கனவு காணலாம்...வாங்க கனவு காணலாம்......ஏவுகணை தந்தை அப்துல் கலாம் போல கனவு காணலாம். கனவு அனைவருக்கும் வரும் ஒன்று. அப்படி நாம் சிறு வயது முதலே கனவு காணுவது பெரியவரானதும் நாம் டாக்டர் ஆகணும், இன்ஜியர் ஆகணும், டீச்சர் ஆகணும் என்று தான். ஆனாலும் அப்படி யாருமே இல்லை பெரும்பாலானோர் ஏதோ ஒரு (கேரியர் சம்மந்தமான) கனவை கண்டுவிட்டு இப்பொழுது வேறு ஏதோ வேலை செய்துக் கொண்டிருப்போம். நாம் சிறு வயதில் என்னவாகனும் என்று கனவு கண்டோம் அந்து எந்த அளவில் பலித்துள்ளது. அல்லது பலிக்க வைக்க என்ன நாம் செய்தோம் என்ன செய்திருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
//கனவு பற்றி அறுசுவையில் ஏற்க்கனவே பேசியிருக்கிறார்கள். அதன் லிங்க் இதோ......http://www.arusuvai.com/tamil/node/14381?page=1
நன்றி இமா ;)//
டீச்சர் கனவு
எனக்கு சின்ன வயசில் எல்லாம் நீ என்னவாகனும் என்று யாராக கேட்டால் என்னகாவே இது தான் என்று சொல்லவே தெரியாது. அப்புறம் அம்மா நீ டாக்டர் ஆகுரியா என்று கேட்டு கேட்டு ஒரு வேளை நாம் பெரியவளானதும் அது தான் ஆகும் போல என்று அதற்க்கப்புறம் இருந்து எப்பவுமே யார் கேட்டாலும் டாக்டர் ஆகணும் என்று சொல்ல ஆரம்பித்தேன். என்ன தான் அப்படி சொன்னாலும் சின்ன வயசிலிருந்தே எனக்கு கம்பு எடுத்து சுவற்றில் எதாவது எழுதி தட்டி தட்டி பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் விளையாட்டு தான் ரொம்ப பிடிக்கும். எப்பொழுதும் ஒரு சின்ன துண்டை எடுத்து தாவணி போல சுத்திக் கொண்டு ஒரு குச்சி ஒன்னு வெச்சிகிட்டு தரையை தட்டி தட்டி பாடம் சொல்லி கொடுப்பேன். ஒண்ணுமே இல்லாத திண்ணைக்கே காடு கத்தலாய் பாடம் எடுப்பேன். அப்புறம் சின்ன பசங்க கிடைச்சாங்கனா அவ்வளவு தான். அவங்க அழுவுற வரையிலும் எடுத்துட்டு தான் விடுவேன். ஒரு கால கட்டத்தில் என் அப்பாவுக்கே ரொம்ப கோவம் வந்து என்ன எப்போ பார்த்தாலும் டீச்சர் விளையாட்டு என்று திட்டுவார். இருக்காதா பின்ன இங்கே அப்போ தான் திட்டு வாங்கிருப்பேன் உடனே ஒரு கம்பெடுத்து பாடம் நடத்துறேன்னு சொல்லி என் கோவத்தை எல்லாம் தூண் மேலையும் தரையிலும் காட்டுவேன். அப்போ ஆரம்பிச்சது தாங்க எனக்கு கோவம் வந்தால் மத்தவங்க மேல (அதுவும் எனக்கு நெருக்கம் உள்ளவங்க) காட்டறேன். அப்புறம் பெரியவள் ஆனதும் எனக்கு டீச்சர் வேலையே வெறுத்து போனது வேற விஷயம். இந்த கனவும் மெய்ப்படவில்லை. இதே மாதிரி கேரியர் சம்மந்தமான பல கனவுகள் இருந்தது. இன்னமும் இருக்கு. மீண்டும் வந்து சொல்றேன். நீங்களும் சொல்லுங்க.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
இந்த டீச்சரோட கனவு
;) ஹாய்! ஹாய்! ஹாய்!
தலைப்பைப் பார்த்துட்டும் பார்க்காமல் போக முடியல. ;) என் கனவை.... முன்னால படிச்சுப் பார்க்காதவங்க.... இந்த லிங்க்ல ( http://www.arusuvai.com/tamil/node/14381?page=1 ) போய்... உள்ள இன்னொரு லிங்க் இருக்கும், அதுல சொல்லி இருக்கேன். படித்து இன்புறுக. ;))
சின்னதுல இருந்தே சங்கீதம் நடனம்லாம் கத்துக்கணும் என்று ஆசை இருந்துது. இப்போதான் நிறைவேறுறதுக்கு தருணம் அமைஞ்சிருக்கு. சுகி டான்ஸ் சொல்லித்தரேன்னிருக்காங்க. (இப்போ அவங்களுக்கு குருதட்சணையா 'மயில் ஆயில்' தேடிட்டு இருக்கேன். கிடைச்சதும் க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிரும்.) ரேவ்ஸ் பாட்டுக் க்ளாஸ் எடுக்க ஒப்புக் கொண்டிக்காங்க.
என் நிறவேறாத ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற உதவிவரும் அறுசுவைக்கு கோடானுகோடி நன்றிகள். ;))
ரெண்டு அரங்கேற்றத்துக்கும் இன்விடேஷன் அனுப்புறேன், எல்லோரும் மறக்காம வந்து வாழ்த்தி ஆசீர்வதிக்கணும், சொல்லிட்டேன். இல்லேன்னா... அப்றம் சொர்ணாக்கா வேலையைக் காட்டிருவேன். ம். ;))
- இமா க்றிஸ்
இமா டீச்சர் வணக்கம்
வாங்க வாங்க....எப்படி இருக்கீங்க???......ரொம்ப நாள் ஆச்சு உங்களின் பதிவை பார்த்தே....(உஷ்ஷ் ஷ்......நானும் ரொம்ப நாளா வரவேயில்லையாக்கும்....)....ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அறுசுவையில் டான்ஸ் க்ளாஸ் பாட்டு க்ளாஸ் எல்லாம் வேற எடுக்குறாங்களா? லிங்க் எதாவது இருக்கா? இல்லை தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா? க்ளாஸ் சேர எதாவது விசேஷ தகுதி வேணுமா? எனக்கு இடம் இருக்கா?
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
லாவண்யா நல்ல ஒரு இழை....
லாவண்யா நல்ல ஒரு இழை ஆரம்பிச்சிருக்கிங்க ...என் கனவு சின்ன வயசு முதலே ஒரு பெரிய பாடகியாகணும்கிறதுதான் .எம்.எஸ் .சுப்புலட்சுமி, எம்.எல். வசந்த குமாரி எல்லாம் பார்த்து ஒரு கற்பனையே பண்ணி வெச்சிருந்தேன்.ஹ்ம்ம்...கல்யாணத்துக்கு பிறகு குடும்பம், குழந்தை, வெளி மாநில மாறுதல் என்று எல்லாம் கனவாகவே நின்று விட்டது.இன்னொரு பிறவி கிடைத்தால் அதிலாவது ஒரு சிறந்த பாடகியாகி எல்லோரையும் இசையால் கட்டிப்போட ஆசை!!
இமா...பாட்டு கிளாஸ் ஆரம்பிக்கும்போது எனக்கும் ஒரு அழைப்பு அனுப்பிடுங்க!! சேர்ந்து பாடி ஜமாய்ச்சிடுவோம்!!
ஆமாம்....அது என்ன சொர்ணாக்கா வேலை? புரியலையே!!
என் கனவு
அன்பு லாவண்யா... என்னை பற்றி தான் தெரியுமே உங்களுக்கு :) இருந்தாலும் நீங்க கேட்டுட்டீங்க, அதனால் சொல்லியே ஆகனும். நான் ஒரு காலத்தில் துவங்கிய இழை, இன்று லாவண்யா புதுபிச்சிருக்காங்கன்னா... பதிவிடாம விட முடியுமா???
எனக்கு ஒரே கனவுன்னு எப்பவும் இருந்ததில்லை. அப்பப்போ என் கனவுகள் அப்டேட் ஆயிடும். பள்ளி காலத்தில் டீச்சர் கனவு. கல்லூரி முடிக்கும் வரை ஹாஸ்டலில் தமிழ் மீடியம் முடிச்சு வந்த தோழிகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது, கல்லூரியில் செமினார் எடுப்பது என நிஜமானது.
கல்லூரி படிக்கும் காலத்தில் கனவு TCS... TCS... TCS. ஏனோ அந்த கம்பெனி மேல சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு. படிப்பை முடிச்ச கையோட சென்னை வந்து 3 மாத போராட்டத்துக்கு பின் அந்த கனவும் நினைவானது.
3 வருடத்துக்கு பின் கல்யாணம் என்ற ஒன்று உள்ள நுழஞ்சப்போ கம்பெனி கனவு காணாம போயிருச்சு. 1 வருஷம் எந்த கனவும் இல்லாம வாழ்க்கை போகும் போக்கில் தான் இருந்தேன். என் மகள் பிறந்த கையோடு கனவு மீண்டும் வந்துடுச்சு. சக்சஸ்ஃபுல் பிசுனஸ் விமன் ஆகனும். அது எந்த மாதிரி பிசுனஸ்... ஏதுன்னு நிறைய ஐடியாஸ் இருந்தாலும், இப்போதைக்கு எல்லாம் எனக்குள்ளே குழப்பத்திலேயே இருக்கு. ஆனா கனவு மாறாது. பிசினஸ்ன்னு முடிவு பண்ணும்போதே அது முழுக்க என்னுடையதா, என் சொந்த முதலீடு, சொந்த உழைப்புன்னு கனவு வந்துருச்சு. இதுவும் ஒரு நாள் நினைவாகும்... அன்று அறுசுவையில் நிச்சயம் பதிவிட்டு சொல்வேன், இப்படி ஒரு கனவு நினைவாச்சுதுன்னு :)
எல்லாரும் வாழ்த்திடுங்க இப்பவே... கனவு மெய்ப்பட :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் லாவண்யா,
This is good blog.
எனக்கும் நிறைய கனவுகள்.காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிகிட்டே இருக்கும்.
சின்ன வயசு படிக்கும் போது நல்லா படிப்பேன்.so state first வாங்கனும்னு கனவு கண்டேன்.அது நடக்கல.Then இன்ஜினியரிங் Anna university ல தான் படிக்கணும் நு நெனச்சேன்.நான் கேட்ட பிரான்ச் கிடைக்கல.So அதுவும் நடக்கல.பட் காலேஜ் படிக்கும் போதே TCS தான் பெரிய கனவு. அது நடந்துடுச்சு.அதனால தான் TCS விட்டு போகணும்னு இது வரைக்கும் நினைச்சதே இல்ல.
என்னோட வாய்ஸ் அண்ட் தமிழ் pronounciation ரொம்ப நல்லா இருக்கும் நு எல்லோரும் சொல்வாங்க .சோ அப்போ இருந்து நிறைவேறாத ஒரே கனவு நான் News Reader ஆகணும் என்ற கனவுதான்.
எப்பவும் எதாவது சாதிக்கணும் நு பேசிகிட்டே இருப்பேன்.But after marriage Not able to concentrate on anything bcs of some problems.
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
நல்ல தலைப்புங்க, எனக்கு
நல்ல தலைப்புங்க,
எனக்கு ஐரோப்பிய நாடு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடனும். இப்படி ஒரு கனவு. எதாவது ஆங்கில படம் பாத்து அதுல இந்த மாதிரி ஒரு சீன் பாத்துட்ட போதும் எனக்கும் ஆசை வந்துடும் .
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
நல்ல தலைப்புங்க, எனக்கு
நல்ல தலைப்புங்க,
எனக்கு ஐரோப்பிய நாடு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடனும். இப்படி ஒரு கனவு. எதாவது ஆங்கில படம் பாத்து அதுல இந்த மாதிரி ஒரு சீன் பாத்துட்ட போதும் எனக்கும் ஆசை வந்துடும் .
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
kaana kaanum kalangal
ஸ்கூல் படிக்கும் போது எனக்கு prime minister ஆகணும்னு ஆசை இருந்தது. கிளாஸ் டாப்பர்ஸ் நேம் போர்டு ல எழுதுவாங்கள்ள அப்போ நான் என் பேருக்கு பின்னால PM நு எழுதி வச்சிட்டு வந்திருவேன். blackboard ல, notebooks ல எல்லாம் கார்த்திகாராணி நு என் பேரை எழுதி பின்னாடி PM எனு எழுதிகுவேன். வீட்லேயும் எல்லார்கிட்டேயும் நான் P M ஆவேன்னு சொல்லிட்டே இருப்பேன். அவங்களும் அதை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக்கிட்டு நமக்கு அரசியல் எல்லாம் ஒத்து வராது அரசியல் கு போனா ரொம்ப கஷ்டபடனும், அசிங்கபடனும், அப்புறம் யாரும் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டங்கன்னு பயந்து போய் அட்வைஸ் பண்ணுவாங்க(!!!!).
ஆனா என் தம்பி மட்டும் நீ prime மினிஸ்டர் ஆகா மாட்ட பிச்சைக்கார மினிஸ்டர் தான் ஆவேன்னு ஒட்டுவான். வெள்ளிகிழமை இவளை கூட்டிட்டு போய் மந்திரிசிட்டு வாங்கன்னு solluvaan. ஏன் உனக்கு கவுன்சிலர் , MLA இந்த மாதிரி சின்ன சின்ன ஆசையெல்லாம் இல்லையா, ஆனா primeminister தான் ஆவியானு கிண்டல் பண்ணுவான். நான் அதுக்கு ஆசைபடர்துன்னு முடிவான அப்புறம் எதுக்கு இந்த சின்ன சின்ன ஆசையெல்லாம் , always think big நு பந்தா பண்ணுவேன். அதுக்கு அவன் உன் ஆசை நடக்கவே நடக்காது, நான் நினைக்கிறது தான் நடக்கும், உன்ன ஒரு வறபட்டிகாட்டுல கட்டிக்குடுத்து, நீ அங்க சாணி தட்டிகிட்டு இருப்ப, அப்போ நான் உன்ன பார்க்க வரும்போது தம்பி என்ன காப்பாத்துங்க, நீங்க தான் என் தெய்வம் அப்படின்னு கெஞ்சுவா அப்படின்னு பீலா விடுவான், நல்லவேளை தப்பிச்சேன்டா சாமி , அவன் ஆசை நடக்கவே இல்லை. சாணி கையோட நினைச்சு பார்க்கவே முடியல. (தேங்க்ஸ் லாவண்யா இதெல்லாம் திருப்பி நினைச்சு பார்க்க வச்சதுக்கு)
என் ஆசையும் நடக்கல, ஆசை தான் இருந்தது ஆனா அதுக்கு எந்த முயற்சியும் எடுக்கலை, அதெல்லாம் வேலைக்கி ஆவாதுன்னு அப்பவே தெரிஞ்சு போச்சு. ஆனா இப்பவும் பொலிடிக்ஸ் நியூஸ், நிகழ்வுகள் எல்லாம் interesta பார்ப்பேன், (பார்கிரதொட சரி)
சீரியஸ் ஆ ஒரு கனவு இருந்தது. நல்ல படிச்சு , நல்ல வேலைக்கு போய், லைப் ல சூப்பரா செட்டில் ஆகி, எல்லார் முன்னாடியும் நல்லா வாழ்ந்துகாடனும்னு. அது நிறைவேறிடுச்சு. இப்போ ஒரு successful entrepreneur ஆகனும்னு ஒரு கனவு இருக்கு. 2 பிசினஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அது சம்பந்தமா datas collect பண்ணிட்டு இருக்கேன். இப்போ உடனடியா ஸ்டார்ட் பண்ண முடியலைன்னாலும் இன்னும் ஒரு 3 வருசத்தில கண்டிப்பா நடக்கும்.
சோசியல் சர்வீஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு. இப்போ நேரடியா பண்ண முடியல, ஆனா என்னால முடிஞ்ச வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது பண்ணுகிறேன்.
இன்னும் ஒன்னு ரெண்டு கனவு இருக்கு, திருப்பி வந்து சொல்றேன்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
கனவு பலிக்கும்
என் கனவை பற்றி சொல்றேன் கேட்டுக்கோங்க..
சின்ன வயசில் இருந்தே cliche' பாடல்கள் மேலே ஒரு தனி ஈர்ப்பு..
அதாங்க..ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகற பாட்டு..கடைசியாக ஒரு swivelling chair -இல் ஒரு closeup turn ஷாட்டில் நிறைய போன் வைத்து பேசுவாங்களே..அது போலே வரணும்னு..
இந்த பீல்டில் தான் போகணும்னு நினைச்சது இல்லை..இப்போ எதை பண்ணுறோமோ அதிலே சிறப்பா வரணும்னு மட்டும் தான் நினைப்பேன்..
அம்மாவும்,அப்பாவும் அரசு வேலைக்கு போகணும்,மற்றவங்களுக்கு உதவி செய்யுற career க்கு போகணும்னு சொல்வாங்க.அம்மா கொஞ்சம் அழுத்தி சொல்வாங்க,அப்பா சுதந்திரமா விட்டுடுவார்..
என் குடும்பத்தில் நிறைய teachers இருக்காங்க.சின்ன வயதில் புரியாம வெறுத்தும் இருக்கேன்,
அப்புறம் illiterate enlightment கேம்ப்க்கு ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டு போனாங்க.அங்கே நாங்களும் one -to -one basis -இல் எழுத்து,கையெழுத்து போட சொல்லி கொடுத்தோம்.என் கிட்ட ஒரு அக்கா வந்தாங்க,சுமதி என்று எழுத சொல்லி கொடுத்தேன்.அப்போ அவங்க ரொம்ப மகிழ்ச்சியாகிட்டாங்க..அப்போ தான் தெரிஞ்சுது,என் உடம்பிலேயே டீச்சர் இரத்தம் ஓடுதுன்னு,அப்புறம் 1 வாரம் கழித்து ஊருக்கு வரும் போது அவங்க தோட்டத்தில் இருந்து கத்திரிக்காய்,கீரைத்தண்டு,பச்சைபயறு,கனகாம்பரம் பூ தந்தாங்க..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.வரும் போது என் friends ஓட்டினது வேற கதை..
அப்புறம் நிறைய வாசிப்பேன்,அதனாலே journalism படிக்கணும்னு நினைச்சேன்.டாக்டர் ஆகணும்னு நினைச்சு biology குரூப் எடுத்தேன்,முதல் நாளே zoology லேபில் வாந்தி..;)
அதோட BDS government seat கிடைத்தும் போகலே..:D
maths ரொம்ப பிடிக்கும்,கூட எல்லாவற்றையும் clear செய்யவும்,மேற் படிப்பு படிக்கவும் உதவும்னு ug பண்ணேன்.அப்போ நிறைய செமினார்,classes எல்லாம் எடுப்போம்.நிறைய பேர் சொல்வாங்க நீ நல்லா சொல்லி தரேன்னு..ஒரு முறை கல்லூரியில் standing ovation கிடைச்சது.அப்போ தான் எனக்கே புரிஞ்சது..
அப்புறம் PG final-பண்ணும் போதே கல்யாணம்,placement வந்தும் போகலே..என் கணவர் எப்படியும் வெளிநாடு போகணும்னு சொன்னார்,அப்புறம் சில பல கசமுசா..அப்புறம் ஒரு வழியா,lecturer வேலைக்கு போனேன்.ரொம்ப சந்தோஷமா இருந்தது.பசங்களும் எனக்கு நல்ல cooperate பண்ணாங்க, நல்ல percentage கொடுத்தாங்க..resign பண்ணும் போது கஷ்டமாதான் இருந்தது.இப்போவும் அவங்களோட நல்ல தொடர்பில் இருக்கேன்.அவங்க நல்ல வேலையில் இருப்பதை கேட்கும் போது நானே போன மாதிரி இருக்கு.வேறென்ன வேணும்?
ஆனால் இன்னும் cliche ' song பார்த்தால் யோசிப்பேன்.அது போலே ஒரு நாள் ஆகனும்னு..வீட்டில் கடைசியா கன்னி ராசி படத்தில் வந்த பிரபு கதை ஆக போகுது பாத்துக்கன்னு சொல்வாங்க..
அதுக்கெல்லாம் கவலை பட்டா எப்படி?
இப்போ பெஸ்ட் அம்மாவாக இருக்கணும்னு கனவு காண்கிறேன்.
முயற்சி செய்யுறேன்.
முடியலே..முடியலே ..;(
நிறைய பேர் வந்து சொல்லுங்க,வந்து கனவை பற்றி சொல்வபவர்களுக்கு காண்கிற கனவு பலிக்கும்னு ஆத்தா வந்து கனவில் சொல்லிருச்சு..சீக்கிரம் வாங்க..வந்து சொல்லுங்க..
இழை வெற்றி பெற வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா