்களையும் நினைப்பாங்க. எப்படி ஐடியா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா சொன்ன மாதிரி விளக்கு வங்கி கொடுங்க., அதும்
காமாட்சி விளக்கு, இன்னும் அழகா இருக்கும்
photo frame
வெளிநாடு என்றால் அவங்களுக்கு அந்த ஊரு dress like t-shirt, jeans, cut-shoes
இதெலாம் எனக்கு தோணுது..., இன்னும் தோனிச்சுனா சொல்றேன்

அன்புடன் அபி

மோதிரம் வாங்கி கொடுங்க.;-)வெளிநாட்டுக்கு போறவங்க என்றால் கூடுமானவரை பெரிய பொருட்களை தவிர்த்துடுங்க .

அவர்களின் ரசனையை புரிந்து, கலைப் படைப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாயின்
அவர்களின் பெட் ரூமில் வைக்க கூடியதாக அழகான அளவான ராமர்-சீதை சிலை
வாங்கி கொடுக்கலாம். அல்லது லவ் birds படங்களும் நல்லாயிருக்குமே

கருத்தான பதில்களுக்கு மிக்க நன்றி தோழீஸ் ... கல்ப்ஸ், தளிகா மேடம் நலமா? உங்களை அலற வைச்சேன்றதுக்காக என்னை நடுத்தெருவில நிக்க வைக்கப்பாக்கிறீங்களே.. வெள்ளி குத்து விளக்கு எவ்வளவு னு தெரியல.. பட் நிச்சயம் என் பட்ஜட்டுக்கு கட்டுப்படியாகாது.. அத்தோட எனக்கு 20 வயது தான்.. என் வயதுக்கு ஏத்த மாதிரியும் பட்ஜட்டுக்கு ஏத்த மாதிரியும் கூலா ஒரு Gift ஐ சொல்ல சொன்னா.. மோதிரம், வெள்ளின்னு இப்ப நீங்க தான் அலற வைக்கிறீங்கப்பா... அபிராமி மேடம், Esan sir, உங்க ஐடியாஸ் ஓகே.. ஆனா abroadக்கு கொண்டு போறதோட, எங்க செலெக்ஷன்ஸ் அவங்களுக்கு பிடிக்குமான்னு உறுதியா சொல்ல முடியாதே.. உங்கள் கருத்துகளை குறை சொல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்.. நான் கொடுத்த விவரம் போதவில்லைன்னு நினைக்கிறேன்.. ஆனாலும் ரொம்ப நன்றி.. இன்னும் உங்கள் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

வெளிநாடு சென்று குடியேரும் மணமக்களுக்கு அவர்களின் பெற்றோரே ஆல்மோஸ்ட் எல்லா பொருள்களையும் வாங்கி விடுகிறார்கள். மணமகள் வீட்டில் நகைகளும், வெள்ளிப்பொருள்களும், கிச்சன் அப்லையன்சும் சீராக கொடுத்துவிடுகிறார்கள். ஒரேவிதமான பொருளை பலர் பரிசளிப்பதால் அந்த பொருளும் பயனற்று போகிறது, நமது பரிசும் மதிப்பற்று விடுகிறது. அதனால் நாம் கொடுக்கும் பொருள்களை பரணில்தான் போடுவார்கள்.
1.மணமக்கள் வீட்டாரிடம் "அவர்கள் லிஸ்டில் உள்ள பொருள்களை தெரிந்து கொண்டு அதில் எது உங்கள் பட்ஜெட்டில் அடங்குமோ அதை நீங்கள் பரிசளிப்பதாக முன்னமே கூறிவிடலாம்"
2. கோல்ட் காயினாக வாங்கிக் கொடுக்கலாம். (மினிமம் 2கிராம் செய்தால்தான் கௌரவம்,அதனால் இன்று தங்கம் விற்கும் விலையில் இதை ஆப்ஷனில் வைக்கலாம்).
3. மணமகளிடமே பேசி அவருக்கு விருப்பமான பொருளை வாங்கிக் கொடுக்கலாம்.(அ) மேக்கப் செட் , விதவிதமான ஹேர் க்ளிப்ஸ் செட் , மாடர்னான ஹேங்கிங் காதணி செட், விதவிதமான ஹீல்ஸ் காலணிகள் வாங்கிக் கொடுக்கலாம்.( இவையெல்லாம் பெண்களுக்கு எவ்வளவு இருந்தாலும் ஓ.கே தான்,அதுமட்டுமில்லாமல் தினமும் பயன்படுத்தக்கூடியதும் கூட.),காலணியெல்லாம் சபையில் கொடுக்க வேண்டாம், மணப்பெண்ணை தனியாக சந்தித்துக் கொடுக்கலாம்.
4. மொய்ப்பணமாக கொடுத்துவிடலாம்.(இதுதான் பெஸ்ட்)

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

சிறிய விநாயகர் பொம்மை அல்லது சிரிக்கும் புத்தா(laughing Buddha) சிலை, வெள்ளி குங்கும சிமிழ், குந்தன் ஜுவல் செட்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

போட்டோ பிரிண்ட் பண்ண t shrit குடுங்க. நீங்க நண்பர்களா சேர்ந்து இருக்கிற போட்டோ பிரிண்ட் பண்ண tshirt ஒ அல்லது மணமக்கள் போட்டோ பிரிண்ட் பண்ண tshirt ஒ குடுங்கள், மணமக்கள் போட்டோ செலக்ட் பண்ணும் பொது மணமக்கள் மேக்கப் ல இருக்கிற போட்டோ செலக்ட் பண்ணாதிங்க, casuala , coola , style ஆ இருக்கிற மாதிரி போட்டோ செலக்ட் பண்ணுங்க. இல்லேன்னா பொண்ணு போட்டோ பிரிண்ட் பண்ணது மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை போட்டோ பிரிண்ட் பண்ணது பொன்னுக்கும் குடுங்க. செலவு ரொம்ப ஆகாது. ஒரு tshirtku அதிகபட்சமா Rs 300 குள்ள தான் ஆகும். different ஆ இருக்கும், ஊருக்கு போகும் பொது கண்டிப்பா கையோட எடுத்துட்டு போவாங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய் divya எப்படி இருக்கிங்க.நான் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.முதலில் அவர்களது ரசனை என்னஎன்று தெரிந்துக்கொண்டு அதற்கு எற்றார்போல் வாங்குங்க,அன்பளிப்பை தாருங்கள்.அவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.துணி என்றால் விரைவில் அதற்கு மதிப்பில்லாமல் போகும்.

பில்லோ கவர் ல அவங்களோட போட்டோ print பண்ணி, பில்லோ ரெடி பண்ணி தாங்க. நிஜமாவே யாருமே தந்து இருக்க மாட்டாங்க. ஒரு பில்லோ பட்ஜெட் 300 -400 வரும். உங்களையும் கண்டிப்பா மறக்க மாட்டாங்க. ரொம்ப வித்தியாசமா இருக்கும்.

விருப்பபட்டால் காபி மக் ல அவங்க போட்டோ போட்டு தாங்க, ரொம்ப சந்தோஷ படுவாங்க

அழகான ஆயில் பின் பண்ணி தாங்க, தோகை விரித்தாடும் மயில், சூரிய உதயம், தஞ்சாவூர் கோவில் கோபுரம் (3D painting) இது மாதிரி நிறையா விதம் இருக்கு. Frame பண்ணாம அப்படியே வால் ல மாற்ற மாதிரி இப்ப நிறையா மாடல் இருக்கு. நீங்க செலக்ட் பண்ற picture ல தான் விசியமே இருக்கு.

Electronics பொருள் தருவது எல்லாம் வேஸ்ட்ன்னு நினைக்கறேன், அங்க எல்லாமே கிடைக்கும். சின்ன பொருளா இருந்தாலும் நினைச்சு நினைச்சு சந்தோஷ படனும்.

tshirt நல்ல சாய்ஸ் தான், ஆனால் நம் மக்கள் அவங்க போட்டோ tshirt போடணும்ன்னா, கொஞ்சம் வெக்க படுவாங்க(வெக்கம்ன்னா - அவங்க போட்டோவ அவங்களே போடறக்கு சங்கோஜமா பீல் பண்ணலாம்), ஒரு மாதிரி கஷ்டமா பீல் பண்ணுவாங்க. எதை வைத்து சொல்றேன்னா, நான் என் பாரின் பிரண்ட்ஸ் க்கு பண்ணி, பின்னாளில் தான் இந்த உண்மை தெருஞ்சுது. ஒருவேலை உங்க தோழிக்கு பிடிக்கும்ன்னா, தாராளமா பண்ணித்தாங்க......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்